பெல் நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டீஸ் பயிற்சி!



வாய்ப்பு

554 பேருக்கு வாய்ப்பு!


பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electrical Limited- BHEL) இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுள் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். இந்தியாவில் போபால், ஹரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (Power Sectors) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் தற்சமயம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டீஸ் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விவரம் : ஃபிட்டரில் 210ம், ஜி அண்ட் இ வெல்டரில் 130ம், டர்னரில் 30ம், மெஷினிஸ்டில் 30ம், எலக்ட்ரீசியனில் 40ம், மோட்டார் மெக்கானிக் வெஹிக்கிளில் 30ம், மெக்கானிக்கல் டிராஃப்ட்ஸ்மேனில் 15ம், புரொகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 25ம், கார்பென்டரில் 19ம், பிளம்பரில் 22ம், எம்.எல்.டி. பாதாலஜியில் 3ம் காலியிடங்கள் உள்ளன. மொத்தம் 554 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு உரிய டிரேடு பிரிவில் என்.சி.டி.வி.டி. அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ. படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முழுமையான தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்.

வயது வரம்பு: 1.10.2017 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாகத்தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.10.2017
மேலும் விவரங்களுக்கு www.bheltry.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.