தமிழக அரசு மருத்துவமனைகளில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணி!



வாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் 744 உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இந்தப் பணியிடங்களுக்கான நியமனம் நடைபெற உள்ளது.

மயக்கவியல், உடற்கூறியல், உயிரி வேதியியல், தோல் மருத்துவம், காது - மூக்கு - தொண்டை, தடயஅறிவியல், பொது மருத்துவம், பொது அறுவைச்சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோயியல், கண் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், மருந்தியல், உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவம், உளவியல், கதிரியக்க மருத்துவம், கதிரியக்க நோய் அறிதல், சமூகத் தடுப்பு மருத்துவம், காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் ஆகிய 19 துறைகளில் 744 உதவி மருத்துவ நிபுணர்கள் இடங்கள் உள்ளன.

காலியிடங்கள் விவரம்

1. Anaesthesiology    : 136 Posts
2. Anatomy    :  20 Posts
3. Biochemistry    :  15 Posts
4. Dermatology    :  01 Post
5. ENT    :  40 Posts
6. Forensic Medicine    :  15 Posts
7. General Medicine    :  51 Posts
8. General Surgery    :  44 Posts
9. Obstetrics & Gynaecology    : 200 Posts
10. Ophthalmology    :  31 Posts
11. Orthopaedics    :  43 Posts
12. Paediatrics    :  71 Posts
13. Pharmacology    :  10 Posts
14. Physical and Rehab Medicine: 5 Posts
15. Psychiatry    :  01 Post
16. Radio Diagnosis    : 16 Posts
17. Radio Terapy    : 10 Posts
18. Social Peventive Medicine: 20 Posts
19. TB & Chest Disease    : 15 Posts

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலமாக மட்டுமே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி., டி.ஏ.பி(பி.ஹெச்) ஆகியோர் ரூ.375ம், மற்றவர்கள் ரூ.700ம் ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது. தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் மட்டுமே இடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.10.2017. தகுதிப் பட்டியல், நேர்காணல் நடைபெறும் தேதி உள்ளிட்டவை இணையதளத்தின் வாயிலாகப் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.