+2 பொருளியல் பாடத்தில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!



+2 பொதுத் தேர்வு டிப்ஸ்              

பொதுத்தேர்வு தேதிகள் 10ம் வகுப்பு, +1, +2 மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நேரம் இது. +2 பொருளியல் பாடத்தை பொறுத்தவரையில் நன்கு திட்டமிட்டு எந்தெந்தப் பாடங்களைப் படித்தால் முழு மதிப்பெண் மிக எளிமையாகப் பெற முடியும் என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.

“மாணவர்களில் பலரும் நினைப்பது எளிமையாக படித்து எப்படி வெற்றி பெறுவது. அடுத்து நிறைய மதிப்பெண்கள்  பெறுவது எப்படி? நாம் பொருளியல் பாடத்திலும் சென்டம் எடுக்க முடியுமா? என்றெல்லாம் மனதில் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள். அந்தக் கணக்கு சாதகமாக அமைய குறிப்பிட்ட சில பாடங்களைப் படித்தாலே முழு மதிப்பெண் பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் முதுகலை ஆசிரியர் K.பாஸ்கரன். அவர் தரும் டிப்ஸ்…

“முதலில் வினா வரைவுத்தாள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். பிறகு பாடப்பகுதியின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் மட்டுமில்லாமல் கூடுதல் வினாக்கள் (3 மதிப்பெண் வினா) கேட்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். இவற்றில் 10 மதிப்பெண் வினாவிற்கு சம்பந்தப்பட்ட வினாவினை தேர்வு செய்து அதில் வரக்கூடிய சிறிய தலைப்புகள் மட்டும் விடையளிக்கக்கூடிய வகையிலும் வினாக்கள் கேட்கப்படும்.
வினா வரைவுத்தாள்

இந்த வினாத்தாள் வரைவின்படி 3 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தமட்டில் 1 முதல் 7 பாடங்களில் உள்ள வினாக்களும், மற்ற பாடங்களில் உள்ள பாடம் 9-ல் நீர்மை விருப்பக் கோட்பாட்டின் மூன்று நோக்கங்கள் யாவை?

*உண்மைக் கூலிக்கும், பணக்கூலிக்கும் உள்ள வேறுபாடு யாது?
பாடம் 10ல் பெருக்கி குறிப்பு வரைக.
*உறுதித்தேவை என்றால் என்ன?
பாடம் 11ல் பணத்தின் இலக்கணம் யாது?
*பண அளிப்பின் நான்கு கூறுகள் யாவை?
பாடம் 12ல் ஆடம்ஸ்மித்தின் புனித வரி விதிகளைக் கூறுக.
*வரி விகிதங்கள் என்னென்ன?

போன்ற வினாக்களையும் படிக்க வேண்டும். இந்த மூன்று மதிப்பெண் வினாக்களில் 15 வினாக்கள் கேட்கப்படும் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.10 மதிப்பெண் வினாவினைப் படிப்பதற்கு பாடம் 7, 10, 12ல் இருந்து தலா இரண்டு வினாக்கள் வீதம் கேட்கப்படும். இந்தப் பாடப்பகுதியில் உள்ள 15 வினாக்களை மட்டும் நன்கு படித்தால் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கலாம்.

இதில் 10 வினாக்கள் கேட்கப்படும் 6 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். முக்கிய வினாக்கள் படிப்பதற்கு எளிமையாக உள்ள பாடம் 2ல் உள்ள வினா எண் 27, 28, 29, பாடம் 5ல் உள்ள வினா எண் 26, 27, 28, பாடம் 6ல் உள்ள வினா எண் 26, 27, 28, பாடம் 8ல் உள்ள வினா எண் 28, இவற்றைப் படித்தால் சுலபமாக விடை அளிக்கலாம்.

20 மதிப்பெண் வினாக்களைப் படிப்பதற்கு நன்கு தெரிந்த  பாடங்களை மூன்று மட்டும் தெரிவு செய்து படித்தால் போதும். பாடம் 3, 4, 8-ல் உள்ள பாடத்தில் மொத்தம் 13 வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இதை மட்டும் திரும்பத் திரும்ப நன்றாக படித்து வரைபடம் வரைந்து பயிற்சி பெற்றாலே போதும். இந்தப் பாடத்திலிருந்து தலா 1 வினா கேட்கப்படும். அப்போது 3 வினாவிற்கு விடை அளித்துவிடலாம்.

20 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரையில் பாடம் 1, 3, 4, 8, 9, 11 இவற்றிலிருந்து தலா 1 வினா கேட்கப்படும். இதில் 6 வினாக்கள் கேட்டு 3 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இதில் எளிமையாகவும், முழு மதிப்பெண் பெறுவதற்கும் உகந்த பாடம் 3, 4, 8 ஆகும். மேலும் வரைபடம் உள்ள வினாக்களைத் தேர்வு செய்து படித்தால் முழு மதிப்பெண் கிடைக்கும்.வரைபடங்களைப் பலமுறை வரைந்து பயிற்சி எடுக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மாணவர்களாக இருந்தால் பாடம் 1, 4, 11ல் உள்ள 20 மதிப்பெண் வினாக்களைப் படிக்கலாம். பாடம் 1ல் வினா எண் 34, 35 அடிக்கடி கேட்கப்படும் வினா. மேலும் ஒரு மதிப்பெண் வினாவிற்கு 12 பாடங்களில் உள்ள அனைத்து வினாக்களையும் படிக்க வேண்டும். பாடத்தின் உள்ளிருந்தும் சில வினாக்கள் கேட்கப்படும்.

ஒரு மதிப்பெண் 50 வினா கேட்கப்படும். அனைத்து வினாவிற்கும் விடை எழுத வேண்டும். தேர்வை அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதில் எழுதுங்கள்.மேலே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வெழுதி வெற்றி பெற வாழ்த்துகள். (மாதிரி வினாத்தாள் அடுத்த பக்கத்தில்...)