B.Sc., - Speech & Hearing AIISH படிக்கணுமா?



நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க...!

All India Institute of Speech and Hearing (AIISH), 1965 முதல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமாகும். கர்நாடக மாநிலம், மைசூர் அருகில் உள்ள மானஸகங்கோத்ரி பகுதியில் இயங்கும் இந்த நிறுவனம், பேசும் திறன் மற்றும் கேட்கும் திறனில் உள்ள குறைகளைக் களையும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதோடு இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பட்டப் படிப்புகளையும் வழங்குகிறது. ேவலைவாய்ப்பு மிகுந்த அப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. அந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இதுபற்றி விரிவாக விளக்குகிறார் கல்வியாளரும், ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமியின் இயக்குநருமான ஆர்.ராஜராஜன்.

அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் படிப்புகள்

B.Sc., - Speech & Hearing - 4 ஆண்டுகள்
M.Sc., Audiology -2 ஆண்டுகள்
M.Sc., Speech -Language Pathology  - 2 ஆண்டுகள்
M.S.Ed Hearing Impairment - 1 ஆண்டு

மைசூர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் படிப்புகள்Ph.D. [Audiology] [JRF] - 3 ஆண்டுகள்

Ph.D. Speech & Language Pathology [JRF] - 3 ஆண்டுகள்

நுழைவுத்தேர்வு இல்லாமல் நேரடியாக மாணவர் சேர்க்ைக நடத்தப்படும் படிப்புகள்

B.S.Ed. Hearing Impairment - 1 ஆண்டு
PG Diploma in Clinical Linguistics for Speech Language Pathology - ஒரு ஆண்டு
PG Diploma in Forensic Speech Sciences & Technology- ஒரு ஆண்டு. இப்படிப்பை ஆன்லைன் வழியாக படிக்கலாம்.
M.S.Ed. Hearing Impairment- 1 வருடம்
Post Doctoral Fellowship- 2 வருடங்கள்

யாரெல்லாம் நுழைவுத்தேர்வை எழுதமுடியும்?

நான்கு ஆண்டு கால B.Sc., Speech & Hearing படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுத +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இந்தப் படிப்புக்கு மொத்தம் 62 இடங்கள் மட்டுமே உள்ளன. போட்டி கடுமையாகவே இருக்கும். தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 800 ரூபாய். எஸ்.சி/ எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு 275 ரூபாய். நுழைவுத் தேர்விற்கு http://aiishmysore.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இண்டர்நெட் வசதி இல்லாத சூழலில், Director, All India Institute of Speech & Hearing, Manasagangothri, Mysore -570 006  என்ற முகவரிக்கு தேர்வுக் கட்டணத்துடன் 50 ரூபாய் கூடுதலாக அனுப்பி விண்ணப்பத்தைப் பெறலாம். படிப்பில் இணையும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 800 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். M.Sc உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை எழுத மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களே தகுதியுடையவர்கள் ஆவர்.

முக்கிய நாட்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.5.2015
அஞ்சலில் விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள்: 29.5.2015
நுழைவுத்தேர்வு  நடைபெறும் நாள்: 12.6.2015

நுழைவுத்தேர்வில், +2 உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு
The Director, All India Institute of Speech & Hearing, Manasagangothri, Mysore-570 006
Ph : 0821-2900007,  2502102

- வெ.நீலகண்டன்