எந்தப் பாடத்திட்டமானாலும் நீட் தேர்வில் ஜெயிக்கலாம்!வழிகாட்டல்

இன்றைய காலகட்டத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தன்னை தயார்படுத்திக் கொள்பவன் வெற்றிபெறுகிறான். படிப்பிலும் சரி வேலையை பெறுவதிலும் சரி இதுதான் இன்றைய காலகட்டத்தின் நிதர்சனமான உண்மை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வெற்றிப்படியில் ஏறி நிற்க இது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.

இப்போது மாணவர்கள் உயர்கல்வி பெற தகுதித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உதாரணமாக, தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நுழைவுத்தேர்வான (NEET) தேசிய தகுதிக்கான நுழைவுத்தேர்வை +2 படித்த மாணவர்கள் MBBS/BDS போன்ற படிப்புகளில் சேர, எழுதி தகுதி பெற்றால்தான் அவர்கள் மருத்துவர் ஆவதற்கான கனவு நனவாகும்.

இதுகுறித்து ஆர்.ஜி.ஆர். அகாடெமி நிறுவனரான இரா.கோவிந்தராஜிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வழியில் பயிலும் மாணவர்களுக்கு இது சிரமமான விஷயம். மற்றும் இவர்களால் முடியாது என்ற விஷயங்களைத் தெரிந்தோ தெரியாமலோ பலர் பரப்பி வருகின்றனர்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களானாலும் பாடத்திட்டமானாலும் சரி, படிக்கும் விஷயங்களில் மாறுபாடு கிடையாது.  எந்தப் பாடத்திட்டத்தில் படித்தாலும் கோட்பாடுகளும், சூத்திரங்களும் வழிமுறைகளிலும் எந்தவித வேறுபாடும் கிடையாது” என்று கூறுகிறார் சென்னையில் NEET தேர்வுக்கு பயிற்சியளித்து நடப்பாண்டில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வழிவகை செய்துள்ள கோவிந்தராஜ்.

“இந்த வருடம் +2 படித்த மாணவர்களுக்கு அவர்களுடைய தேர்வு முடிந்தவுடன் 30 நாட்கள் சிறந்த பயிற்சியை அளித்து அதற்கான வெற்றிமுறைகளைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் அளித்து, வெற்றி பெற செய்து மாநிலவழிக் கல்வியில் பயிலும் மாணவர்களும் இந்த NEET தேர்வில் வெற்றி பெறுவதைச் சுலபமாக்கியுள்ளோம்” என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் இந்நிறுவனத்தின் கல்வித்துறை தலைவராக உள்ள ராஜகுமாரி.

இவர்கள் இருவரும் இந்த நுழைவுத்தேர்வுக்காக பயிற்சியில் கடந்த 10 வருட கால அனுபவத்தின் மூலமாக இதை செய்துகாட்டி வருவதாக கூறுகின்றனர். மேலும் 2017-2018-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மருத்துவராக கனவு இருந்தால் தங்களை அணுகினால் ஆலோசனையை வழங்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆலோசனை பெற விரும்புவோர் 9176552121 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது rgracadery@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

- திருவரசு