பாராமெடிக்கல் படித்திருக்கிறீர்களா...?ரயில்வே அழைக்கிறது!



இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றாக இருப்பது ரயில்வே துறை. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட ரயில்வே துறை இந்தியாவை ஒரே கோட்டில் இணைக்கிறது. தினமும் பலகோடிப் பேர் ரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இத்துறையில் பணியாற்றுவது பெரும்பாலானோருக்கு பெரும் கனவாகவே இருக்கிறது. அப்படியான இளைஞர்களுக்கான நேரமிது. இந்திய ரயில்வேயில் பாரா மெடிக்கல் பிரிவில் 963 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நர்ஸ் உள்ளிட்ட துணை மருத்துவ பணியிடங்கள் பலவும் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக, ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு 436 பேரும், மலேரியா ஆய்வாளர் (கிரேடு-3) பணிக்கு 227 பேரும், பார்மசிஸ்ட் பணிக்கு 168 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஈ.சி.ஜி. டெக்னீஷியன் 26 பேரும், ரேடியோ
கிராபர் 25 பேரும், லேப் சூப்பரின்டெண்டன்ட் (கிரேடு-1) 26 பேரும், லேப் சூப்பரின் டெண்டன்ட் (கிரேடு-3) 31 பேரும், ஹீமோ டயாலிசிஸ் டெக்னீஷியன் ஒருவரும், கார்டியாலஜி டெக்னீஷியன் 4 பேரும், ஆடியோலஜிஸ்ட் மற்றும் தெரபிஸ்ட் ஒருவரும், பிசியோதெரபிஸ்ட் 3 பேரும், டிஸ்ட்ரிக்ட் எக்ஸ்டன்ஷன் எஜுகேட்டர் 3 பேரும், டயட்டீஷியன் 3 பேரும், ஆப்தால்மிக் டெக்னீஷியன் மற்றும் ஆப்டீசியன் ஒருவரும், ஃபீல்ட் ஒர்க்கர்(ஆண்) ஒருவரும், டெண்டல் ஹைஜீனிஸ்ட் ஒருவரும், ஆப்டோமெட்ரிஸ்ட் 2 பேரும், ஆடியோமெட்ரி டெக்னீஷியன் 2 பேரும், எக்ஸ்ரே டெக்னிஷியன் ஒருவரும், கேத் லேப் டெக்னீஷியன் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியமான ஆர்.ஆர்.பி. மூலம் நடக்கவுள்ள இந்த ஆட்தேர்வு, சென்னை, அகமதாபாத், அஜ்மீர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கவுஹாத்தி, ஜம்மு-ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாஃபர்பூர், பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் நடக்கிறது. இதில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்திற்கும் கணிசமான பணியிடங்கள் இருக்கின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய குடியுரிமையோடு பின்வரும் தகுதிகளையும் பெற்றவர்கள் இந்தப் பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஸ்டாஃப் நர்ஸ் விண்ணப்பதாரர்கள் ஜெனரல் நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. வேதியியல் படிப்புடன் ஒரு வருட ஹெல்த்/சானிடரி இன்ஸ்பெக்டர் படிப்பு படித்தவர்கள் ஹெல்த்-மலேரியா இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவருட அனுபவம் அவசியம். பார்மசி ரேடியோகிராபி, எக்ஸ்ரே டெக்னீசியன், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி போன்ற துணை மருத்துவ படிப்புகளைப் படித்தவர்கள் அந்தந்த பணியிடங்களுக்கும் தொடர்புடைய பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விரிவான விபரங்களுக்கு www.rrbchennai.gov.in என்ற ரயில்வே இணையதளத்தைப்  பார்க்கலாம்.

ஸ்டாஃப் நர்ஸ் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்குக் குறையாமலும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பொது மற்றும் ஓ.பி.சி. ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாகவோ, தபால் அலுவலகத்திலோ 28.11.14க்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் ரயில்வேயின் அந்தந்த மண்டல இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வசிப்பவர்கள் http://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, புகைப்படம், கையொப்பம் மற்றும் பெருவிரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை தேவையான இடத்தில் ‘அப்லோடு’ செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், பிற்கால உபயோகத்திற்கு பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம். நகல் எதையும் அனுப்ப வேண்டியதில்லை. விண்ணப்பங்கள் 1.12.14க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். lபணியிட எண்ணிக்கை சம்பளப் பட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு

Staff Nurse: 436 (UR266, SC58, ST60, OBC54)
Pay Scale: 930034800 + GP 4600
Health - Malaria Inspector Gr.III: 227
(UR126, SC34, ST24, OBC43)
Pay Scale: 930034800 + GP 4200
Pharmacist  III: 168 (UR90, SC28, ST19, OBC31)
Pay Scale: 520020200 + GPRs. 2800
ECG Technician: 26 (UR5, OBC1)
Pay Scale: 520020200 + GP 2400
Radiographer: 25 Posts (UR13, SC7, ST3, OBC2)
Pay Scale: 520020200 + GP 2400
Lab Superintendent Gr I I: 26 Posts
(UR16, SC3, OBC7)
Pay Scale: 520020200 + GP 2000
Lab Superintendent Gr III: 31 Posts
(UR18, SC6, ST3, OBC4)
Pay Scale: 930034800 + GP 4200
Haemo Dialysis Technician: 1 (UR)
Pay Scale: 930034800 + GP 4200
Cardiology Technician: 4 (UR3, OBC1)
Pay Scale: 520020200 + GP 2400
Audiologist cum  Speech Therapist: 1 (UR)
Pay Scale: 520020200 + GP 2800
Physiotherapist: 3 (UR1, SC1, OBC1)
Pay Scale: 930034800 + GP 4200
District Extension Educator: 3 (UR2, OBC1)
Pay Scale: 930034800 + GP 4200
Dietician: 3 (UR2, OBC1)
Pay Scale: 930034800 + GP 4200
Ophthalmic Technician cum Optician: 1 (UR)
Pay Scale: 520020200 + GP 2400
Male Field Worker: 1 (UR)
Pay Scale: 520020200 + GP 1900
Dental Hygienist: 1 (UR)
Pay Scale: 930034800 + GP 4200
Optometrist:  2 (UR1, OBC1)
Pay Scale: 930034800 + GP 4200
Audiometry Technician: 2 (UR1, OBC1)
Pay Scale: 520020200 + GP 2400
XRay Technician: 1 (SC1)
Pay Scale: 520020200 + GP 2800
Cath Lab Technician: 1 (UR)
Pay Scale: 930034800 + GP 4200