கடலோரக் காவல் படையில் சமையலாளர் பணி!



வாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையானது இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால், அவற்றைப்போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்படும் அமைப்பாகும்.

இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும். கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைப்பு வழங்கி தன் பணியை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க நமது நாட்டின் கடலோர எல்லைகளைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியக் கடலோரக் காவல் படையில் நாவிக் பிரிவில் குக் மற்றும் ஸ்டூவர்டு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

குக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ வகை உணவுகளைத் தயாரிக்கும் திறனும், இவற்றுடன் ரேஷன் பொருட்களைக் கையாளும் திறனும் கூடுதலாக தேவைப்படும். ஸ்டூவர்டு பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆபீசர்ஸ் மெஸ்சில் பரிமாறுவது, ஹவுஸ்கீப்பிங், நிதியைக் கையாள்வது, ஒயின் மற்றும் ஸ்டோர் மெயின்டனென்ஸ், மெனுக்களைத் தயாரிப்பது, மெஸ்சை நிர்வகிப்பது போன்ற திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.வயது வரம்பு: 1.4.2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2017
மேலும் விவரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_25_1718b.pdf என்ற லிங்கைப் பார்க்கவும்.