உயர்கல்விக்கு உதவும் உதவித்தொகைகள்!



ஸ்காலர்ஷிப்

ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். முறையான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

இத்தகைய கல்வியைப் பெறுவதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசுகளும், பல்வேறு தனியார் அமைப்புகளும் ஏராளமான உதவித்தொகைகளை வழங்குகின்றன. இப்படி +2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெற வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி இனி பார்க்கலாம்.

இன்ஸ்பையர் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று அடிப்படை அறிவியல் துறைகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் பி.எஸ்.சி. அல்லது ஒருங்கிணைந்த முதுகலை ((Integrated M.Sc.) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தியா முழுவதும் +2 தேர்வில் முதல் 1 சதவீத இடத்தைப் பிடிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு மாநிலத்தில் அறிவியல் பிரிவு மாணவர்கள் ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தால், அதில் சிறப்பிடம் பெற்ற 1000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
எவ்வளவு: ஆண்டொன்றுக்கு ரூ.80 ஆயிரம் வீதம், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு.
விண்ணப்பிக்க: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.inspiredst.gov.in

கிஷோர் விக்யானிக் ப்ரோட்ஸகான் யோஜனா உதவித்தொகை

வழங்குவது: மத்திய அரசின் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை.
யாருக்குக் கிடைக்கும்:  +2 தேர்ச்சி பெற்று, அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகள்.

* பி.இ., பி.டெக்
* எம்.பி.பி.எஸ் 

இந்த ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 ஆயிரம் பேர் வீதம் 30 ஆயிரம் பேருக்கு.
எவ்வளவு: ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் முதல் ரூ.84 ஆயிரம் வரை.
தகுதி: பொதுத் திறனாய்வுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் +2 தேர்வில் எஸ்.சி / எஸ்.டி
பிரிவினர் 70% மதிப்பெண்ணும், பிறர் 80% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வியில் முதலாண்டில் எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினர் 50% மதிப்பெண்ணும், பிறர் 60% மதிப்பெண்ணும் பெறவேண்டும்.
விண்ணப்பிக்க: ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் நவம்பர் மாதங்களில் இதற்கான தேர்வு நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.kvpy.iisc.ernet.in/main/index.htm
 
இந்தியன் ஆயில் அகாடெமிக் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: இந்தியன் ஆயில் நிறுவனம்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும் பெறலாம். பொறியியல் மாணவர்கள் 300 பேருக்கும், மருத்துவ மாணவர்கள் 200 பேருக்கும் இது வழங்கப்படுகின்றது.
எவ்வளவு: மாதம் ரூ.3 ஆயிரம்.
விண்ணப்பிக்க: அக்டோபர் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
கூடுதல் விவரங்களுக்கு: www.iocl.com/Aboutus/Scholarships.aspx
 
ஃபெட் பேங்க் ஹோர்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஃபெடரல் பேங்க் ஆஃப் இந்தியா
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று, தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள கல்லூரிகளில் மருத்துவம், பி.இ, பி.டெக்., பி.எஸ்சி., வேளாண்மை, செவிலியர் படிப்பில் மெரிட் அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரளாவில் தலா 100 மாணவர்
களுக்குக் கிடைக்கும்.
எவ்வளவு: படிப்பு முடியும்வரை
வருடந்தோறும் 75 ஆயிரம்.
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் மாதத்திற்குள்
கூடுதல் விவரங்களுக்கு: www.federalbank.co.in

நார்த் சவுத் ஃபவுண்டேஷன்(NSF) ஸ்காலர்ஷிப்

வழங்குவது: நார்த் சவுத் ஃபவுண்டேஷன்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பி.வி.எஸ்சி., பி.எஸ்சி.,
வேளாண்மை, பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி. செவிலியர் படிப்பில் சேருபவர்களுக்கு மட்டும். ஆர்வமும், திறனும் உடைய 100 மாணவர்களுக்கு சாதி, மதம், இனம், நாடு வேறுபாடு இன்றி வழங்கப்படுகின்றது.
எவ்வளவு: மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை
விண்ணப்பிக்க: செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.northsouth.org/public/india/scholarships.aspx

ஃபேர் அண்ட் லவ்லி ஃபவுண்டேஷன் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஃபேர் அண்ட் லவ்லி ஃபவுண்டேஷன்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று இளங்கலை, அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவப் படிப்பில் சேரும் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர் அனைவருக்கும் கிடைக்கும்.
எவ்வளவு: வருடத்துக்கு ரூ.1 லட்சம். ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை
வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: அக்டோபர் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.fairandlovely.in/falfoundation/scholarship.html
 
நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாநில, தேசிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்
படுகின்றது. உயர்கல்வி பயிலும்போது மாநில, தேசிய, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கும் வழங்கப்படும். மொத்தம் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
எவ்வளவு: படிப்புக்கான முழுத்தொகையும்.
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் இறுதிக்குள்
கூடுதல் விவரங்களுக்கு: http://nsnis.org/
 
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஸ்காலர்ஷிப்
 
வழங்குவது: ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பொறியியல், புவியியல் மற்றும் புவி இயற்பியல் பட்டப்படிப்பில் சேரும் எஸ்.சி; எஸ்.டி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆண்டுக்கு 100 மாணவர்களுக்குக் கிடைக்கும்.
எவ்வளவு: மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை
விண்ணப்பிக்க: அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/Home/