செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. சிறந்த சேவையாற்றும் தனிநபர், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களிடம் இருந்து 2016ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ‘இயக்குநர், சுற்றுச்சூழல் துறை’ என்ற பெயரில், 100 ரூபாய்க்கான டிடி, மூன்று புகைப்படங்களையும் இணைத்து, விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

சிறந்த ஆராய்ச்சிக்கான கட்டுரைக்கு, ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ், ஆங்கிலத்தில், தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவை மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பப் படிவங்களை ‘இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை’ என்ற முகவரியில் 28.2.2017 வரை பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு, www.environment.tn.nic.in அல்லது 044- 2433 6421 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 6.3.2017க்குள் சென்று சேர வேண்டும்.

பனாரஸ் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக இயங்கும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இந்த மத்தியப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.
படிப்புகள்: வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி, மேலாண்மை, மருத்துவ அறிவியல் ஆகிய 5 துறைசார்ந்த கல்வி நிறுவனங்களின்கீழ் நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பல் மருத்துவம், கலை, வணிகம், சட்டம், மேலாண்மை, அறிவியல், சமூக அறிவியல், கால்நடை அறிவியல் உட்பட 134 வகையான பிரிவுகளில் பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: தேர்வு செய்யும் படிப்புகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகளும், வயது வரம்பும் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.3.2017
மேலும் விவரங்களுக்கு: www.bhuonline.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

10ம் வகுப்பு தனித்தேர்வர் களுக்கு ஹால்டிக்கட் தயார்!

நடப்புக் கல்வியாண்டுக்கு நடைபெற உள்ள SSLC MARCH 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்  7.3.2017 ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் முறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை “Click” செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “SSLC EXAM MARCH 2017 - PRIVATE CANDIDATE - HALL TICKET PRINTOUT” என்ற வாசகத்தினை “Click” செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


ஐ.ஐ.எஸ்சி., அறிவியல் ஆராய்ச்சிப் படிப்பில் சேரலாம்!

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனம், இளநிலை மற்றும் முது
நிலைப் பட்டப்படிப்பில், 2017ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பட்டப்படிப்பு: நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி) பட்டப்படிப்பு
கல்வித்தகுதி: +2 பொதுத் தேர்வில் 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடமாகக் கொண்டு உயிரியல், புள்ளியியல், மின்னணுவியல், கணினி அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு பாடங்களை எடுத்துப் பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை: அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2017
முதுநிலைப் பட்டப்படிப்பு: எம்.டெக்., எம்.டிசைன், எம்.மேனேஜ்மென்ட், பிஹெச்.டி. மற்றும் ஒருங்கிணைந்த பிஹெச்.டி.
கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: கேட், ஜெஸ்ட், ஜாம், சி.இ.இ.டி., நெட்., ஜே.ஆர்.எஃப். போன்ற தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.3.2017
மேலும் விவரங்களுக்கு www.iisc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.