முதிர்ச்சி... தங்கச்சி!



இயற்கைக்கும் மனிதனைப் போல் அழிவு குணம் வந்துவிட்டதோ? அதிக வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக 2016ம் ஆண்டு இருக்கும் என்ற தகவல் பீதியை உண்டு பண்ணியது!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பெரும் வருமான இழப்பையும் பொருட்படுத்தாமல் மதுவிலக்கைக் கொண்டு வருகிறது பீகார். பின்தங்கிய அம்மாநிலத்தின் துணிச்சலைப் பார்த்தால் பொறாமையே மிஞ்சுகிறது!
- வி.வி.வினிஷா, சிவகாசி.

அட்டையில் ஹன்சிகா-த்ரிஷா-பூனம் பஜ்வா என ‘த்ரீ ரோஸஸ்’ இணைந்திருக்க சித்தார்த்தின் ஸ்டில்லும் உள்ளே சுந்தர்.சியின் பேட்டியும் அசத்தலோ... அசத்தல்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை-1.

‘இது ரொம்ப ஸ்பெஷல் காலண்டர்’ கட்டுரையில் ‘நாங்கள் மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருக்கிறோம்’ என்ற ஸ்வர்ணலதாவின் வார்த்தைகள் கலங்க வைத்தன!
- செ.இளவரசன், ஜோலார்பேட்டை.

‘குற்றமே தண்டனை’ படத்தின் கதைக் கருவை ஒரு சிறுகதையிலிருந்து எடுத்தது என ஒப்புக்கொண்டு அதை டைட்டிலிலும் தெரிவிப்பதாகச் சொல்லும் இயக்குனர் மணிகண்டன் கிரேட்!
- கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

படிக்கிற புள்ளையா இருந்தாலும் லட்சுமி மேனனின் பேட்டியில் அதிக முதிர்ச்சி! கவர்ச்சிக்கு இடமில்லை என்கிற ‘தல’ தங்கச்சி, நீண்ட காலம் ஃபீல்டில் நிலைப்பார்!
- டி.வி.பால்பாண்டி, திருச்சி.

நகர்ப்புறங்களில் செல்போன் டவர் அழித்த சிட்டுக்குருவிகளை கிராமங்கள் அட்டைப் பெட்டி வைத்து அடைகாப்பது மனிதத்தன்மையின் உச்சம்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

சீஸன் சாரலில் அருணா சாய்ராமின் பிள்ளையார் சுழி கச்சேரி, அபிஷேக் ரகுராம், ஸாகேதராமன் எனத் தொடர்ந்து அசத்திவிட்டார் பாபனாசம் அசோக்ரமணி. குளிருக்கு இதமான இளங்காலை பொங்கல்!
- மயிலை.கோபி, சென்னை-83.

‘நான் உங்கள் ரசிகன்’ பகுதியில் வாரா வாரம் மனோபாலா தரும் சுவாரஸ்ய அனுபவத் தருணங்கள், அவருக்கே உரிய ஸ்டைலில் சொல்வது அருமையிலும் அருமை.
- எஸ்.புனிதா, புதுச்சேரி.

திருவனந்தபுரத்தில் பாத்திரக்கடை வைத்திருந்த அய்யா ஆ.மாதவனுக்குக் கிடைத்த சாகித்ய அகாடமி விருது, காலம் தாழ்த்தி வந்தாலும் பொருத்தமான அங்கீகாரம்!
- முனைவர்.
இராம.கண்ணன், திருநெல்வேலி-2.

‘நினைவோ ஒரு பறவை’ பகுதியில் நா.முத்துக்குமாரின் ‘ஆயா’ மனதில் நிறைந்துவிட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவும் பட்டுடுத்தி நின்ற அந்த வெள்ளந்தி மனம், பெரும் பொக்கிஷம்!
- ஆ.லோகநாதன், சென்னை-16.