மத்திய அரசுப் பணியில் சேர SSC தேர்வுக்குத் தயாராகுங்க!வாய்ப்பு

3,259 பேருக்கு வாய்ப்பு!


மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி. அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் திறனறியும் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் ஆட்களைத் தேர்வு செய்து காலிப் பணியிடங்களை நிரப்புகிறது.

தற்போது இந்த அமைப் பின் சார்பாக பிளஸ்2 மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,259 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் விவரம்: லோயர் டிவிஷன் கிளார்க்/ஜூனியர் சார்ட்டிங் அசி ஸ்டன்ட் பிரிவில் 898 இடங்களும், போஸ்டல் அசிஸ்டன்ட்/சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 2,359 இடங்களும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரில் 2 இடங்களும் என மொத்தம் 3,259 இடங்கள் நிரப்பப்படுகின்றன.கல்வித்தகுதி: விண்ணப் பிக்க விரும்புவோர் 1.8.2018ம் தேதியின் அடிப்படையில் + 2 அளவிலான படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.8.2018ம் தேதியின் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 ஸ்டேட் வங்கிக் கிளை மூலமோ
அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். பெண்கள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ேர்வுமையம்:தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : டையர் 1 மற்றும் டையர் 2 என இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, பின் தட்டச்சு தேர்வு என்ற வகையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2017
மேலும் விவரங்களுக்கு: www.ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.