+2 ஆங்கிலம் முழு மதிப்பெண் பெறும் வழிகள்



+2 பொதுத் தேர்வு டிப்ஸ்

முதல் தாள்


+2 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மொழிப்பாடங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும். ‘‘பொதுவாகவே நம் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலப்பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது சிரமம், கடினம் என்கிற அவநம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.

சரியான புரிதலும், தொடர்ச்சியான பயிற்சியும், வினாக்களை அணுகும் வழிகளையும் தெரிந்து உழைத்தால் நிச்சயம் ஆங்கிலப் பாடத்தில் நீங்களும் சென்டம் வாங்கலாம்’’ என்கிறார், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஏ.இளங்கோவன். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.

‘‘மாணவர்கள் ‘மொழி’ என்பது அறிவல்ல (knowledge) அது ஒரு திறன் (skill) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, மொழித் திறன்களாகக் கருதப்படும் (LSRW) கவனித்தல் (Listening), பேசுதல் (Speaking) வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing) போன்ற திறன்களைப் பின்பற்றி மொழிப் பாடத்தை (ஆங்கிலத்தை) அணுகினால் ஆங்கிலப் பாடம் மட்டுமல்ல, அம்மொழியும் உங்கள் வசப்படும்.

மேலும் +2 ஆங்கிலப் பாடத்திட்டம் இம்மொழித் திறன்கள் (LSRW) அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில்கொண்டு படித்தால் சென்டம் நிச்சயம்.தேர்வை அணுகுவதற்கு முன் மாணவர்கள், முதலில் வினாக்களின் வடிவத்தை (Question Paper) புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் முதல்தாளைப் பொறுத்தவரை Section A, B, C, D, E என ஐந்து பிரிவுகளில் ெமாத்தம் 69 கேள்விகள் கேட்கப்படும்.

(Section A, C, Vocabulary, Lexical competency) உட்பிரிவு ‘A’ மற்றும் ‘B’ பகுதிகளில் உள்ள 1 முதல் 10 வரையிலான வினாக்கள் ‘Synonyms’ மற்றும் ‘Antonyms’ வகையில் கொள்குறி வினாக்களாகக் (Multiple Choice Question) கேட்கப்படுகின்றன.

Prose lesson முடிவில் உள்ள பயிற்சி வினாக்கள் மற்றும் Glossory-ல் இருந்தோ பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் உள்ள 10 மதிப்பெண்களையும் எளிதாகப் பெற, இதுவரை நடந்துள்ள அரசுப் பொதுத் தேர்வுகளின் வினாக்களைப் படித்தாலே போதும்.

ஆங்கிலம் முதல் தாளில் 25 மதிப்பெண்கள் உரைநடை (Prose) பகுதிக்கும், 20 மதிப்பெண்கள் செய்யுள் (Poetry) பகுதிக்கும், 20 மதிப்பெண்கள் Lexical Competency பகுதிக்கும், 20 மதிப்பெண்கள் Grammetical Competency பகுதிக்கும், 5 மதிப்பெண்கள் Comprehension பகுதிக்கும் என மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

முதலில் ஒவ்வொரு பகுதியில் உள்ள வினா வகைகளை (Question Type) சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கணப் பகுதி வினாக்களைப் புரிந்துகொள்ள, மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் தேர்வை நீங்கள் பிழையில்லாமல் தெளிவாக எழுதலாம்.

மேலும் காலாண்டு, அரையாண்டுத்தேர்வுகளை, பொதுத் தேர்வுக்கான மாதிரியாக எடுத்துக்கொண்டு எழுதினால் அரசுப் பொதுத் தேர்வில் பயம், பதற்றத்தைத் தவிர்க்கலாம். பொதுவான தவறுகளை (Common Errors) திருத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கும்.

11 முதல் 23 வரையிலான Lexical Competnecy வினாக்களுக்கும் முன் மொத்தமுள்ள 13 வினாக்களில் எளிதான பரிச்சயமான 10 வினாக்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். விடை எழுதும்போது வினாக்களைத் தவிர்த்து விடை மட்டும் எழுத வேண்டும். கொடுக்கப்பட்ட Lexical Wordக்கு இணையான சொல்லைக் கறுப்பு மையிலும்,அதற்குக் கீழே Sentenceஐ, நீல நிறமையிலும் எழுதினால் அழகாக இருக்கும்.

11 முதல் 23 வரையிலான வினாக்களின் வகைகளையும் புத்தகத்தில் அவை இடம்பெற்றிருக்கும் பக்கத்தையும் இனி பார்ப்போம்.

11வது கேள்வி: Plural form C text book. (Page No.24)
12வது கேள்வி: Idiom (Page No.284)
13வது கேள்வி: Abbreviation and Acronym (Page No.124, 125)
14வது கேள்வி: Homophones (Page No.179, 180)
15வது கேள்வி: Blending words (Page No.227)
16வது கேள்வி: Syllebification (Page No.176)
17வது கேள்வி: Parts of Speech (Page No.78, 79)
18வது கேள்வி: American English (Page No.25)
19வது கேள்வி: Use Compound word in a Sentence
20வது கேள்வி: Prefix/Suffix
21வது கேள்வி: Compound words (Page No.125)
22வது கேள்வி: Phrasal Verbs (Page No.293)
23வது கேள்வி: Clipped words (Page No.226, 223)

மேற்கண்ட வினாக்களுக்குப் பாடப் புத்தகத்தில் அடைப்புக் குறியில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி வினாக்களைப் படித்து எழுதிப் பார்த்தாலே போதுமானது.அடுத்து Section B - IIA (Gramatical Competency) 24 முதல் 33 வரையிலான 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் இலக்கணப் பகுதியில் இருந்து கேட்கப்படும். இந்த வினாக்களுக்கான விடைைய மட்டும் ஒரே பக்கத்தில் ெதளிவாக எழுத வேண்டும்.

இதில் Model verb, Semi, Quasi Model-ல் இருந்து 2 வினாக்கள், Tense, Conditional Clause-ல் இருந்து 2 வினாக்கள், Relative Pronoun-ல் இருந்து 2 வினாக்கள், Phrase or preposition Link word, Kind of passive voice மற்றும் Sentence Pattern-ல் இருந்து தலா ஒரு கேள்வி வீதம் மொத்தம் 10 வினாக்கள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படும்.

இப்பகுதியில் கேட்கக்கூடிய கேள்விகள் அனைத்தும் கடந்த பொதுத் தேர்வுகளின் வினா வங்கியிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே, மாணவர்கள் இதுவரை நடைெபற்ற பொதுத் தேர்வுகளின் வினாத் தொகுப்ைப இரண்டு அல்லது மூன்று முறை work out செய்தாலே போதும். இப் பகுதியில் கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துவிடலாம்.

அடுத்து 34 முதல் 38 வரையிலான வினாக்கள் Grammar பகுதியில் இருந்து கேட்கப்படும். அவைகளில் 34வது கேள்வி Report the Dialouge (Direct to Indirect Method-ல் எழுதவும்) 35வது கேள்வி Inversion of the sentence (were, had, should, would போன்றவைகளைக்கொண்டு வாக்கியத்தைத் தொடங்குவது) 36, 37, 38 ஆகிய மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விகள் Simple of Compound ஆக (or) Compound to Complex Sentence ஆக (or) Complex to Simple Sentence ஆக மாற்ற வேண்டும்.

எஞ்சிய ஒரு கேள்விக்கு Incase of, though, it போன்ற சொற்களைக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தோடு இணைத்து எழுத வேண்டும். மேற்கண்ட வினாக்கள் பெரும்பாலும் கடந்த பொதுத் தேர்வுகளின் வினாத் தொகுப்புகளில் இருந்தே கேட்கப்படுவதால் கடந்த பொதுத்தேர்வுகளின் வினாத் தொகுப்புகளைக் கொண்டு work out செய்து பார்த்தாலே போதும். மனனம் செய்யத் தேவையே இல்லை, வினா வகையைப் புரிந்துகொண்டாலே போதும் எளிமையாக முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.

அடுத்து 39 முதல் 43 வரையிலான (Identifying the Semantic Field in the Sentences) வினாக்களுக்கு விடையளிக்கும் முன் கொடுக்கப்பட்டுள்ள 5 வாக்கியங்களையும் தெளிவாகப் படித்து, பின் அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டுள்ள 5 clue words-ஐ வைத்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

அடுத்து 44 முதல் 48 வரையிலான Comprehension கேள்விக்குக் கொடுக்கப்பட்டுள்ள Passage-ஐ ஒன்றுக்கு இரண்டுமுறை படித்துப் புரிந்துகொண்டபின் விடையளிக்கவேண்டும். ஏனெனில் இக் கேள்விக்கான பதில் கொடுக்கப்பட்டுள்ள Passage-ல் நேரடியாகவே (Direct Answers) உள்ளது.

49 முதல் 51 வரையிலான 3 Paragraph (from prose lessons) வினாக்களுள் நன்றாகப் படித்து (பிழையில்லாமல்) எழுதிப்பார்த்த Paragraphஐ ேதர்வு செய்யுங்கள். எழுத்துப்பிழை, அடித்தல், திருத்தல், இலக்கணப் பிழை இல்லாமல் தேவையான இடத்தில் மேற்கோள் இட்டு எழுத வேண்டும்.52 முதல் 54 வரையிலான 3 Essay Type வினாக்களில், தெளிவாகத் தெரிந்த ஒரு Essayவை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

synopsis, introduction, sub topics, conclusion என்ற format-ல் எழுத வேண்டும். Essayவில் Content (உள்ளடக்கம்) 60%, மொழி, நடை மற்றும் தொகுப்பு (Language, style and organisation) 40% இருக்குமாறு பார்த்துக் ெகாள்ள வேண்டும். முதல் மூன்று பாடத்திற்கான Essayவை படித்தாலே போதும் உறுதியாக Paragraph மற்றும் Essayக்கு விடை எழுதி 15 மதிப்பெண்களையும் உறுதியாகப் பெறலாம்.

அடுத்து 55 முதல் 60 வரையுள்ள Poetry Appreciation வினாக்கள். மொத்தமுள்ள 6 Poem-ல் இருந்து 6 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஒரு Poemல் 4 முதல் 5 வினாக்களே உள்ளது. மேலும் இதற்கான விடை ஒரு வரி அல்லது ஒரு வார்த்தையில்தான் இருக்கும். இந்த வினாக்களை ஒரு முறை வாசித்தாலே போதும் 6 மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம்.

61 முதல் 63 வரை உள்ள ‘Poetic Devices’ மிகவும் எளிமையான பகுதி, Figure of Speech, Alliteration மற்றும் Allusion போன்ற வினாக்களுக்கு எளிமையாகப் பதில் அளிக்கலாம்.64 முதல் 66 வரையிலான ERC வினாவிற்கு Name of the poet and poem மற்றும் Explanationஐ தெளிவாக எழுதுங்கள். ஒவ்வொரு Poem-லும் ‘clue words’ இருக்கும்.

அதை தெரிந்துகொண்டாலே இந்த மூன்று வினாக்களில் 2 வினாக்களுக்கான விடையை எளிமையாக எழுதிவிடலாம்.67 முதல் 69 வரையுள்ள ‘Poetry Paragraph வினாவிற்கு விடையை எளிமையாக எழுதும்போது மூன்று அல்லது நான்கு இடங்களில் Poetry Linesஐ மேற்கோள் காட்டி எழுதுங்கள். முதல் மூன்று Poetry Paragraphஐ படித்தாலே போதும், இக் கேள்விக்கான விடையை எழுதிவிடலாம்.’’

‘Plan Your work
work your plan’
வெற்றி நிச்சயம்.

இரண்டாம் தாள்

+2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மொழிப் பாடங்களிலும் சென்டம் வாங்க முடியும். அதற்கான செயல்பாடுகளில் இப்போதிருந்தே ஈடுபட்டால் தேர்வின்போது மிகவும் சிரமப்படத் தேவையில்லை. ‘‘+2 ஆங்கிலம் இரண்டாம் தாள் முதல் தாளை விட எளிமையானது. இதில் முழு மதிப்பெண் வாங்குவது சுலபம்’’ என்கிறார் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஏ.இளங்கோவன். முழு மதிப்பெண் வாங்க அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை சென்டம் வாங்க மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது நிதானம், தெளிவான மனநிலையோடு வினாக்களைப் படித்து விடையளிக்க வேண்டும்.  ஆங்கிலம் இரண்டாம் தாள் 80 மதிப்பெண்களை உள்ளடக்கியது. இரண்டாம் தாளைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 39 வினாக்கள் Section A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளில் கேட்கப்படும்.

Section Aயில் 25 மதிப்பெண்களை உள்ளடக்கிய வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவ் வினாக்கள் எல்லாம் துணைப்பாட  (Supplementary Reader) பகுதியில் இருந்தே கேட்கப்படுகின்றன. இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு மொத்தமுள்ள ஏழு கதைகளையும் முழுமையாகத் தெரிந்துகொண்டாலே அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்துவிடலாம்.

Section Aயில் உள்ள முதல் கேள்வி Rearranging the sentences. இதில் மொத்தம் 6 வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் முதல் மற்றும் கடைசி வாக்கியத்தைத் தவிர்த்து மற்ற நான்கு வாக்கியங்களும் இடம் மாறியிருக்கும். இந்த வாக்கியங்களை (Sentence) சரியான வரிசையில் (Correct Sequence) எழுத வேண்டும். இதற்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அடுத்ததாக 2 முதல் 6 வரையிலான கேள்விகள் Multiple Choice Type-ல் கேட்கப்படும். Supplementary Readerல் உள்ள அனைத்துக் கதைகளையும் தெளிவாகத் தெரிந்துகொண்டாலே இவ்வினாவிற்கு விடையளித்துவிடலாம். இவை ஒரு மதிப்பெண் வினாக்கள்.

அடுத்து 7 முதல் 11 வரையுள்ள கேள்விகளுக்கு விடை எழுதும்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள Passage-ஐ நன்றாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் Comprehension Passage துணைப்பாடக் கதைப் பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது. எனவே, கதைகளைத் தெரிந்துகொண்டால் பதில் அளிக்க எளிமையாக இருக்கும். 12வது கேள்வி, Essay Question.

இது 10 மதிப்பெண் வினா. இந்த வினாவில் மொத்தமுள்ள 7 கதைகளிலிருந்து ஏதேனும் இரண்டு கதைகளின் Hints கொடுக்கப்பட்டிருக்கும். முதல் மூன்று கதைகளிலிருந்து நிச்சயம் Hints கேட்கப்படும். எனவே, இவ்வினாவிற்கு முதல் மூன்று கதைகளுக்கான Essayவைப் படித்தாலே போதும். Essayவை எழுதும்போது Synopsis, Introduction, Subtitles, Quotes, Conclusion இட்டு எழுத வேண்டும்.

அடுத்து Section B-ல் 13 முதல் 17 வரை 5 வினாக்கள் கேட்கப்படும். கடந்த பொதுத் தேர்வுகளின் வினாத் தொகுப்பில் கேட்கப்பட்ட வினாக்களைப் படித்தாலே நிச்சயம் இந்தப் பிரிவில் கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதிவிடலாம்.

இந்தப் பிரிவில் கேட்கப்படும் (Repeated Questions). OPAC, General Instructions for Using the Library? Different Sections in Modern Library, Classification of books, Skimming, Scanning, Email ID of an Organization, Eponymous Words, Euphemism, Why do we Consult a dictionary? போன்ற வினாக்களைப் படித்தாலே போதும்.

18 முதல் 22 வரையிலான வினாக்கள் ‘Spot the Errors’ கடந்த பொதுத் தேர்வுகளின் வினா வங்கியை ஒன்றுக்கு இரண்டு முறை Workout செய்தாலே இவ் வினாக்களுக்கு எளிமையாக விடை எழுதி விடலாம்.

Use of Singular / Plural, Use of Articles, Simple, Compound, Complex, Concord, Agreement with the Verb Degrees, Conditional Clause போன்ற Grammar பகுதியில் இருந்து பரவலாக ஏற்படும் Errors (Common Errors) இன் தன்மை மற்றும் வகைகளை Previous Question Paper-ஐ Workout செய்வதன் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

23வது கேள்வி Summary Writing. இது ஐந்து மதிப்பெண் வினா. இதற்கு விடை எழுதும்போது Rough Draft, Suitable Title, Fair Draft Formatல் எழுத வேண்டும். Summary Writing எழுதும்போது கொடுக்கப்பட்டுள்ள Passage-ஐ நன்றாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

Main Points-ஐ Identify செய்து வரிசையாக எழுதவும். Main Points-ஐ வைத்து Rough Draft Prepare செய்து எழுதவும். பொருத்தமான தலைப்பு கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள passageல் 1/3க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

24வது கேள்வி, Responding to the Advertisement, 10 மதிப்பெண் வினா. Presentation சரியாக இருந்தால் 10 மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம். இந்த வினாவிற்கு From, To Salutation, Subject, Reference, Body of the letter, Bio-Data, Address on the Cover என்ற formatல் எழுதவேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள Advertisement-ன் தேவை, முகவரி உள்ளிட்டவற்றைக் குறித்துக்கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள formatல் பதில் எழுதவும்.25வது கேள்வி Non lexical fillers - hum, Er, uh, oh போன்றவற்றைச் சரியான இடத்தில் இட்டு எழுத வேண்டும். எளிமையான வினா இது. 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

26வது கேள்வி Road map, Instructions. கொடுக்கப்பட்டுள்ள Road mapஐ பார்த்து மூன்று instruction கொடுக்க வேண்டும். (Example: Go straight, Turn your right side and proceed, you can find the bank opposite to the Bus stand) மிகவும் எளிதாக 3 மதிப்பெண் பெறக்கூடிய வினா இது.
27 முதல் 31 வரை உள்ள கேள்விகளுக்கு ‘Proverb Meaning’ கொடுக்கப்பட்டுள்ள Proverbக்கு இணையான Meaningஐ தேர்ந்ெதடுத்து எழுத வேண்டும். கடந்த பொதுத் தேர்வின் வினா வங்கியைப் படித்தாலே போதும்.

32 முதல் 36 வரை உள்ள கேள்விகளுக்கு ‘Product slogan’. இதற்கும் கடந்த பொதுத் தேர்வுகளின் வினா வங்கியைப் படிப்பதே போதும். 5 மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுவிடலாம்.

இறுதியாக 37 முதல் 39 வரையிலான General Essay Questions. 3 வினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு விடை எழுத வேண்டும். General Essayக்கு விடை எழுதும்போது பிழையில்லாமல், synopsis, introduction, subtitles, questions relevant to the given topic, conclusion இந்த formatல் எழுத வேண்டும். இது 10 மதிப்பெண் வினா. மேலே குறிப்பிட்ட தகவல்களைப் பின்பற்றிப் படிக்கத் தயாரானால், திட்டமிட்டுக் கவனமாகப் படித்தால் சென்டம் நிச்சயம்!