நியூஸ் வே



* அஜித்தின் உடல்நலத்தை விசாரித்து பிரபலங்கள் பலரும் ‘உங்களை நேரில் நலம் விசாரிக்க வரலாமா?’ எனக் கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்ப, தல சைடில் இருந்து நோ ரெஸ்பான்ஸாம்!

* வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ரோபோக்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதில் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார். ‘2.0’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தப் பயிற்சியில் ரஜினியும், ஷங்கரும் ஒரு வாரம் இருக்கப் போகிறார்கள்.

* மத்திய அரசின் புதிய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக ‘நரேந்திர மோடி மொபைல் ஆப்’ என்ற பெயரில் புதிய ஆப் உருவாக்கியுள்ளது பாரதிய ஜனதா. இதை ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடியே அறிமுகம் செய்து வைத்தார்.

* காங்கிரஸ் கட்சியையே தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் இலவசமாக வாதாட முன்வந்தார், பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி. ஆனால் காங்கிரஸ் அவர் சேவையை மறுத்துவிட்டது.

12 ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராக தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார். இந்த ஆண்டில் மட்டுமே 94 பாடல்கள் எழுதியிருக்கிறார். ‘அழகே அழகே’ தேசிய விருது பெற்ற பாடல் அவரது படைப்புத் திறமைக்கு ஒரு சோற்றுப் பதம்!

* ‘முண்டாசுப்பட்டி’ போல் 2015ல் தான் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை என்ற வருத்தம் நந்திதாவுக்கு! 2016ல் ரீலீஸ் ஆக  இப்போதே 3 படங்கள் கைவசம் இருக்க, இது ஹிட் ஆண்டாக அமைய வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக புது போட்டோ ஷூட் செய்திருக்கிறது பொண்ணு!

* ‘புலி’, ‘தெறி’ என அடுத்தடுத்து படங்கள்... இடைவிடாத வேலை... குடும்பத்தினருடன் அவுட்டிங் செல்ல நேரமில்லாமல் இருந்தார் விஜய். இப்போது புத்தாண்டைக் கொண்டாட ஃபேமிலியோடு துபாய் சென்றிருக்கிறார். ஜனவரியில் சென்னை திரும்பும் அவர், பரதன் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்கிறார்கள்.

* தனுஷின் ‘கொடி’ படம் முழுக்க முழுக்க அரசியலாம். ‘என்னுயிர் தோழன்’ பாணியில்தான் கதையாம். இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டு இந்திப் படத்திற்கு மும்பை போகிறார் தனுஷ்.

* ‘சிங்கம் 3’வில் அனுஷ்காவுக்கு ஹோம்லி ரோல். சூர்யாவிற்கும் அனுஷ்காவிற்கும் இதில் திருமணம் நடந்து விடும். இல்லத்தரசியான அனுஷ்காவின் காஸ்ட்யூம் புடவைகள். படத்தில் ஸ்ருதி ஹாசன் மாடர்ன் ரோலில் கலக்குவார் எனத் தகவல்.

* தமிழில் ‘இறுதிச்சுற்று’ என வெளியாகும் ‘சாலா காடோஸ்’ படத்தில் பாலிவுட் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிப்பவர், ரிதிகா சிங். நிஜத்திலும் இவர் தேசிய அளவில் மோதும் ஒரு கிக் பாக்ஸர். கராத்தேவிலும் பிளாக் பெல்ட் வாங்கி, மேலும் பல தற்காப்புக் கலைகள் தேர்ந்தவர். நூறு பெண்களிலிருந்து இவரைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள்.

* லாரன்ஸ், தான் எடுத்த ‘காஞ்சனா’வை கொரிய, சீன, தாய் மொழிகளில் ரீமேக் செய்ய உரிமையைக் கொடுத்துவிட்டார். ஒரு தமிழ்ப்படம் இந்த மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

* அடுத்து ஹாலிவுட் பறக்கும் இந்திய நடிகை அமைரா தஸ்தூர். ‘அனேகன்’ படத்துக்குப் பிறகு தமிழில் பார்க்க வாய்க்காத அமைரா, ‘குங்பூ யோகா’ படத்தில் ஜாக்கி சானுடன் ஜோடி சேர்கிறார். படத்தில் இவருக்கும் சண்டைக் காட்சிகள் உண்டு!

* ‘நேரம்’ எடுத்த அல்போன்ஸ் புத்திரன் மறுபடியும் தமிழுக்கு வருகிறார். அவரது அடுத்த படத்தில் அருண் விஜய், நிவின் பாலி இரண்டு பேரும் நடிக்கிறார்கள். அல்போன்ஸிடம் கதை கேட்டு மலையாளத்தின் பெரிய நடிகர்கள் பலர் கியூவில் நிற்கிறார்கள்.

* ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகம் தயாரிக்க முடிவாகிவிட்டது. அண்ணன் சொன்ன ஒரு வரி கதையைக் கேட்டே ஓகே சொல்லிவிட்டார் ஜெயம் ரவி. இப்போது அந்தக் கதையின் ரைட்ஸ் வாங்க தெலுங்கில் பலத்த போட்டி நடக்கிறது.

* ஃபிரிட்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என தாத்ரியில் வீட்டைத் தாக்கி கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் வீட்டில் இருந்த இறைச்சி பற்றிய ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்துவிட்டது. அது, மாட்டுக்கறி அல்ல; ஆட்டுக்கறி!

* ஹரி, நடிகர் விஜய்யின் படத்தை இயக்குவது என்ற பேச்சு பல வருஷங்களாக நடந்து கொண்டே இருந்தது. இப்போது பரதன் படத்தைத் தொடர்ந்து ஹரியின் படத்தில் நடிக்கிறார் விஜய். பி.டி.செல்வகுமார் இதைத் தயாரிக்கிறார்.

* இந்தப் பிறந்தநாள் தமன்னாவிற்கு ரொம்பவே ஸ்பெஷல். ஐதராபாத்தில் ‘தோழா’ ஷூட்டிங்கில் நாகார்ஜுனா, கார்த்தி என ஹீரோக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி கேக் வெட்டியிருக்கிறார்.

* ஒரு டம்ளர் தண்ணீரில் சுமார் ஒரு கோடி நல்ல பாக்டீரியாக்கள் உள்ளனவாம். அவையே அந்தத் தண்ணீரை சுத்தமாக்கி நமக்குத் தருகின்றனவாம். லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவு இது!

* ஒரே ஆண்டில் பிரபஞ்ச அழகி பட்டத்துக்கும் உலக அழகி பட்டத்துக்கும் தேர்வானபோது இணைந்து போஸ் கொடுத்தார்கள் சுஷ்மிதா சென்னும் ஐஸ்வர்யா ராயும். அதன்பின் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. சமீபத்தில் அம்பானி குடும்ப பார்ட்டியில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ‘அழகிகளுக்குள் பொறாமை இல்லை’ என்ற குறிப்போடு சுஷ்மிதா வெளியிட, பல்லாயிரம் பேர் அதை ஷேர் செய்தனர்.

* மும்பை சிவாஜி பார்க்கில் இருக்கும் பால் தாக்கரே சமாதியில் எப்போதும் ஒரு ஜோதி எரிந்தபடி இருக்கிறது. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், இந்த ஜோதியைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கின்றன. இதற்கு மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகுமாம். நாமெல்லாம் கேஸ் மானியத்தை விட்டுக்
கொடுத்தால், இவர்கள் இப்படி ஜோதி ஏற்றுவார்கள்!

* மீண்டும் டெல்லியில் பனி சூழ்ந்துவிட, எப்போதும் இருமிக் கொண்டிருக்கிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பிரஸ்மீட்களில் அவர் இருமும்போதுதான் கேமராக்கள் தொடர்ச்சியாக பளிச்சிடுகின்றன. ‘‘இந்த போட்டோ மீது உங்களுக்கு அப்படி என்ன விருப்பம்?’’ என கெஜ்ரிவால் கிண்டல் செய்தும் இது நிற்கவில்லை.

* விஷாலுடனும், கார்த்தியுடனும் இப்போது நடித்து வருகிறார் திவ்யா. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் திவ்யாவிடம் தெலுங்கில் மாட்லாட, சொந்த ஊரில் இருப்பது போல் ஹேப்பி ஆகிவிட்டார் .

* திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘கருடா’ என பெயர் வைத்து விட்டார்கள். விஷால் படங்களை மட்டுமே இயக்கியவர், முதல் தடவையாக விக்ரம் படத்தை டைரக்ட் செய்கிறார்.