நெஞ்சம் நெகிழ்கிறது!வாசகர் கடிதம்

ஈகோவின் பல பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் உதாரணக் கதைகளோடு வரும் ஸ்ரீநிவாஸ் பிரபு எழுதும் உடல்… மனம்… ஈகோ! என்ற உளவியல் தொடர் அற்புதம். மனித மனம் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் ஈகோவின் செயல்கள் பற்றியும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் தெளிவாக விளக்குவது அபாரம்!
  மேரி அகஸ்டின், ஆலந்தூர், சென்னை-16.
 
கல்விச் செய்திகளோடு வேலைவாய்ப்புகளுக்கென தனிக்கவனம் செலுத்தி பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள், ரயில்வேயில் உள்ள பணியிடங்கள் என அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தருவது சிறப்பு. இப்படி மத்திய அரசுப் பணிகளைப் பற்றிய முழு விவரங்களையும் வழங்கி வேலை தேடும் பட்டதாரிகளுக்குத் தோள் கொடுத்து உதவும் தோழனாய் உயர்ந்து நிற்கிறது கல்வி-வேலை வழிகாட்டி.
  கே.ஆனந்த்ராஜ், திருவட்டாறு.
 
மாணவர்களுக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கும் அவசியமான கட்டுரைகளைச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குவது என்பது கல்வி  வேலை வழிகாட்டியின் தனிப் பாணி. அவ்வகையில் +1, +2 மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அவற்றில் சென்டம் வாங்க டிப்ஸ்கள், மேலும்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற டிப்ஸ் போன்ற பகுதிகளைத் தந்திருப்பது அருமை.
  எஸ்.வினோத்குமார், வேளச்சேரி, சென்னை-42.
 
பொருளாதாரமே ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்று இருக்கையில்  பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குத் தகுந்த உயர்கல்வி பயில வழிகாட்டி மேலும் அவர்களை அரசுப்பணி பெறச் செய்வது என்பது பாராட்டுகளுக்குரியது. ஆசிரியப் பணி அறப் பணி என்பதை நிரூபித்திருக்கிறார் திண்ணைப் பயிற்சி பட்டறையின் ஆசிரியர் செந்தில்குமார். சேவை உள்ளத்தோடு செயல்படும் அவரின் பணியைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது!
  எம்.கோபால கிருஷ்ணன், வத்தலகுண்டு.