சி.ஆர்.பி.எஃப்-ல் 3021 வேலை!



விண்ணப்பிக்க ரெடியா?

சி.ஆர்.பி.எஃப் என்று சொல்லப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 3021 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களுக்கு  இது நல்ல வாய்ப்பு. மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை ராணுவ அமைப்பாக விளங்குகிறது. தேசியக் காவல் பணியில் இந்தப் படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

 தற்போது இந்த போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன்) பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு  வெளியாகி உள்ளது. சி.ஆர்.பி.எஃப்-ன் பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 3021 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்திற்கு மட்டும் 132 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 10ம் வகுப்பு படித்த, ஆண்-பெண் இருபாலரும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தை உள்ளடக்கிய மேற்குப் பிரிவு பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் இதோ...

வயது வரம்பு: சி.டி./டிரைவர் பணி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2.1.1988 மற்றும் 1.1.1994  ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
 மற்ற பணி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 2.1.1992 மற்றும் 1.1.1997 ஆகிய தேதிகளுக்கு  இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: சி.டி./டிரைவர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மற்ற பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உடல்தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும் பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு 80  செ.மீ அளவும், 5 செ.மீ விரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன், உடல், உளநலன்களும் பரிசோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறமைத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் 4 நிலைகளில் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.50/- கட்டணமாக இந்திய அஞ்சல் முத்திரை, டி.டி., செக் ஆகிய ஏதேனும் ஒன்றாக  இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். தமிழக விண்ணப்பதாரர்கள் THE DIGP, GROUPCENTRE, CRPF, AVADI, CHENNAI, TAMILNADU, PIN600065 என்ற முகவரிக்கு தேவையான சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 20.12.2014 தேதிக்குள் சென்றடைய வேண்டும். மேலும் விரிவானவிவரங்களுக்கு www.crpf.gov.in www.crpf.gov.in மற்றும் www.crpf.nic.in ஆகிய இணையதளங்களைக் காண்க.