மருந்தியல் படிப்புக்கு மகத்தான எதிர்காலம்



நோய்களை நீக்கும் மருந்துகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவே மருந்தியல் (Pharmacology). மருந்திலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன? அவை உயிரினத்தின் உடலினுள் சென்று எவ்வாறு வேலை செய்கின்றன? உடலிலுள்ள எந்த உறுப்பு அல்லது திசு அல்லது செல், மருந்தை உறிஞ்சி வேதிமாற்றமடையச் செய்து நோயை நீக்குகிறது உள்ளிட்ட வினாக்களுக்கு விடை தரும் துறையாக விளங்குகிறது இது. இந்தத் துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், துறையின் முன்னோடிகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

“இயற்கையாகக் கிடைக்கும் மருந்துப் பொருட்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட மருந்துகள், மனிதனின் உடலுக்குள்ளேயே இயற்கையாகத் தோன்றும் நோய் எதிர்பொருட்கள் போன்றவற்றின் தன்மை, செயல்படும் விதம் ஆகியவற்றை உணர்ந்துகொள்ளவும், மனித குலத்துக்கு எதிரான நோய்களைத் தீர்க்கும் புதிய மருந்துகளை கண்டறியவும் துணைபுரிகின்ற இன்றியமையாத துறையே மருந்தியல். புதிது புதிதாக உருவாகும் நோய்களின் எண்ணிக்கையும், அதற்கு எதிராக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையும் பெருகி வருகின்ற இந்த சூழலில் இத்துறையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. உயிரோடு விளையாடும் போலி மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதைத் தடுக்கவும் இத்துறை நிபுணர்களின் பங்களிப்பு அவசியம். அதனால் மிகுந்த வேலைவாய்ப்புள்ள இத்துறையை மாணவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம்.

மருந்தியல் துறை சார்ந்த பிரிவுகள் / படிப்புகள்

Neuro pharmacology -  நரம்பு மண்டல மருந்தியல்
Renal pharmacology - சிறுநீரக மருந்தியல்
Chemical biology - உயிரி வேதியியல்
Pharmaco dynamics - மருந்து இயக்கவியல்
Pharmaco kinetics -  மருந்துச் செயலியல்
Clinical Pharmacology -  நோய் கண்டறி மருந்தியல்
Psycho pharmacology - உளவியல் மருந்தியல்
Pharmaco genetics - மரபிய மருந்தியல்
Toxicology -  நச்சுவியல்
Behavioral pharmacology  -  நடத்தை மருந்தியல் இப்பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc., M.Sc, M.Phil, Ph.D., B.S., M.S., Diploma, B.Tech, D.Phil, D.Sc., இந்தியாவில் மருந்தியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

யுனிவர்சிட்டி ஆஃப் அம்பேகான் புத்ருக், மகாராஷ்டிரா
ப்ரவரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், மகாராஷ்டிரா
மணிப்பால் யுனிவர்சிட்டி, கர்நாடகா
டாக்டர் என்.டி.ஆர். யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ், விஜயவாடா
பூனா காலேஜ் ஆஃப் பார்மஸி, புனே
எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி, சென்னை
பஞ்சாப் யுனிவர்சிட்டி, பஞ்சாப்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
அல் அமீன் காலேஜ் ஆஃப் பார்மசி, பெங்களூரு
கஸ்தூரிபாய் மெடிக்கல் காலேஜ், மணிப்பால்

மருந்தியல் துறையில் உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

யுனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து (www.cam.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் லிவர்பூல், இங்கிலாந்து (www.liv.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் சௌத்தாம்டன், இங்கிலாந்து (www.southampton.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் பாத், இங்கிலாந்து (www.bath.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மௌத், இங்கிலாந்து (www.port.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் மிக்ஸிகன், அமெரிக்கா (www.umich.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து (www.ox.ac.uk)
யேல் யுனிவர்சிட்டி,  இங்கிலாந்து (www.yale.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் டொரன்டோ, கனடா (www.toronto.ca)
யுனிவர்சிட்டி ஆஃப் அல்பெர்டா, கனடா (www.ualberta.ca)

மருந்தியல் துறையில் சாதித்த இந்திய அறிஞர்கள் சிலர்...

பேராசிரியர் கே.கோயல்
பேராசிரியர் பி.எல்.பாண்டே
பேராசிரியர் அமித் சிங்
பேராசிரியர் அன்சுமன் திரிகுணாயத்
பேராசிரியர் ப்ரிஜேஷ் குமார்
பேராசிரியர் சுரேஷ் ப்ரோஹித்
பேராசிரியர் பி.பகவதியம்மை
பேராசிரியர் ஜி.பத்மஜா நாயர்
பேராசிரியர் டீ.ஜே.சாக்கோ
 பேராசிரியர் ஏ.பரமேஸ்வரன்

மருந்தியல் துறையில் சாதித்து உலகப் புகழ்பெற்ற வல்லுநர்கள் சிலர்...

பேராசிரியர் வில்லியம் விதரிங், இங்கிலாந்து
பேராசிரியர் ருடால்ப் பக்ஹீம், இங்கிலாந்து
பேராசிரியர் நிக்கோலஸ் கல்பெப்பர், இங்கிலாந்து
பேராசிரியர் பி.வல்லான்ஸ், இங்கிலாந்து
பேராசிரியர் டி.ஜி.ஸ்மார்ட், இங்கிலாந்து
பேராசிரியர் டி.சி.ப்ராட்டர், அமெரிக்கா
பேராசிரியர் ஜே டேலி, அமெரிக்கா
பேராசிரியர் எம்.ஏ.ஹோலிங்கர், இங்கிலாந்து
பேராசிரியர் ஹெச்.பி.ரேங், இங்கிலாந்து
பேராசிரியர் எம்.ஃபரீத், எகிப்து.

மருந்தியல் துறை ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும், ஊக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் சில...

பிரிட்டிஷ் ஃபார்மகாலஜிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து
அமெரிக்கன் சொசைட்டி ஃபார் பார்மகாலஜி, அமெரிக்கா
இண்டியன் ஃபார்மகாலஜிக்கல் சொசைட்டி, இந்தியா
ஃபார்மகாலஜி அசோசியேஷன், ஆஸ்திரேலியா
கனடியன் சொசைட்டி ஆஃப் ஃபார்மகாலஜி, கனடா
யூரோப்பியன் பிஹேவியரல் ஃபார்மகாலஜி சொசைட்டி, இங்கிலாந்து
சௌத் ஆப்ரிக்கன் சொசைட்டி ஃபார் ஃபார்மகாலஜி, தென் ஆப்ரிக்கா
ஸ்விஸ் சொசைட்டி ஆஃப் ஃபார்மகாலஜி, சுவிட்சர்லாந்து
ஹாங்காங் ஃபார்மகாலஜி சொசைட்டி, ஹாங்காங்

மருந்தியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள், பதக்கங்கள், விருதுகள் சில...

தி வெல்கம் மெடல், இங்கிலாந்து
தி ஜனேகா ப்ரைஸ், அபெர்டீன், இங்கிலாந்து
டில்லோன் மெமோரியல் ப்ரைஸ், இங்கிலாந்து
டாக்டர் ஜேம்ஸ் மேக்கட்ச்சியோன் மெடல், கனடா
லாடர் ப்ரண்டோன் ப்ரைஸ், இங்கிலாந்து
யங் சயின்டிஸ்டு அவார்ட், இந்தியா
பட்நாகர் ப்ரைஸ், இந்தியா
தன்வந்த்ரி மெடல், இந்தியா
ஜான் ஜே.ஏபல் ப்ரைஸ், அமெரிக்கா

மருந்தியல் துறை பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

மினிஸ்ட்ரி ஆஃப் ஆயுஷ், மத்திய அரசு, புது டெல்லி
மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபன்ஸ், மத்திய அரசு, புது டெல்லி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்
மருந்தியல் துறையைக் கொண்ட கல்வி

நிறுவனங்கள்

மருந்தியல் துறையைக் கொண்ட ஆய்வு நிறுவனங்கள்
தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்கள்
மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, இந்திய அரசு
டிபார்ட்மென்ட் ஆஃப் ஃபாரன்சிக் சயின்ஸ், மாநில, மத்திய அரசுகள்

அடுத்த இதழில் சமூகவியல் (Sociology)

தொகுப்பு: வெ.நீலகண்டன்