பூச்சியியல் படித்தால் புகழ் பெறலாம்



பூச்சியினங்களின் அமைப்பு, செயல்பாடு, இனப்பெருக்கம், அவற்றுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வாழ்க்கை சுழற்சி பற்றி படித்தறியும், விலங்கியல் மற்றும் வேளாண் துறையின் ஒரு பிரிவே பூச்சியியல் (Entomology). இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், இத்துறையில் சாதித்த சாதனையாளர்கள், மாணவர்களை ஊக்கு விக்கும் அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் இன்ஸ்பையர் ஃபெல்லோ முனைவர் உதயகுமார்.

“உலகில் அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் பூச்சிகள் தான். சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகள் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. உயிரினங்களுக்கு உணவை வழங்கும் தாவர இனங்களின் மலர்களை பூச்சி களே மகரந்தச்சேர்க்கை மூலம் காய்களாகவும், கனிகளாகவும், விதைகளாகவும் மாற்றுகின்றன. மாறிவரும் சுற்றுச்சூழல் காரணிகளால் எண்ணற்ற பூச்சியினங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிந்து வருகின்றன. பூச்சிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை. நன்மைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமானால் நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும். பூச்சிகளைக் காப்பாற்ற எண்ணற்ற ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் படிப்பே பூச்சியியல். உயிரியல் மற்றும் வேளாண் அறிவியலின் ஒரு அங்கமான இந்தத்துறை மிகச்சிறந்த எதிர்காலத்தைக் கொண்டதாகும். மாணவர்கள் இப்படிப்பை தாராளமாக தேர்வு செய்யலாம்.

பூச்சியியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்

* Coleopterology  கோலியாப்டீராலஜி
* Dipterology  டிப்டீராலஜி
* Hemipterology - ஹெமிப்டீராலஜி
* Lepidopterology - லெபிடோப்டீராலஜி
* Melittology - மெலிட்டாலஜி
* Myrmecology - மெர்மிகாலஜி
* Orthopterology - ஆர்த்தோப்டீராலஜி
* Trichopterology - டிரைக்கோப்டீராலஜி
* Vespology - வெஸ்பாலஜி
* Forensic Entomology - ஃபாரன்சிக் எண்டமாலஜி
* Clinical Entomology AOQ கிளினிக்கல் எண்டமாலஜி
* Agriculturally Important insects-அக்ரிகல்ச்சுரலி இம்பார்ட்டண்ட் இன்செக்ட்ஸ்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்


    B.S., M.S., B.Sc.,  M.Sc.,  Ph.D., D.Phil., D.Sc.,
    Diploma in Clinical Entomology
    Diploma in Agriculturally Important insects
சிறந்த பூச்சியியல் துறையைக் கொண்ட

இந்திய கல்வி நிறுவனங்கள் சில...

* பூச்சியியல் பிரிவு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* எண்டமாலஜி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லயோலா காலேஜ், சென்னை
* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை
* டிபார்ட்மெண்ட ஆஃப் மெடிக்கல் எண்டமாலஜி, இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச், புதுடெல்லி
* இண்டியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடெல்லி
* ஆனந்த் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, குஜராத்
* ஹரியானா அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, ஹிஸ்ஸார், ஹரியானா
* காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர், புனே
* ஜுவாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, கோல்கட்டா
* காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர், இராஜஸ்தான்

சிறந்த பூச்சியியல் துறையைக் கொண்ட சர்வதேச கல்வி நிறுவனங்கள் சில...

* பென்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.psu.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா, அமெரிக்கா  (www.arizona.edu)
* வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா  (www.washington.edu)
* ஐயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா  (www.iastate.edu)
* ஓரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.uoregon.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் குயின்ஸ்லாண்ட், ஆஸ்திரேலியா (www.uq.edu.au)
* யுனிவர்சிட்டி ஆஃப் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா (www.unsw.edu.au)
* நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் (www.nus.edu.sg)
* ஹொக்கைடோ யுனிவர்சிட்டி, ஜப்பான் (www.oia.hokkaido.ac.jp)

பூச்சியியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வாளர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தரவும் உலக அளவில் செயல்படும் அமைப்புகள் சில...

* அமேச்சியர் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கா
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் கனடா, கனடா
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் ஜப்பான், ஜப்பான்
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, இந்தியா
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அல்பெர்ட்டா, அல்பெர்ட்டா
* எண்டமாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இங்கிலாந்து, இங்கிலாந்து
* நெதர்லாண்ட்ஸ் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, நெதர்லாந்து
* இராயல் பெல்ஜியன் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, பெல்ஜியம்
* இராயல் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, லண்டன், இங்கிலாந்து

பூச்சியியல் துறையில் சாதித்து புகழ்பெற்ற இந்திய வல்லுநர்கள் சிலர்...

* பேராசிரியர் ஜி.சி. பட்டாச்சார்யா
* பேராசிரியர் ஹரிஸ் காங்கார்
* பேராசிரியர் எம்.எஸ்.மணி
* பேராசிரியர் எஸ்.மாலிக்
* பேராசிரியர் டி.சி.நரேந்திரா
* பேராசிரியர் டி.பி.ரெட்டி
* பேராசிரியர் பி.கே.டிகாடர்
* பேராசிரியர் ஆர்.எஸ்.யாதவ்
* பேராசிரியர் எம்.எஸ்.தூரியா
* பேராசிரியர் டி.என்.ஆனந்தகிருஷ்ணன்

பூச்சியியல் துறையில் சாதித்து உலகப் புகழ் பெற்ற வல்லுநர்கள் சில
ர்...

* பேராசிரியர் வில்லியம் கிர்பி
* பேராசிரியர் வில்லியம் ஸ்பென்ஸ்
* பேராசிரியர்  டார்வின்
* பேராசிரியர்  ஜீன் ஹென்றி பாப்ரே
* பேராசிரியர் விளாடிமிர் நபோகோவ்
* பேராசிரியர் கார்ல் வோன் ப்ரிஷ்க் (நோபல் பரிசு பெற்றவர்)
* பேராசிரியர் ஈ.ஓ. வில்சன்
* பேராசிரியர் வில்லியம் பீட்டர்சன்
* பேராசிரியர் கிரஸர்ட் ஆஸ்ப்ரின்

பூச்சியியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் பரிசுகள்/ விருதுகள்/ பதக்கங்கள்...

* ஜே. ஓ. வெஸ்ட்உட் மெடல், இராயல் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, லண்டன்
* தி மார்ஸ் அவார்டு, இராயல் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, லண்டன்
* விக்கில்ஸ்வொர்த் அவார்டு, இராயல் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, லண்டன்
* தி நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ், அமெரிக்கா
* எர்னஸ்ட் ஜூங்கர் ப்ரைஸ், ஜெர்மனி
* தி மாக்கெர்ராஸ் மெடல், ஆஸ்திரேலியன் எண்டமாலஜிக்கல் சொசைட்டி, ஆஸ்திரேலியா
* சி. கோர்டோன் ஹெவிட் அவார்டு, எண்டமாலஜிக்கல் சொசைட்டி, ஆஃப் கனடா, கனடா
* தி ஜேம்ஸ் புஸ்வைன் மெமோரியல் மெடல் அண்டு ப்ரைஸ், இங்கிலாந்து
* தி எண்டமாலஜிக்கல் பவுண்டேசன் அவார்டு, இந்தியா
* டைலர் ப்ரைஸ், யுனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிபோர்னியா, அமெரிக்கா

பூச்சியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் சில...


* டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் அண்டு டிபார்ட்மெண்ட், புதுடெல்லி
* கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி
* இண்டியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடெல்லி
* அக்ரிகல்ச்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மெண்ட் போர்டு, புதுடெல்லி
* டிபார்ட்மெண்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, புதுடெல்லி
* டிபார்ட்மெண்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி
* இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச், புதுடெல்லி
* மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி
* இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்
* மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்.

- அடுத்த இதழில் வகைப்பாட்டியல் (Taxonomy)
தொகுப்பு: வெ.நீலகண்டன்