விண்வெளி அறிவியலில் இளநிலை தொழில்நுட்பப்படிப்பு!



அட்மிஷன்

விண்ணப்பித்துவிட்டீர்களா?


உலக அளவில் வளர்ந்து வரும் விண்வெளி ஆய்வுகளும், செயற்கைக்கோள்கள் செலுத்தும் நாடு களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப விண்வெளி ஆய்வுப் படிப்பும் இதைத் தொடர்ந்த ஆய்வும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

கல்வி, செய்தித்தொடர்பு, நில மற்றும் கடல் ஆய்வு, குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்டறிதல், வானிலை ஆய்வு, ஆற்றல் கண்டறியும் ஆய்வு, கனிம வள ஆய்வு, ஆற்றல் கண்டறியும் ஆய்வு என்று பல துறைகளுக்குத் தேவையான ஒன்றாக விண்வெளிப் படிப்பு உள்ளது.

தவிர்க்க முடியாத நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான விண்வெளி அறிவியல் படிப்புகளை திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Space Science and Technology - IIST) வழங்குகிறது. இது மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் விண்வெளி ஆய்வினை ஆக்கப்பூர்வமாக சமுதாய நலன் நோக்கில் மேற்கொள்வதுடன், உலகத்தரம் வாய்ந்த  விண்வெளிக் கல்வியைத் தருகிறது.

IIST வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள் - பி.டெக் (ஏவியோநிக்ஸ்) B.Tech (Avionics), பி.டெக் (ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங்) B.Tech (Aerospace Engineering), பி.டெக் (இயற்பியல், அறிவியல்) B.Tech (Physical Sciences), டியூவல் டிகிரி (பி.டெக் + மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்/ மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி) Dual Degree (B.Tech + Master of Science/Master of Technology).

முதுநிலையில் எம்.டெக்கில் ஏரோ டைனமிக்ஸ், பிளைட் மெக்கானிக்ஸ், ஸ்டரச்சர் மற்றும் டிசைன், தெர்மல் அண்ட் புரப்பல்சன், கண்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் சிக்னல் புராசஸ், ஆர்.எஃப். அண்ட் மைக்ரோ லேப் எஞ்சினியரிங், வி.எல்.எஸ்.ஐ. அண்ட் மேக்ரோ சிஸ்டம், பவர் எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, எர்த் சிஸ்டம் சயின்ஸ், ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், மெஷின் லேனிங் அண்ட் கம்பியூட்டிங், ஆப்டிக்கல் எஞ்சினியரிங், சாலிட் ஸ்டேட் டெக்னாலஜி, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோ பிசிக்ஸ்) என்ற படிப்புகளைத் தருகிறது. பல்வேறு ஆய்வுப் படிப்புகளையும் IIST தருகிறது.

ஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை

பி.டெக் (ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங்) - 60 - 4 ஆண்டுகள்
பி.டெக் (ஏவியோனிக்ஸ்) - 60 - 4 ஆண்டுகள்.
பி.டெக் + எம்.டெக் - 20 - 5 ஆண்டுகள்.

இட ஒதுக்கீடு: மத்திய அரசின் விதிகளின்படி ஆதிதிராவிடர்களுக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், நான்-க்ரீமி  பிறபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடும், மாற்றுத்திறனாளிளுககு 3 விழுக்காடும் இட ஒதுக்கீடு உண்டு.
கட்டண விவரம்: இளநிலைப் பட்டப் படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 48,000 ஆகும். இதைத் தவிர திரும்பப் பெறக்கூடிய      கேஷான் பணம் ரூ.13,000 செலுத்த வேண்டும்.
கட்டண உதவி ஊக்கத் தொகை: தகுதியின் அடிப்படையில் விண்வெளித் துறை இளநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் இவற்றில் கட்டண உதவியை வழங்கப்படுகிறது. ஒரு செமஸ்டருக்கு
ரூ. 3000 வழங்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை முறை: J.EE. Main தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின் பின் J.E.E. Advanced தேர்வு எழுத வேண்டும். இதிலும் தேர்ச்சி பெற்று அதன் தரவரிசை அடிப்படையில் IISTயில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கடந்த மாதம் J.E.E. Main தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களே தேர்ச்சி பெற்றபின் J.E.E. advanced விண்ணப்பிக்க வேண்டும்.
J.E.E. main +2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
J.E.E. அட்வான்ஸ்டு தேர்வின் விவரங்களை  www.jeeadv.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய நாட்கள் :
அட்மிஷன் விவரங்கள் வெளியாகும் நாள் : 2.5.2018
ஆன்லைன் பதிவு: 22.5.2018
இறுதி நாள் : 10.6.2018
தொடர்பிற்கு: www.iist.cc.in/admissions/undergraduate, Indian Institute of Space Science and Technology,  (Dept. of Space, Govt. of India),  Valiamala, Thiruvananthapuram-695 547,  Kerala, India.Phone: +91 (471) 2568452, 2568600