ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் வேலை!



399 பேருக்கு வாய்ப்புஇந்திய ராணுவத்துக்குத் தேவையான பீரங்கிகளை தயாரித்து வருகிறது ஆவடி டேங்க் ஃபேக்டரி. பீரங்கிப் படையில் பலவிதமான பீரங்கிகள் உள்ளன. இவற்றைக் கொண்டு ராணுவம் பல்வேறு போர்களை சந்தித்து எதிரிகளை திக்குமுக்காடவைக்கிறது. இங்கு ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மூலம் நவீன ரக பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன. இங்கு சுமார் 399 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் பணியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பள விவரம்:

பே பேண்ட் ரூ.5,200-20,200/- மற்றும் கிரேடு பே ரூ.1,800/-
செமி-ஸ்கில்டு கிரேடில் கீழ்க்கண்ட பதவிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 3.11.2014 வரை பதிவு செய்யலாம்.

பதவியின் பெயர் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கை:
MACHINIST  224
FITTER  64
FITTER  AFV  20
WELDER  49
ELECTRICIAN  19
FITTER ELECTRONICS  6
EXAMINER  FITTER  6
EXAMINER MACHINIST  5
EXAMINER ELECTRICIAN 3
EXAMINER FITTER ELECTRONICS  2
1EXAMINER WELDER  1

  கனரக வாகனங்கள் தொழிற்சாலை, ஆவடி மற்றும் இதே போன்ற இதர ஃபாக்டரிகளின் முன்னாள் - டிரேடு அப்ரண்டிஸ்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 வயது வரம்பு: விண்ணப்பிப்பதற்கான முடிவு தேதி அன்றுபடி பொது விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பு 18-32 வருடம் ஆகும். இதர பிரிவுகளுக்கு தற்போதுள்ள அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆர்டினன்ஸ் பாக்டரிகளின் முன்னாள்-டிரேடு அப்ரண்டிஸ்களுக்கு அப்ரண்டிஸ்ஷிப் மேற்கொள்ளும் காலம் வரை வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 கல்வித் தகுதி:

தேவையான கல்வித் தகுதி மெட்ரிகுலேஷன்+நேஷனல் கவுன்சில் ஆஃப் டிரேட்ஸ் ஃபார் வொகேஷனல் டிரெயினிங் (NCVT) அவர்களால் வழங்கப்பட்ட நேஷனல் டிரேடு சர்டிபிகேட் (NTC)/ நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் சர்டிபிகேட் (NAC) வைத்திருக்க வேண்டும்.  ஃபிட்டர், வெல்டர், ஃபிட்டர் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட் பதவிகளுக்கு: சம்பந்தப்பட்ட டிரேடில் NCVT அவர்களால் வழங்கப்பட்ட NAC/NTC சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். பிட்டர் AFV பதவிக்கு: பிட்டர் டிரேடில் NCVT அவர்களால் வழங்கப்பட்ட NAC/NTC சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். எக்சாமினர் பதவிக்கு: பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீஷியன், பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் டிரேடுகளில் NCVT அவர்களால் வழங்கப்பட்ட NAC/NTC சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை: www.iregister.org/hvforeg என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விரிவான விளம்பரத்தில் அடங்கிய எல்லா ஷரத்துகள்/விதிமுறைகள்/நிபந்தனைகள்/தகவல்களை கவனமாக படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.    

15. 4000  பெண்களுக்கு....  1000  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தயார்  மிஸ் பண்ணாதீங்க!

நம் நாட்டின் உயர்கல்வி அமைப்பில் கல்லூரிக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் இரண்டு அமைப்புகளிடம் உள்ளது. ஒன்று யு.ஜி.சி என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு.  அடுத்து AICTE என்று அழைக்கப்படும் ‘ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன்’ அமைப்பிற்கு. பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டுமானால் கிமிசிஜிணிதான் அனுமதி வழங்க  வேண்டும்.  

இந்த அமைப்பு கல்விக்கான உதவித் தொகையை, பிரகதி (PRAGATI) எனப்படும் திட்டத்தின்கீழ் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த இரண்டு உதவித்தொகை திட்டங்களுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கான (PRAGATI)  உதவித்தொகை:


இந்த ஆண்டு 4,000 பெண்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.  ரூ.30 ஆயிரம் அல்லது உண்மையான டியூஷன் பீஸ், இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும். மற்றும் கல்வி தொடர்பான இதர செலவினங்களுக்காக பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

தகுதி:

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
கிமிசிஜிணி
 அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டப்படிப்பு நிலையிலான படிப்புகள்/கோர்ஸ்களில் சேர்ந்திருக்க வேண்டும்.
 2014-2015ல் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான  உதவித்தொகை:

இந்த ஆண்டு 1000 பேருக்கு வழங்க இருக்கிறார்கள்.  ரூ.30,000 அல்லது டியூஷன் பீஸ், இதில் எது குறைவானதோ அது மற்றும் கல்வி தொடர்பான இதர செலவினங்களுக்காக மாதம் ரூ.2,000 வீதம் 10 மாதங்களுக்குக் கிடைக்கும்.

தகுதி:

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம், ரூ.6 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டப்படிப்பு நிலையிலான படிப்புகள்/கோர்ஸ்களில் சேர்ந்திருத்தல் வேண்டும்.
கல்வி ஆண்டு 2014-2015ல் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

2014-2015 கல்வி ஆண்டு காலத்தில் கிமிசிஜிணி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பப் படிப்புகள்/கோர்ஸ்களில் முதலாம் ஆண்டில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் கிமிசிஜிணி போர்ட்டல்www.aicteindia.org >students>scholarships  ல் உள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றொப்பமிடப்பட்ட pdf   வடிவிலான நகல்களை இணைப்பாக சேர்த்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இமெயில் மூலம் rifd.aicte.india@gmail.com இணையதளத்தில் அக்டோபர் 30 வரை  சமர்ப்பிக்கலாம்.

அலுவலக முகவரி:
ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன், 7வது தளம், சந்தர் லோக் பில்டிங் ஜன்பத், புதுடெல்லி - 110 001, போன்: 011-23724150 / 55.