ரீஜினல் ரூரல் பேங்குகளில் 8298 OA பணி!



வாய்ப்புகள்

IBPS தேர்வுக்கு தயாராகுங்க!


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுப்பதற்காக வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க், புரபஷனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்திவருகிறது.

தற்போது ரீஜினல் ரூரல் பேங்குகள்(ஆர்.ஆர்.பி) என்று சொல்லப்படும் மண்டல கிராமிய வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான சி.டபுள்.இ. தேர்வை ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. இதன் மூலம் 56 கிராமிய வங்கிகளில் ஆபீஸ் அசிஸ்டன்ட்  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8298 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக
கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 14.8.2017.

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் மூலம் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடைபெறும்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வு நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் விரிவான விவரங்களை அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.                                                                   
வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி!

1102 பேருக்கு வாய்ப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் என்பது 1875ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்கம் குறித்த அறிவிப்புகள் மற்றும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறது. இதன் கீழ் சென்னை, மும்பை உள்ளிட்ட ஆறு மண்டல வானிலை மையங்கள் செயல்படுகின்றன.

இவற்றில் காலியாக உள்ள 1,102 அறிவியல் உதவியாளர் குரூப் ‘பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையமான ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்(எஸ்.எஸ்.சி.) நடத்துகிறது.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி., பட்டப்படிப்பில் இயற்பியலை ஒரு
பாடமாகப் படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐ.டி., / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) இதில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் எஞ்சினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 4.8.2017 தேதியின்படி, 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பு சலுகை உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் http://ssconline.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய்.

பெண்கள் மற்றும் எஸ்.சி. /எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்
களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 4.8.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 20.11.2017 முதல் 27.11.2017 வரை
மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.