B.E., B.Tech முடித்தவர்கள் M.Sc. பயோடெக்னாலஜி படிக்கலாம்!



அறிவிப்பு

கர்நாடக அரசின் டிபார்ட்மென்ட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்டு பயோடெக்னாலஜி என்ற அமைப்பு 2001ம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்டு அப்ளைடு பயோடெக்னாலஜி என்ற கல்விநிறுவனத்தை நிறுவியது.

கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் பெங்களூருவில் உள்ள இக்கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்.சி். பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்டு பயோ டெக்னாலஜி படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஒரே பட்டப்படிப்பில் பயோடெக்னாலஜி மற்றும் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் என்ற இருவேறு படிப்புகளைக்கொண்ட  இந்தப் படிப்புக்கான மாணவ சேர்க்கை அறிவிப்பைத் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது இக்கல்வி நிறுவனம்.

கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட
பல்கலை அல்லது கல்லூரிகளில் பொறியியல், அறிவியல், கணிதம், புள்ளியியல், தாவரவியல் போன்ற ஏதேனும் இளநிலைப் படிப்பில் பி.எஸ்சி, பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.பார்ம் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். வயது வரம்பு ஏதும் கிடையாது.

தேர்வு முறை: ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு எழுதித் தேர்ச்சி  பெற்ற மாணவர்கள்  மதிப்பெண் அடிப்படையில்  பெங்களூருவில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கபட்டு அதன் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்
www.ibab.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.5.2017
இப்பட்டப்படிப்பு குறித்த மேலும் விவரங்களை அறிய மேலே குறிப்பிட்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட் குருசாமி