ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புகள்!



நுழைவுத்தேர்வு டிப்ஸ்

நுழைவுத் தேர்வுக்கு தயாராக சில ஆலோசனைகள்!


இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technolgy) பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், நகர் ஆகிய 16 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கல்வி நிறுவனங்களில் Bachelor of Design (B. Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இருவகையான இளநிலைப் பட்டப்படிப்புகளும், Master of Design (M.Des) என்ற முதுநிலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், இத்தேர்விற்கு மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பேச்சுலர் ஆஃப் டிசைன் (பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன்
கம்யூனிக்கேஷன்), பேச்சுலர் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (அப்பேரல் புரொடெக்சன்) என்ற இளநிலைப் படிப்பு
களுக்கும், மாஸ்டர் ஆஃப் டிசைன் என்ற முதுநிலை படிப்பிற்கும் நடத்தப்படுகின்றது.

பேச்சுலர் ஆஃப் டிசைன் (B.Des) படிப்பதற்கான தேர்வுப் பாடத்திட்டம்

1. பொதுத்திறன் தேர்வு (General Ability Test - GAT)
2. ஆக்கப்பூர்வத் திறன் தேர்வு (Creative Ability Test - CAT)
பொதுத்திறன் தேர்வில் உள்ள பாடங்கள்
A. குவான்டிடேட்டிவ் எபிலிட்டி (Quantitative Ability)
B. கம்யூனிகேஷன் எபிலிட்டி (Communication Ability)
C. இங்கிலீஷ் காம்ரிஹென்ஷன் (English Comprehension)
D. அனலிட்டிக்கல் எபிலிட்டி (Analytical Ability)
E. பொது அறிவு, தற்கால நிகழ்வுகள் (General Knowledge, Current Affairs)
A. குவான்டிடேட்டிவ் எபிலிட்டி என்பது அடிப்படைக் கணிதம் சார்ந்தது. ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்ற அடிப்படைக் கணிதத்தை முறைப்படி மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் கூட்டல், பெருக்கல், வகுத்தல், பின்னங்கள், விழுக்காடு, வட்டிவீதம், வேலை, திறன், விகிதம், விகிதப் பொருத்தம், தூரம், நேரம் இவை தொடர்பான வினாக்கள் வரும். இவற்றைச் சரியாகவும், விரைவாகவும் செய்ய கற்க வேண்டும்.

B. கம்யூனிகேஷன் எபிலிட்டி என்பது ஆங்கிலத்தில் ஒரு செய்தியை வெளிப்படுத்தக்கூடிய அடிப்படைத் திறனைச் சோதனை செய்யும் பிரிவாகும். இதில் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் வாயிலாக செய்தித் தொடர்பிற்கான திறன் சோதிக்கப்படும். இதில் சினானிம்ஸ் (Synonyms - ஒரே பொருள் உள்ள வார்த்தைகள்), ஆன்டனிம்ஸ் (Antonyms - எதிர்பதங்கள்) தொடர்புள்ள பொருள் கொண்ட வார்த்தைகள், ஒருமை, பன்மை, ஒரு பொருள் தரும் பல வார்த்தைகள், இடியம் மற்றும் பிரேசஸ் (Idioms & Phrases), ஸ்பெல்லிங் (Spellings) தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.
C. இங்கிலீஷ் காம்ரிஹென்சனில் ஒரு பத்தியில் கொடுத்த செய்தியின் அடிப்படையில், அந்தப் பத்தியைப் புரிந்துகொண்டதை சோதிக்கும் வகையில் வினாக்கள் வரும்.
D. அனலிட்டிக்கல் எபிலிட்டி பிரிவில் மாணவர்களின் புரிதல் வீதம் (Inference) மற்றும் லாஜிக் (logic) திறன் சோதிக்கப்
படும். குறிப்பிட்ட எடுகோள்களைப் புரிந்து கொண்டு, கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் மாணவர்
களின் முறையான சிந்திக்கும் திறன் சோதிக்கப்படும். இவை verbs மற்றும் non-verbs வடிவங்களில் வினாக்கள் இருக்கும்.

E. பொது அறிவு, அன்றாட நிகழ்வுகள் (General Knowledge, Current Affairs)பிரிவில் முற்கால, தற்கால இந்திய வரலாறு, புவியியல், இந்திய அரசியல்,
இந்திய பொருளாதாரம், பொது அறிவியல், இந்தியப் பாதுகாப்புத் துறை, அரசியல், விளையாட்டு, ஐக்கிய நாடுகள், பொது உலக அறிவு, அன்றாட நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் இருக்கும்.

அனலிட்டிக்கல் எபிலிட்டி பிரிவில், அல்ஃபாபெட், வார்த்தைகள் அமைப்பு, கோடில், கோடிங், அனாலஜி, தொடர்புகள், அமர வைக்கும் முறை, நம்பர் ரேங்க், திசை, கணிதக் குறியீடுகள், அனலிட்டிக்கல் ரீசனிங், இன்புட்-அவுட்புட், டேட்டா சயின்ஸ், எலிஜிபிலிட்டி டெஸ்ட், அசார்ஸன் ரீசனிங், காரணம்-விளைவு, கியூப்-டைஸ், இமேஜ், எண்ணுதல், படங்களை முடித்தல், பேப்பர் ஃபோல்டிங், பேப்பர் கட்டிங், எம்பெட் ஃபிகர்ஸ், உருவங்கள் உருவாக்கம், ஒத்த உருவங்கள்  ஆகிய தலைப்புகளில் உள்ளவற்றை படிக்க வேண்டும்.

ஆக்கப்பூர்வ திறன் தேர்வு ஆக்கப்பூர்வத் திறனறி சோதனையில் தனித்திறன் (Skill), உற்று நோக்கும் திறன் (Power of Observation), உருவாக்கம், வடிவமைப்பு (Innovation and Design) இவையும், நிறம், விளக்கம் (Colour, Illustration) இவையும் சோதிக்கப்படும்.ஆக்கப்பூர்வத் திறன் என்பது விகல்பா (Vikalpa) என்பதாகும். கொடுக்கப்பட்ட பத்தியை ஆழமாகப் புரிந்து, கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்வது ஒரு பகுதியாகும்.

மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் சிந்தனைகளில் சரியானதைத் தேர்வு செய்வதாகும். இதில் ஃபேஷன் (Fashion) வகைகள், துணி உடையமைப்பு, துணிகளைப் புரிந்துகொள்ளுதல், ஸ்கெட்சிங், ஃபேஷன் அக்சசரிஸ், லேண்ட் ஸ்கேப், பர்ஸ்பெக்டிவ் இவை தொடர்பான வினாக்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்று நிறங்களில் ஒரு உருவத்தை, கோயிலை, கட்டடத்தைவரைதல், பள்ளி விளையாட்டுப் போட்டி வரைதல், ஒரு விவசாயியை வரைதல், நடனமாடும் மயிலை வரைதல், கோரல் ரீப் வரைதல், கடைத்தெரு வரைதல் போன்ற வினாக்கள் இருக்கும்.

இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சூழல் அறியும் தேர்வு (Situation Test) எழுத வேண்டும். இத்தேர்வில், கொடுக்கப்பட்ட பொருட்களைத் திறமையுடன் கையாளுதல் மற்றும் இவை தொடர்பான ஆக்கப்பூர்வத் தேர்வுகள் இருக்கும்.பி.எஃப்.டெக். அப்பேரல் புரொடெக்சன் சேர விரும்புவோருக்கான தேர்வுப் பாடத்திட்டம் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்  (General Ability Test - GAT), மேனேஜேரியல்
எபிலிட்டி டெஸ்ட் (Managerial Ability Test - MAT) என்ற எழுத்துத் தேர்வுகளை எழுத வேண்டும். இதில் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் மேலே விவரித்தபடியே நடத்தப்படும். மேனேஜேரியல் எபிலிட்டி டெஸ்ட் பற்றி பார்ப்போம்.    

மேனேஜேரியல் எபிலிட்டி டெஸ்ட்

1. கேஸ் ஸ்டடி (Case Study), 2. லாஜிக்கல் எபிலிட்டி (Logical Ability) என்ற இரு பிரிவுகள் உண்டு.
1. கேஸ் ஸ்டடி (Case Study): இது ஒரு தொழிற்சாலையில் உள்ள சூழலைப் புரிந்துகொண்டு, அவை தொடர்பான மாணவர்
களின் அறிவைச் சோதிக்கும் தேர்வாகும். இது ஒரு தேர்வரின் மேலாண்மைத் திறனைச் சோதனை செய்யும் தேர்வாகும்.
2. லாஜிக்கல் எபிலிட்டி (Logical Ability): இது ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது கணக்கின் தொடர் சிந்தனை, காரண காரியங்கள் பற்றி மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் வகையில் இருக்கும். இதற்கு மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சிக்கலின் கோட்பாடு, ஆக்கப்பூர்வச் சிந்தனை, இவை தொடர்பான சிந்தனை, இவற்றில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

முதுநிலைப் படிப்பான மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design - M.Des) சேர்வதற்கான தேர்வுப் பாடத்திட்டம்ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (General Ability Test - GAT), கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் (Creative Ability Test - CAT)என்ற எழுத்துத் தேர்வுகளையும், இவற்றில் தேர்வடைந்தபின், கேஸ் ஸ்டடி (Case Study) தொடர்பான கலந்தாய்வு (Group Discussion), பின் நேர்முகத்தேர்வு (Personal Interview) இவற்றைச் சந்திக்க வேண்டும்.

கேஸ் ஸ்டடியில், கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் (Concept clarity), தலைப்பு தொடர்பான கற்றலறிவு (knowledge based on topic), தலைப்பு உருவாக்கத்தில் மாணவரின் பங்கு (Contribution made on the topic to the group), தனித்திறன் (Interpersonal skill), கணக்கைத் தீர்க்கும் திறன் (Problem solving approach), தலைமைப் பண்பு (Leadership qualifier), புதிய கருத்துகளை உருவாக்குவது (Ability to generate new ideas), திறமையான செய்தித்தொடர்பு (Effective Communication) போன்ற தலைப்புகள் தொடர்பாக இருக்கும்.

நேர்முகத் தேர்வில் தொழில் சார்பு (Career Orientation),துறையில் சார்பு (Aptness to the field), கல்வி மற்றும் மற்ற திறன்கள் (overall personal achievements in academics and co-curricular orientation), செய்தித்தொடர்பு (Communication), நுண்ணறிவு, ஆக்கப்பூர்வ அறிவு, சிந்தனை (General Awareness, Aptitude, Creative Lateral thinking) இவை சோதித்தறியப்படும்.

தேர்வு மதிப்பெண் விவரம்:

*இளநிலைப் படிப்பான B.Des நுழைவுத் தேர்வு
*GAT (General Ability Test) 40 விழுக்காடு,
*CAT (Creative Ability Test) 40 விழுக்காடு,
*Situation Test 20 விழுக்காடு மதிப்பெண்கள்

B.Tech. நுழைவுத் தேர்வு

*GAT (General Ability Test) 60 விழுக்காடு,
*MAT (Managerial Ability Test) 40 விழுக்காடு
*முதுநிலைப் படிப்பான M.Des  நுழைவுத் தேர்வு
*GAT (General Ability Test) 40 விழுக்காடு,
*CAT (Creative Ability Test) 40 விழுக்காடு,
*GD (Group Discussion) 10 விழுக்காடு,Interview 10 விழுக்காடு

தேர்வுகள் நடைபெறும் நாள்:
B.Des (பி.டிசைன்): 21.1.2018
B.F.Tech (பி.டெக்) : 21.1.2018
M.Des (எம்.டிசைன்) : 21.1.2018
மேலும் விவரங்களை அறிய www.nift.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.