ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 52

‘‘சதுரகிரிக்குப் புறப்பட்ட நான், அதன் அடிவாரமான தாணிப்பாறை வரை தடையின்றி வந்துவிட்டேன். அதற்குப் பிறகு அங்கே இருந்து மேலே ஏறி, அந்த வனத்துக்குள் எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் நின்றேன். அப்போது பக்தர் ஒருவர் பக்திப் பழமாக என் எதிரில் அஞ்சுமலை வனத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தார். நான் அவரைத் தொற்றிக்கொண்டேன். அவர் பெயர் வள்ளிமுத்து. டக் செய்த பேன்ட் - ஷர்ட், சங்கிலி பூட்டிய மூக்குக் கண்ணாடி, தலையில் ஒரு ஜெர்மன் தொப்பி சகிதம் என்னைப் பார்த்தவர் வியந்தார்.

‘‘யார் சார் நீங்க? வனவிலங்குகளை ஒளிஞ்சிருந்து படம் பிடிக்கறவங்களா?’’ என்று கேட்டார். அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். நான் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் என்று ஒரு முறைக்கு இரண்டு முறை கூறியும் அவருக்குப் புரியவில்லை. என்னை ஒரு நியூமராலஜிஸ்ட் ஆகப் பொருள்படுத்திக்கொண்டு, ‘ஓ... காலாலங்கிரிக்கு வந்திருக்கீங்களா?’ என்று கேட்டார்.

அந்தப் பெயரை நான் அதற்கு முன் வரை கேள்விப்பட்டதே இல்லை. ‘காலாலங்கிரியா... அப்படின்னா?’ என்று கேட்டேன். ‘அப்ப நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? உங்களைப் பார்த்தா சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் வழிபட வந்த மாதிரி தெரியலையே?’ என்றார்.‘அது யார் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம்?’

‘அது சரி... இந்த மலையோட சாமியையே தெரியாமலா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?’‘நான்தான் முதல்லயே சொன்னேனே... என் நண்பரைத் தேடி வந்திருக்கேன்னு!’‘அட, ஆமாம்ல... அவர் கொடுத்து வச்சவர்!’‘கொடுத்து வச்சவரா? 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கறவர்... அதை விட்டுட்டு கரன்ட் கூட இல்லாத இந்தக் காட்டுல சிக்கிக்கிட்டவர் கொடுத்து வச்சவரா?’

‘என்ன பெரிய எண்பதாயிரம்... சுண்ணாம்பு! இந்தக் காட்டுல திரியற ஒரு சித்தன் பார்வை நம்ம மேல படறதுங்கறது, இந்த உலகமே நமக்குப் பரிசா கிடைச்சதுக்கு சமமுங்க. நானும் பல வருஷமா என் நட்சத்திரம் அன்னிக்கு இந்த மலைக்கு வர்றேன். ஒரு சித்தர் சாமி என் கண்ணுல பட்டதில்லை!’
‘அவங்களோட சேர்ந்து உடம்புல துணிகூட இல்லாம வாழறதா வாழ்க்கை?’’

‘இல்லியா பின்னே? பசி கிடையாது, தாகம் கிடையாது. உடலில் இருந்து எந்தக் கழிவுகளும் வெளியே வர்றது கிடையாது... இது எவ்வளவு பெரிய விஷயம்?’
‘இட்ஸ் இம்பாசிபிள்... எந்த ஒரு உயிரினத்தாலும் நீங்க சொல்ற மாதிரி மட்டும் வாழவே முடியாது’ - நான் இப்படிச் சொல்லவும், அவர் என்னை முறைத்தார்.
‘என்ன முறைக்கறீங்க! எனக்குப் பதில் சொல்லுங்க’ என்றேன்.

‘உங்ககிட்ட பேசறதுல பிரயோஜனம் இல்லீங்க! நீங்க சாமி இல்லைங்கற கோஷ்டி மாதிரி தெரியுது. உங்களுக்கு விளக்கம் தர முயற்சிக்கறதும் வேஸ்ட்’ என்றார்.
‘நான் நாத்திகனும் இல்லை, ஆத்திகனும் இல்லை. அதே சமயம் அறிவுள்ள மனுஷன். நீங்க சொல்ற மாதிரி வாழற ஒருத்தரை எனக்குக் காட்டுங்க. அப்புறமா நான் நம்பறேன். நீங்களே அப்படி ஒரு சித்தரைப் பார்க்காதப்ப எதை வச்சு உங்க வார்த்தையை நான் நம்பறது?’

‘ஐயா... நான் பாக்கலதான். ஆனா, பாத்தவங்க சொன்னதைக் கேட்டுருக்கேன். அதே சமயம் பல அற்புதங்களுக்கு நான் ஆளாகியிருக்கேன். நான் டாக்டர்களால கைவிடப்பட்ட ஒரு எய்ட்ஸ் நோயாளி. உடனே என்னை பொம்பள பொறுக்கியா நினைச்சுடாதீங்க. ஒரு போலி டாக்டர் ஒரே ஊசியால பலருக்கு ஊசி போடப் போய் எனக்கு வந்த கொடுமை அது!

நான் நாலஞ்சு வருஷம் வாழ்ந்தா அதிகம்னு சொன்னாங்க. ஒரு ஆச்சரியம் போல இதைச் சொன்ன டாக்டரெல்லாம் செத்துட்டாங்க. நான் இருக்கேன். அதுவும் எப்படி? இப்ப என்னை டெஸ்ட் பண்ணிட்டு ‘அன்னிக்கு உனக்கு ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொன்னதுதான் தப்பு. தப்பான ரிப்போர்ட்டை வச்சு உன்னை நோயாளினு சொல்லிட்டாங்க’னு புரண்டு போய் பேசறாங்க. என்னை இந்த மலையும் இதுல விளையற மூலிகைகளும் குணப்படுத்துனத ஒத்துக்க மாட்டேங்கறாங்க. நான் இதைச் சொன்னா, ‘அதுக்குக் காரணமான சித்தர் சாமிங்களக் கூட்டிகிட்டு வா... நம்பறோம்’னு சொல்றாங்க!’ - அவர் பேசப் பேச எனக்குத் திகைப்பு...’’
- கணபதி சுப்ரமண்யனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

காருக்குள் இருந்த சதுர்வேதி, விபா போனில் பேசியபடி காரை நெருங்குவதைப் பார்த்தான். அவளும் காரை நெருங்கியதும் பேச்சை முடித்துக்கொண்டு போனை தனது ஹேண்ட் பேக்கில் போட்டவளாக பின் கதவைத் திறந்து அவனருகில் அமர்ந்தாள். காரும் புறப்பட்டது.
‘‘யார் டியர் போன்ல?’’‘‘என் அங்க்கிள் ஜி...’’
‘‘அங்கிளா?’’

‘‘ஆமாம்... டெல்லில பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்காரே, சோம்லால் குப்தானு...’’
‘‘ஓ... என்னவாம்?’’‘‘சும்மா கர்ட்டசி கால்தான் ஜி. ‘சுவாமிஜியை தரிசனம் பண்ணணும், எப்ப அறிமுகப்படுத்தப் போறே’ன்னு கேட்டார். உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றதா சொன்னேன். எப்ப அவரை வரச்சொல்லட்டும் ஜி?’’ - விபா மிகச் சரளமாகப் பொய் சொன்னாள். அப்படிச் சொல்ல ஒரு திறமை கடந்த திறமை வேண்டும். சதுர்வேதி முகத்திலும் புன்னகை.

‘‘சொல்றேன்... அந்த கணபதி சுப்ரமண்யன் ஏதாவது பேசினது மாதிரி தெரிஞ்சதா?’’‘‘இல்லஜி... இந்த நைட் டைம்ல சான்ஸும் இல்ல. நிச்சயம் பொழுது விடியவும் பேசுவாங்க. அது நம்ம காதுல விழாமப் போகாது!’’‘‘மைக்ரோ சிப் ஸ்டிக்கரை சரியா ஒட்டினேதானே?’’‘‘அப்படி ஒட்டாம போயிருந்தா அவர் பேசினது காதுல விழுந்துருக்குமா ஜி?’’‘‘திரும்ப கேள்வி கேக்கறே... கணபதி சுப்ரமண்யன் சராசரி மனுஷன் இல்லை. ஃபாரீன் புக்ஸெல்லாம் படிக்கறவன். ஸ்டிக்கரை அவன் சந்தேகப்பட்டா, எல்லாமே கெட்டுடும்!’’

‘‘ஸாரி ஜி! இனிமே கேள்வி கேட்க மாட்டேன். ஸ்டிக்கரை கதவோட பின்பக்கம்தான் ஒட்டியிருக்கேன். அது அந்த ஆள் கண்ணுலயே முதல்ல படாது. ஆனா, பாத்ரூம்ல போய் செல்போன்ல பேசினா புண்ணியமில்ல!’’‘‘எனிவே... இவ்வளவு தூரம் நமக்கு விஷயம் தெரிய வந்ததே பெருசு. இந்த அசைன்மென்ட்ல நான் யாரையெல்லாம் இறக்கி விட்டேனோ, அவ்வளவு பேரும் செத்துட்டாங்க. இந்த ஒரு விஷயமே அந்தக் காலப் பலகணி எவ்வளவு சக்தி மிக்கதுங்கறத காட்டிடுச்சு. எப்பாடு பட்டாவது அதை நான் நெருங்கியே தீரணும்!’’

‘‘நாமன்னு சொல்லுங்க ஜி...’’
‘‘நான்னாலே நீயும் அதுக்குள்ள இருக்கே விபா. ரைட்... டிரைவர்கிட்ட மதுரை நோக்கி போகச் சொல்லு...’’
‘‘அப்ப அவங்கள நாம ஃபாலோ பண்ணப் போறோமா?’’

‘‘டெஃபனட்லி... பலகணி வரை அவங்களைப் போக விட்டு, கடைசில அவங்களைப் பின் தள்ளிட்டு அதை நாம அடைஞ்சிடணும்!’’
‘‘நினைச்சேன்... பை த பை, ஒரு சந்தேகம் கேட்கட்டுமா?’’‘‘தாராளமா கேள்...’’‘‘அப்புறம் என்ன கேள்வியா கேட்கறேன்னு வருத்தப்படக் கூடாது.’’
‘‘வித் மை பர்மிஷன், நீ எவ்வளவு கேள்வியும் கேட்கலாம்!’’‘‘இந்தப் பலகணியை தேடிப் போன எல்லாரும் செத்துட்டாங்கனு தெரியுது. நாமளும் அதைத்தான் தேடறோம். நமக்கு எதுவும் ஆகாதா?’’

‘‘நல்ல கேள்வி. என் கழுத்துல இருக்கற இந்த ருத்ராட்ச மாலை, ஒரு முகம் கொண்டது. ஆயுள் விருத்தி ஹோமம் செய்து நான் அணிஞ்சுகிட்டது. இது இருக்கற இடத்துல எமன் வரவே முடியாது. அப்புறம், அபூர்வமான விஷயங்களை எல்லாம் அடையற ஜாதகம் என்னோட ஜாதகம்! பெரிய பெரிய அதிகாரத்துல உள்ளவங்களையே ஆட்டி வைக்கற ஜாதகம். அவ்வளவு ஏன்..? வரப்போற சித்திரை இருபத்தி ஏழாம் தேதியில இருந்து நான்தான் இந்த உலகத்தோட நடமாடும் மனிதக் கடவுள். ஜெகத்குரு! நான் சொன்னது நடக்கும். கேட்டது கிடைக்கும்!’’

‘‘உங்களுக்கு சரி... எனக்கு?’’‘‘இதுவும் நல்ல கேள்வி... உன்னையும் காப்பாத்தத்தான் நான் பிரம்மச்சர்யத்தை கைவிட்டு உன்கூட கூடினேன். கலவியில மட்டும்தான் ஆணும், பெண்ணும் அதிக அளவு உடம்பாலயும் மனசாலயும் ஒண்ணாகறாங்க. இப்போ நீயும் நானும் விடற மூச்சோட நீளம், நாலு அங்குலம்தான். தாம்பத்ய உறவு சமயத்தில் அது அறுபது அங்குலத்துக்கும் மேல... அப்படின்னா நீ எனக்குள்ளயும், நான் உனக்குள்ளயும் எவ்வளவு தூரம் கலந்திருப்போம்னு யோசிச்சுப் பார்!’’
‘‘அதனால?’’

‘‘எனக்கான எல்லா நன்மையும் உனக்கும்தான்! ஈ.எம்.டி கேந்தராவோட சிவன் நான்! பார்வதி நீ...’’ - சதுர்வேதி தன் காம வெறியை வெகு அழகாக நியாயப்படுத்தினான். ஆனால், மனதுக்குள் ‘நீயும் செத்து ஒழிவதே எனக்கு நல்லது’ என்றும் கூறிக்கொண்டு சிரித்தான். விபா அதை அப்படியே எதிரொலித்தாள். ‘மை டியர் சதுர்வேதி... சரியான சமயத்துல நான் விலகி உன்னை மரணத்துல தள்ளிடுவேன். காமவெறிக்கு  அங்குலக் கணக்கு சொல்லியா சமாளிக்கறே?’ என்று தனக்குள் கருவிக்கொண்டாள்.

நான்கு வழிச்சாலையில் அந்தப் படகுக் கார் தாம்பரத்தைக் கடந்து வேகமெடுக்கத் தொடங்கியது.விடியும் வரை காரில் அமர்ந்து பயணிப்பது என்பது சாபத்தோடு சேர்ந்த ஒன்று. சாபத்தை வரமாக மாற்ற விரும்பி, ஒரு மேல்நாட்டு மது பாட்டிலை எடுத்தவன் ரசித்துக் குடித்தான்.‘கடவுள் குடிப்பாரா?’ - விபா கேள்வியோடு பார்த்தாள்.‘‘என்ன பாக்கறே... கடவுள் காரணமில்லாம மதுவைப் படைக்கல. தேவலோகத்துல இந்திரனே பெரிய குடிகாரன்தான். அங்க இதுக்கு சோம ரசம்னு பேர்!’’ என அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தான் சதுர்வேதி.

‘நீ எப்படா அங்க போய்ப் பார்த்தே’ என்ற அடுத்த கேள்வி யோடு விபா ஊடுருவினாள். ஆனால் போதை சதுர்வேதியை தன் வசம் எடுத்துக்கொள்ள, டிரைவரிடம் டீசலுக்கும் டோல்கேட்டுக்கும் பணம் கொடுத்துவிட்டு, ‘‘வழில எங்க விருப்பமோ அங்க சாப்பிட்டுக்கோ. விடியும்போது மதுரைல இருக்கணும்!’’ என்று கூறியவள், மீதியிருந்த மதுவை தானருந்தத் தொடங்கினாள்.உடம்பு மெல்ல... இருந்தும் இல்லாமல் போகத் தொடங்கியது!விடிந்துவிட்டது!

பாறை மேல் மல்லாந்து கிடந்த ஈங்கோய் கண் விழித்தான். அவன் மனைவி பழஞ்சீ இரவே அங்கிருந்து போய் விட்டிருந்தாள். அருகில் இருந்த நாயும் எழுந்து நின்று பார்த்தது. காலைக்கடன் அவனை மறைவிடம் நோக்கிச் செலுத்தியது. அடுத்த அரை மணி நேரத்தில் மேலிருந்து கீழ் இறங்கினான். நந்தி அடிகளை காலாலங்கிரி கிழக்கு வாயிலில் கண்டான்.

அடிகள் துளசி மாடத்தைச் சுற்றிக்கொண்டிருந்தார்.நாயோடு வந்து நிற்பவனைப் பார்த்தார்.‘‘என்ன ஈ... இறங்கிட்டே?’’‘‘கடன் கழிக்க இறங்கினேன் சாமி. ராத்திரி எனக்குத் தெரிஞ்சு கண்ணுக்கு எட்டுன தொலவு யாரும் வரலை சாமி!’’
‘‘தெரியும்... ஆனா இனி வர வாய்ப்பிருக்கு...’’

‘‘அப்ப சரி சாமி... நான் திரும்ப மேல ஏறிடறேன்!’’
‘‘சாப்பிட்டுட்டுப் போ...’’

‘‘அதான் மருந்து இலை தந்தீங்களே சாமி... அதனால பசியில்லை!’’
‘‘பழஞ்சீ வந்து கூழ் கொடுத்து குடிச்ச போல இருக்கே?’’
‘‘ஆமா சாமி!’’‘‘கடன கழிக்கும்போதே மருந்து இலையோட சக்தில பாதி வெளியேறி
யிருக்கும். அதனாலதான் சாப்பிட்டுட்டுப் போகச் சொன்னேன்!’’

அவன் சற்று பிரமிப்போடு அவரைப் பார்த்தான். இவருக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது... எப்போதும் ஆச்சரியமூட்டுகிறார். உணர்ச்சிவயப்படவே மாட்டேன் என்கிறார்! அவனுக்குள் அவர் குறித்த எண்ணங்கள்.‘‘ஆமா... பழஞ்சீ புலிச்சாமி குகை பக்கம் போனாளோ?’’ - நந்தி அடிகள் அடுத்து கேட்க, அவன் தலை மௌனமாக அசைந்து ஆமோதித்தது. ‘‘அது தப்பு... அவகிட்ட சொல்...’’‘‘சொல்லிட்டேன் சாமி!’’

‘‘நல்லது... நீ புறப்படு...’’ - அவன் விலகிட, யதார்த்தமாக தலையை உயர்த்தியவருக்கு சுற்றி வளைத்து நிற்கும் மலையின் ஒரு உச்சி பாகத்து பாறை மேல் புலிச்சித்தர் நின்றுகொண்டு அவரை கை அசைத்து அழைப்பது தெரிந்தது.அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் எதிரில் இருந்தார் நந்தி அடிகள்!
‘‘நந்தி... இப்படி உட்காரு!’’‘‘பரவால்ல குரு!’’

‘‘நான் வரச்சொன்ன காரணத்தை சொல்ல விரும்பறேன்!’’
‘‘உத்தரவு குரு...’’‘‘நான் அடங்கப் போறேன்...’’
‘‘குரு!!!’’

‘‘என்ன இது... லௌகீக மனுஷ பாவனை?’’‘‘எனக்குள்ளயும் அது இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு போல!’’
‘‘புரிஞ்சா போதாது... முற்றுமா நீக்கிக்கணும். எது நடந்தாலும் அது மாற்றம். அவ்வளவுதான்! மாறாதது எதுவுமே கிடையாது!’’
‘‘வாஸ்தவம்தான்...’’‘‘அப்புறம் இந்த மலையே மாறப் போகுது!’’
‘‘மலையேவா?’’

‘‘ஆமாம்... காவலால இனி பயனில்லை. ஈங்கோயை அவன் எல்லைக்குத் திருப்பி அனுப்பிடு!’’‘‘உத்தரவு சாமி...’’‘‘கடிகாசலத்துக்கு பூஜை செய். அது ரொம்ப முக்கியம்!’’‘‘இன்னிக்கு இரவுல இருந்து ஊழித்தாண்டவம் ஆரம்பம். திரிகோணமலைக்கும் மகேந்திரகிரி மலைக்கும் நடுவே தொடங்கப் போற புயல், மொத்த தென்பகுதியையே கழுவித் துடைக்கப் போகுது!’’
‘‘இயற்கையை நாம தடுக்க முடியாதா சாமி?’’

‘‘தினமும் இந்த பூமில 700 கோடிப் பேர் பாவம் செய்யறாங்க. நூறு பேர்கூட சுயநலமில்லாம புண்ணியம் செய்யறதில்லை. அப்புறம் எப்படி முடியும்?’’
‘‘அப்ப புண்ணியம் மட்டுமே செய்யற நம்ம மலை சாமிங்களுக்கான நியாயம் எது சாமி?’’‘‘மனிதர்களுக்குத்தான் பூமி மட்டும் வாசஸ்தலம். அந்த மனித நிலையை வெற்றிகொண்ட நமக்கெல்லாம்தான் மேல இன்னொரு உலகம் இருக்கே. அங்க நுழைய நம்மால மட்டும்தானே முடியும்?’’
‘‘அங்க எனக்கு இடம் இருக்கா சாமி?’’

‘‘வெள்ளம் வரும்போது தப்பிச்சா அது இல்லை. அதுல சிக்கினா நீயும் அங்கதான் வந்து நிப்பே!’’
அவர் சொல்லும்போதே பெரிய இடிச் சப்தம் கேட்கத் தொடங்கியது!

‘‘மரியாதை நிமித்தமான சந்திப்பில், இரண்டு தலைவர்களும் ஒருத்தரை ஒருத்தர் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கிட்டாங்களாம்...’’
‘‘அப்புறம்..?’’‘‘அதுக்கு ‘பீப் சந்திப்பு’ன்னு பெயர் மாத்திக்கிட்டாங்க!’’

‘‘எதிரி மன்னன் இப்படி என் முதுகில் குத்துவான் என எதிர்பார்க்கவில்லை...’’
‘‘கத்தியாலா, ஈட்டியாலா மன்னா..?’’‘‘அவனோட போட்டோ ஸ்டிக்கரை குத்திட்டான்!’’

திரிகோணமலைக்கும் மகேந்திரகிரி மலைக்கும் நடுவே தொடங்கப் போற புயல், மொத்த தென்
பகுதியையே கழுவித் துடைக்கப் போகுது!’’

‘‘தலைவர் இதுக்கு முன்னாடி சீட்டு கம்பெனி நடத்தியிருப்பார்னு எதை வச்சு சொல்றே..?’’
‘‘கூட்டணியில் சேரும் முதல் பத்து பேருக்கு தங்க நாணயம் இலவசம்னு அறிவிச்சிருக்காரே!’’

- எஸ்.ராமன், சென்னை-17.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்