TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!போட்டித் தேர்வு டிப்ஸ்

மத்திய-மாநில அரசுப் பணிகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று போட்டித்தேர்வுகளை எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் எப்போதுமே உள்ளனர். காரணம், அரசுப் பணிகளில் கிடைக்கும் நிரந்தர வருமானம் மற்றும் பல்வேறு சலுகைகள்தான்.

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் பல பிரிவுகளிலான பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைப் பலரும் தொடர்ந்து எழுதிவருகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பகுதியில், பொருளாதாரம், அரசியல், சமூகவியல் எனப் பல பகுதிகளைப் பார்த்தோம். சமீப காலங்களாக இந்திய அரசியல் அமைப்பு பற்றி பார்த்துவருகிறோம். கடந்த இதழில் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்.

கீழ்நிலை நீதிமன்றங்கள் (Subordinate Courts) மாவட்ட நீதிபதிகளும், அவர்களின் கீழ் படிப்படியாக மற்ற நீதி அலுவலர்களும், (செசன்ஸ் நீதிபதி எனப்படும் அமர்வு நீதிபதி, மாஜிஸ்திரேட், முன்சீப் முதலியவர்கள்) உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுடன் ஆலோசித்து ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

* மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை முடிவு செய்பவர் மாவட்ட நீதிபதி.
* மாவட்ட அளவில் கிரிமினல் வழக்குகளை முடிவு செய்பவர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி.

தன்னாட்சியுள்ள அமைப்புகள்தலைமை வழக்கறிஞர்:

* மத்திய அரசின் மிக உயர்ந்த சட்ட அதிகாரி.
* தகுதிகள் - உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உள்ள தகுதிகள்.
* நியமனம் - ஜனாதிபதியால், ஜனாதிபதி விரும்பும் வரை பதவி வகிப்பார்.
* பணிகள் - மத்திய அரசுக்குச் சட்ட ஆலோசனை தருதல் மற்றும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுதல், ஜனாதிபதி இடுகின்ற பிற பணிகள்.
* சிறப்புரிமை - நாடாளுமன்ற இரு அவைகளிலும் கலந்துகொள்ளலாம், பேசவும் உரிமை உண்டு. ஆனால் வாக்குரிமை இல்லை.

தலைமைத் தணிக்கை அதிகாரி CAG:

* மத்திய அரசின் கணக்குகளை மட்டுமின்றி மாநில அரசுகளின் கணக்குகளையும் தணிக்கை செய்பவர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். பதவி 6 ஆண்டு காலம் அல்லது 65 வயது வரை.
* பதவி நீக்கம் செய்பவர் ஜனாதிபதி. CAG-யின் திறமையின்மை அல்லது நெறிபிறழ் நடத்தை நிரூபிக்கப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றினால்தான் ஜனாதிபதி கையொப்பம் இடுவார்.
* ஊதியம் மத்திய தொகுப்பு நிதியிலிருந்து பெறுகிறார். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பொதுத்துறை நிறுவனங்களும் (அவசியமானால் ஊராட்சி நிறுவனங்களும்) செலவு செய்வதைக் கண்காணிக்கும் பணியைச் செய்தல்.

பொதுப்பணித் தேர்வாணையங்கள் மத்திய பொதுப்பணித் தேர்வாணையம்:

* தலைவரும் உறுப்பினர்களும் ஜனாதி
பதியால் நியமனம் பெறுவார்கள்.
* பதவி - 6 ஆண்டு காலம் அல்லது 65 வயது வரை.
* பணிகள் - மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு நடத்துதல், பதவி உயர்வு, மாற்றம், ஒழுங்கு விதிகள், ஓய்வூதியம்
முதலியவற்றில் ஆலோசனை.
* மத்திய தேர்வாணையத்தின் பணிகளை விரிவுபடுத்துதலும், புதிய அகில
இந்தியப் பணிகளை உருவாக்கலும் பாராளுமன்றத்தின் உரிமைகள்.
* ஊதியம் - மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து பெறுகிறார்.
மாநிலப் பொதுப்பணித் தேர்வாணையங்கள்:
* மத்திய ஆணையம் போன்று மாநிலப் பணிகளுக்கு தேர்வு, ஊதிய உயர்வு முதலியவற்றில் மாநில அரசுக்கு
ஆலோசனை வழங்கும் பணி.
* மாநிலத் தேர்வாணைய உறுப்பினர்
களையும், தலைவரையும் நியமித்தல், நீக்குதல் முதலிய அதிகாரங்கள்
ஆளுநருக்கு உண்டு.
* பதவி - 6 ஆண்டு காலம் அல்லது 62 வயது வரை.
* தகுதி - உறுப்பினர்களில் பாதிப்பேராவது 10 வருடம் அரசுப் பணி செய்திருக்க வேண்டும்.
* ஊதியம் - மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து பெறுகிறார்.
ஆட்சி மொழி:
* இந்தியாவில் இணைப்பு மொழியாக இருப்பது ஆங்கிலம்.
*Art -343 இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி (தேவநாகரி எழுத்தில்) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* மத்திய மற்றும் மாநிலங்களிடையே
கடிதத் தொடர்புக்கு உரியவை என்று அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22. இவற்றை குறிப்பிடுவது 8-வது
பட்டியலில். (இந்தப் பட்டியலில் முதலில் 14 மொழிகள் மட்டுமே இருந்தன. பிறகு படிப்படியாகச் சேர்ந்தவை 8 மொழிகள்)
* 1967 (21 அரசியல் சட்டத்திருத்தப்படி) - சிந்தி
* 1992 (71 அரசியல் சட்டத்திருத்தப்படி) - கொங்கணி, போடோ, நேபாளி
 2000 (92 அரசியல் சட்டத்திருத்தப்படி) சாந்தாலி, மைதிலி, டோக்ரி

ஜம்மு&காஷ்மீர் (விதி எண் 370)

* ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தருகிறது. அரசியல் சட்ட 370-வது விதி.  காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங் 1947 அக்டோபரில் ஜம்மு&காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார். அப்போது நேரு கொடுத்த வாக்குறுதி யின் அடிப்படையில் 370-வது விதி
உருவாக்கப்பட்டது.

ஜம்மு&காஷ்மீரின் தனியுரிமைகள்

* தனி அரசியலமைப்புச் சட்டம்,356 விதிப்படியான நெருக்கடி நிலை இந்த மாநிலத்தில் அமல் செய்ய மாநில அரசு சம்மதம் தேவை. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களே மாநிலத்தில் சொத்து வாங்க முடியும். இந்தியச் சட்டங்கள் தாமாக இங்கு அமலாகாது. மாநில அரசைக் கலந்தாலோசித்து ஜனாதிபதி தனி ஆணையிட வேண்டும்.அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசியலமைப்பு தொடர்பான மேலும் சில தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.  
                                     

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்