BSNL நிறுவனத்தில் 2510 அதிகாரி பணி!



வாய்ப்புகள்

B.E., B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்., (BSNL - இந்திய தொடர்பாடல் கழக நிறுவனம் என அறியப்படுவது) இந்தியாவில் அரசுடமையான ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்தியாவின் மிகப் பெரும் நிலத்தின் வழியாக இணைப்புத் தொலைபேசி வழங்குவதும் இந்நிறுவனமேயாகும். இதன் தலைமையகம், புது தில்லியில், ஜன்பத் என்னுமிடத்தில் அமைந்துள்ள பாரத் சஞ்சார் பவனில் உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கௌரவமான மினி ரத்னா என்னும் தகுதி நிலையை இது பெற்றுள்ளது.

பி.எஸ்.என்.எல். இந்தியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய தொடர்பு சேவை நிறுவனமாகும். தொலைத்தொடர்புத் துறையில் நமது நாட்டின் முன்னோடி நிறுவனமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரந்து கிளைகளைக் கொண்டுள்ளது. டெலிபோன் என்றாலே பி.எஸ்.என்.எல். தான் என்ற நிலை முன்னர் இருந்தது.

அலைபேசிகளின் அசுர வளர்ச்சியால் இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் குறைத்ததுபோல் தோன்றினாலும், தனியார் நிறுவனங்களுக்கு ஈடாகத் தன்னுடைய சேவைகளிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தி முன்னேற்றங்களைத் தந்து, அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வகையில் இந்த நிறுவனத்தின் சேவை அமைந்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இத்தனை சிறப்புகளையும் கொண்ட இந்த நிறுவனத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் பிரிவில் (JTO) காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணி இடங்கள் ‘கேட்-2017 தேர்வின்’ அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 2 ,510 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும், சென்னை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அந்தமான் அண்ட் நிகோபார் 13 இடங்களும், அஸ்ஸாம் 166 இடங்களும், பிகார் 10 இடங்களும், சடீஸ்கர் 56 இடங்களும், குஜராத் 260 இடங்களும், ஹிமாச்சல் பிரதேஷ் 53 இடங்களும், ஜம்மு-காஷ்மீர் 84 இடங்களும், ஜார்கண்ட் 45 இடங்களும், கர்நாடகா 300 இடங்களும், கேரளா 330 இடங்களும், மகாராஷ்டிரா 440 இடங்களும், வடக்கு மண்டலம் 28 இடங்களும், வட கிழக்கு மண்டலம் I-ல் 91 இடங்களும், வடகிழக்கு-II-ல் 17 இடங்களும், ஒடிசா 94 இடங்களும், பஞ்சாப் 163 இடங்களும், உத்தரப்பிரதேசம் (மேற்கு) 117 இடங்களும், உத்தராஞ்சல் 10 இடங்களும், மேற்கு வங்கம் 93 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். 31.1.2017ம் தேதியை அடிப்படையாகக்கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி: பி.இ., பி.டெக். படிப்புகளில் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யும் முறை: நேர்காணல் தேர்வு மூலமாகத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இந்தக் கட்டணத்தை கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.extrenalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 6.3.2017 முதல் 6.4.2017ம் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் ‘கேட்’ -2017 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் சென்று தெரிந்துகொள்ளலாம்.

- எம்.நாகமணி