கேம்பஸ் நியூஸ்



திறந்தநிலை பல்கலையில் பிஎச்.டி.!

பிஎச்.டி. ஆராய்ச்சிக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இதில் சேர, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே சமயம், NET/SLET போன்ற தேர்வுகளில் தேறியவர்களுக்கு, நுழைவுத்
தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும், வெவ்வேறு எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.

முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5, 2015.
நுழைவுத்தேர்வு நடக்கும் நாள்: ஜனவரி 24, 2015.
கூடுதல் விவரங்களுக்கு: www.tnou.ac.in.


ரெசிடென்ஷியல் மேலாண்மை படிப்பு



இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மேலாண்மைத் துறையில், எக்சிகியூடிவ் போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (EPGP) எனப்படும்  ஒரு வருட ரெசிடென்ஷியல் படிப்பு வழங்கப்படவுள்ளது. இப்படிப்பில், மொத்தம் 5 பகுதிகள் உள்ளன.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர், ஒரு அங்கீகரிக்கத்தக்க பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு, செல்லத்தக்க CAT அல்லது GMAT மதிப்பெண்களையும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 8, 2015.
நேர்முகத் தேர்வு: 2015 ஜனவரி 24 முதல் 26 வரை.
வகுப்புகள் துவங்கும் நாள்: மே 5, 2015.
கூடுதல் விவரங்களுக்கு: www.iimidr.ac.in.


IPE கல்வி நிறுவனத்தில் முதுநிலை மேலாண்மை


ஐதராபாத்திலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் என்டர்பிரைஸ் (IPE) கல்வி நிறுவனம், முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்  சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: இளநிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு 45%  போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையிலும், ஆஃப் லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு மதிப்பெண்கள், குழு கலந்தாய்வு, நேர்முகத்  தேர்வு மற்றும் அகடமிக் ரெக்கார்டு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: டிசம்பர் 31.
கூடுதல் விவரங்களுக்கு: www.ipeindia.org

சூரத்கல் என்.ஐ.டி.யில் எம்.பி.ஏ.


2015-2017ம் கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ. படிப்பில் மாணவர் சேர்க்கையை, என்.ஐ.டி., சூரத்கல் துவக்கியுள்ளது.

கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு 55% இருந்தால் போதும். CAT அல்லது GMAT ஆகிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும், மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600/- எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150/-

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2015 ஜனவரி 12.
மேலதிக தகவல்களுக்கு: www.nitk.ac.in.


விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக்.



வேலூரில் இருக்கும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் (இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல்) ஆகிய பாடப்பிரிவுகள் எடுத்துப் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதனுடன் விண்ணப்பக் கட்டணம் ரூ.940/- ஐ வரைவோலையாக இணைக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE2015 நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.VITEEE நுழைவுத்தேர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு: http://www.vit.ac.in.

இந்திய மாணவர்களுக்கு பிரிட்டன் உதவித்தொகை


Chevening Gurukul Scholarships என்ற பெயரிலான ஒரு உதவித்தொகை திட்டத்தை, இந்திய மாணவர்களுக்காக, பிரிட்டன்  வழங்குகிறது. 2015-2016ம் ஆண்டுக்கானது இந்த உதவித்தொகைத் திட்டம்.திறமையும், தகுதியும் கொண்ட, வருங்காலத் தலைவர்களாக உருவாகும் ஆற்றலைப் பெற்று, பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை  வழங்கப்படுகிறது. வெறும் நிதியுதவி மட்டும் வழங்கப்படவில்லை. அதனோடு இணைந்து, செல்வாக்கு வாய்ந்த உலகளாவிய நெட்வொர்க்கின் ஒரு அங்கமாக  இருக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் 12 மாணவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு லண்டன் கிங்ஸ் கல்லூரியில், விரிவான முறையிலான, 12 வார  கால ரெசிடென்ஷியல் கோர்ஸ் வழங்கப்படும். இதற்காக அந்த மாணவர்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு உதவித்தொகையும், படிப்புக் கட்டணம், தங்குமிட செலவினம், வாழ்க்கைச் செலவினம், விமானப் பயண கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 6, 2015.
விரிவான விவரங்களுக்கு: www.chevening.org.