வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

10வது படிப்புக்கு எல்லைக்காவல் படையில் வேலை!

நிறுவனம்: இந்திய துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைக்காவல் படையில் விளையாட்டுத் தகுதியின்(ஸ்போர்ட்ஸ் கோட்டா) அடிப்படையில் வேலை
வேலை: ஜி.டி. எனப்படும் கான்ஸ்டபிள் பதவியிலான எல்லைக்காவல் படை வீரர்
காலியிடங்கள்: மொத்தம் 196. இதில் பாக்சிங், அத்தலீட், ஃபுட்பால்,
ரெஸ்லிங் உட்பட 18 விளையாட்டுகளில்
குறிப்பிட்ட காலியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 18 - 23 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி  உண்டு
தேர்வு முறை: உயரம், உடற்திறன்,
குறிப்பிடும் விளையாட்டில் சோதனை மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

பட்டதாரிகளுக்கு யூனியன் பேங்கில் கிரெடிட் ஆபிஸர் வேலை!

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: ‘கிரேட் 2’ அடிப்படையிலான கிரெடிட் ஆபீஸர்
காலியிடங்கள்: மொத்தம் 200
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி
வயது வரம்பு: 23-32 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.union bankofindia.co.in

விவசாயப் பல்கலையில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணி!

நிறுவனம்: தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம்
வேலை: ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட்
காலியிடங்கள்: மொத்தம் 129
கல்வித்தகுதி: +2 படிப்புடன் பல்கலைக்
கழகங்கள் அல்லது அரசுத் துறைகளில் 5 வருட வேலை அனுபவம்
வயது வரம்பு: 30க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.10.17
மேலதிக தகவல்களுக்கு:
www.jat.tnausms.in

இர்கான் கட்டுமான நிறுவனத்தில் சிவில் எஞ்சினியர் வேலை!

நிறுவனம்: இந்திய ரயில்வே துறையின் கீழ்வரும் துணை நிறுவனமான இர்கான்(ircon), ரயில்வே தொடர்பான துறையில் மட்டும் அல்ல பல்வேறு அரசு துறைகளின் கட்டுமான மற்றும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது
வேலை: 4 துறைகளில் வேலைகள் உண்டு. சிவில் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், சைட் எஞ்சினியர் மற்றும் சைட் சூப்பர்வைசர்
காலியிடங்கள்: மொத்தம் 147. இதில் சிவில் எஞ்சினியர் 88, மெக்கானிக்கல் எஞ்சினியர் 3, சைட் எஞ்சினியர் 33 மற்றும் சைட் சூப்பர்வைசர் 22 இடங்கள் காலியாக  உள்ளனகல்வித்தகுதி: அதிக காலியிடங்கள் உள்ள சிவில் வேலைக்கு சிவில் எஞ்சினியரிங் டிகிரி அவசியம். சூப்பர்வைசர் வேலைக்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படிப்பு போதுமானது
வயது வரம்பு: பட்டப்படிப்பு தேவையான வேலைகளுக்கு 1.6.84க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படிப்பு போதுமான வேலைகளுக்கு 1.6.87க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: சிவில் எஞ்சினியர் பணிக்கு எழுத்து மற்றும் நேர்முகம். டிப்ளமோ படிப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.ircon.org

கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி!

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி எனும் மத்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் வேலை
வேலை: ப்ராஜக்ட் சயின்டிஸ்ட், ப்ராஜக்ட் சயின்டிஃபிக் அசிஸ்டென்ட், ப்ராஜக்ட் டெக்னீஷியன் மற்றும் ப்ராஜக்ட் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் 4 அடிப்படைத் துறைகளின் கீழ் ஒவ்வொரு துறையிலும் பல்வேறுபட்ட பிரிவுகளில் வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 203. இதில் அதிகமாக முதல் பிரிவில் 106, இரண்டாம் பிரிவில் 21, மூன்றாம் பிரிவில் 21 மற்றும் நான்காம் பிரிவில் 28 இடங்கள் காலியாக உள்ளனகல்வித்தகுதி: எஞ்சினியரிங், டெக்னாலஜி, மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், ஏரோனாட்டிக்கல், ஆட்டோமொபைல், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் கடல்சார் படிப்புகளில் பட்டம், கடல்சார் படிப்புகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் முதுகலை மற்றும் லைஃப் சயின்ஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 40, 35 மற்றும் 28 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைகளில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.niot.res.in

பெல் நிறுவனத்தில் டெப்யூட்டி எஞ்சினியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு கிளை
வேலை: டெப்யூட்டி எஞ்சினியர் பதவியிலான எஞ்சினியர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 192. இதில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 184 மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியர் துறையில் 8 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எலக்ட்ரானிக்ஸ், ஈ.சி அல்லது எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் தேர்ச்சியும், இரண்டாம் வேலைக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கும் முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 26க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.bel-india.com

தொகுப்பு: டி.ரஞ்சித்