எல்லைக்காவல் படையில் டிரேட்ஸ்மேன் பணி!வாய்ப்பு

1074 பேருக்கு வாய்ப்பு!

பணி வாரியான காலியிடங்கள் விவரம்: சமையல்காரர்-332, சலவையாளர் - 131, முடி திருத்துநர் - 85, சுகாதாரப் பணியாளர் - 212, டெய்லர் - 26, கார்பென்டர் - 2, காப்லர்  -67, டிராஃப்ட்ஸ்மேன் - 1, பெயின்டர் - 5, வாட்டர் கேரியர்  -177, வெயிட்டர் - 29, மாலி - 1, கூஜி - 6.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் உள்ள பணியில் 2 ஆண்டுகள் பணியனுபவம் இருக்க வேண்டும். அல்லது ஓராண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்து ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். 2 ஆண்டு ஐ.டி.ஐ. டிப்ளமோ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1.8.2017-ம் தேதியில் 18 முதல் 23 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு உண்டு.

உடல்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 167.5 செ.மீ. உயரமும், மார்பளவு 78-83 செ.மீ. அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அளவில் அரசு விதிகளின்படி தளர்வு பின்பற்றப்படும்.
தேர்வு செய்யும் முறை: உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வின்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பப் படிவத்தையும் அனுமதி அட்டைப் படிவத்தையும் www.bsf.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதே மாதிரியில் வெள்ளைத்தாளில் விண்ணப்பப் படிவம் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசிநாள் 10.10.2017.
மேலும் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.