வலைப்பேச்சு
@naatupurathan அம்மா போக்குவரத்துக் கழகம்னு மாற்றாது, இந்த நான்கரை ஆண்டுகளும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்னே நீடிக்கச் செய்த ஜெ.வின் பெருந்தன்மையில் பூரித்தே போகிறேன்!
‘நரசிம்மா’ படத்தில் கரன்ட்டுக்கே ஷாக் கொடுப்பார் கேப்டன். அப்பேர்ப்பட்ட ஆளின் கொடும்பாவி என்றால் எரிப்பவரையே எரிக்கும்டா! - உமாமகேஸ்வரன்
@NamVoice ஸ்டிக்கர் ஒட்ட டிரெய்னிங் குடுத்த அளவுக்கு கொடும்பாவி எரிக்க டிரெய்னிங் குடுக்கல போல... பேக்ஃபயர் ஆகி வச்சவன் வேட்டிலயே தீ புடிச்சுருச்சு.
@Alexxious 2015 - பீப் வருடம். 2016 - லீப் வருடம்.
‘‘நீ புத்திசாலி... உனக்கு சொல்ல வேண்டியதில்லை’’ என்று சொல்லியே புத்திசாலித்தனமாக யோசிக்க வைப்பவர்கள் புத்திசாலிகள்! - சுமிதா ரமேஷ்
@SriLiro ‘நாம அம்மாவுடன் வாழ முடியலையே... இவன் மட்டும் எப்படி சேர்ந்து இருக்கலாம்’ங்கிற சாடிசத்தின் வெளிப்பாடுதான் தனிக்குடித்தனம்.
‘‘வெள்ள சேதம் பார்த்த மந்திரி என்ன சொன்னார்?’’ ‘‘பாதிக்காத பகுதிகளை எல்லாம் வளைச்சிப் போடணுமாம்...’’ - கார்ட்டூனிஸ்ட் முருகு
முன்னாள் நடிகை ஜெயலலிதா, இன்னாள் முதல்வர் முன் மைக் நீட்டப்படவே இல்லை. நடிகர் கமல் மைக் நீட்டாமலேயே பேசுகிறார். நடிகர் சிம்பு மைக்கில் ‘பீப் பீப்’னு பாடுகிறார். இசையமைப்பாளர் அனிருத், மைக் பிடிக்கும் முன்பே இசைக்கவே இல்லை என்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா தேவையில்லாத நேரத்தில் மைக் நீட்டியதால் ‘‘அறிவு இருக்கா’’ என்றார்.
நடிகர் விஜய்காந்த் மைக் நீட்டினால் துப்புகிறார்# கடந்த ஒரு மாதமாக நடந்தவைகளில் சினிமா சார்ந்த நபர்களால் மீடியாவின் மைக்குகள் பேசு பொருளாகி, சென்னை மிகப்பெரிய பேரிடர் சந்தித்ததை தடமே தெரியாமல் மறக்கடிக்க நினைக்கின்றனர். வாழ்க ஜனநாயகம்! வாழ்க அம்மா! - உதய சங்கர்
ஒருவன் பல மாதங்களாக கடவுளை நோக்கி கடுமையாக தவம் இருந்தான். அவன் தவத்தில் மெச்சிய கடவுள், ‘‘வேண்டும் வரத்தைக் கேள்’’ என்றார். ‘‘உலகின் மிகச்சிறந்த டிரிங்க்கும் உலகின் மிகச் சிறந்த பெண்ணும் வேண்டும்’’ என்று கேட்டான் அவன். கடவுள் ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று மறைந்தார்.
அடுத்த நொடி, அவனருகில் கங்கை தீர்த்தம் இருந்தது. அன்னை தெரசாவும் இருந்தார். நீதி: Investments are subject to market risks. Please read the offer document carefully before investing!
@mulIai10 மார்கழி மாதத்து காலை ஒன்றில் இறந்து போய்விட வேண்டும்... வீசும் காற்றே சொர்க்கத்துக்குக் கொண்டு போய்டும் போல! ஊர்க் காற்றில் அப்படி ஒரு இன்பம்.
நல்லவேளை, ஆண்டவன் கொசுவ சின்னதா படைச்சான்... இல்லாட்டி லிட்டர் கணக்குல உறிஞ்சிட்டு போயிருக்கும் ரத்தத்தை! - ரிட்டயர்டு ரவுடி
ஒரு வங்கிக் கொள்ளையின்போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினர். ‘‘இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது!’’ அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள். மனதை மாற்றும் முறை என்பது இதுதான்.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள் ஒருவன் கேட்டான்... ‘‘வாருங்கள்! சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்’’ என்று. மற்றொருவன் சொன்னான், ‘‘பொறு, அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்’’. இதுதான் அனுபவத்தின் சிறப்பு. வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்தபோது அவருடைய மேலதிகாரி தடுத்து, ‘‘வங்கியில் கொள்ளை போனது 20 கோடி ரூபாய்தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்’’ என்றார். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது இதுதான்.
இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, ‘‘வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்’’ என்றார். ‘கலியுகம்’ என்பது இதுதான். மறுநாள் செய்திகளில் ‘வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளை போய் விட்டது’ என்று அறிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு எண்ணினாலும் இருபது கோடிக்கு மேல் இல்லை. கொள்ளையா–்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, ‘‘நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்துவிட்டனர். இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்!’’ என்றான். நீதி: பணம் கூட முக்கியமில்லை... அறிவுதான் உன்னை உயர்த்தும்!
@indirajithguru எல்லோருக்குள்ளும் ஒரு மெக்கானிக் தூங்குகிறான். தன் வண்டி பழுதானால் கூட எழுவதில்லை. ஏதோ ஒரு ஸ்கூட்டி பழுதானால் மட்டும் பதறியடித்து எழுகிறான்!
தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸ் தயார் - இளங்கோவன்
சாமிஜீ, நான் பீப் சாங்கை officialஆ ரிலீஸ் பண்ணலை. அதனால என்னைக் கைது பண்ண முடியாது!
நான் கூடத்தான் என் வீடியோவை அஃபீஷியலா ரிலீஸ் பண்ணலை. என்னை கைது பண்ணி நொங்கு எடுக்கவில்லையா?
@kopitha11 ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை விட, ‘இதுவும் பழகிப் போகும்’ என்பதே வாழ்க்கைக்குப் பொருந்துகிறது!
நியாயப்படி பார்த்தா... வெள்ளத்தில் சிக்கிய ‘தமிழக அரசை’ போர்க்கால அடிப்படையில் மீட்ட சிம்புவிற்கு இந்த ஆண்டின் சிறந்த பாடகர்-பாடலாசிரியர் விருது கொடுத்து தமிழக அரசு கெளரவிச்சிருக்கணும்!# ஒரே ஒரு பாட்டுல தமிழ்நாட்டுல வெள்ளம் வந்ததையே மறக்கடிச்சிட்டீங்களேய்யா... - குமரேஷ் சுப்ரமணியம்
பீப் என்ற வார்த்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு # த்தூ என்ற வார்த்தை அட்மிட் செய்யப்படுகிறது... இந்த வாரம்... #த்தூ வாரம் - இளையராஜா அனந்தராமன்
@swarnamrutha கணவனின் அதிகபட்ச ஆசை - சண்டையிடா மனைவி; மனைவியின் அதிகபட்ச ஆசை - போதையிலா கணவன்; பிள்ளைகளின் அதிகபட்ச ஆசை - வெடிக்காத பலூன்கள்!
‘வெள்ளம்’ என்ற நான்கெழுத்தை ‘கமல்’ என்ற மூன்றெழுத்தால் மறைக்க, அதை ‘பீப்’ என்ற இரண்டெழுத்தால் மூடி மறைத்த மீடியாவை ‘தூ’ என்றார் கேப்டன்.
@indirajithguru மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறிதாகப் படைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே!
@thoatta என்னத்த காலண்டர் அடிக்கிறாங்களோ? அரசு விடுமுறை போடுறாங்க, மதப் பண்டிகை விடுமுறைகளை போடுறாங்க, டாஸ்மாக் விடுமுறை தினங்கள போடுறாங்களா?
அதிகபட்சம் 10 சொற்களுக்கு மேல் எதையும் படிக்கவோ கேட்கவோ பொறுமை இல்லாத ஒரு தலைமுறையைக் கண்டு நான் பயப்படுகிறேன். - மனுஷ்ய புத்திரன்
ஒரு ரூம்ல ஐந்து பேர் சேர்ந்து இருந்தானுங்க. அவங்க பெயர், பைத்தியம், முட்டாள், மூளை, யாரோ, எவனோ!ஒரு நாள் யாரோவுக்கும் எவனோவுக்கும் சண்டை. அந்த நேரத்துல மூளை பாத்ரூம் போயிருந்தான். சண்டையில எவனோ செத்துட்டான்.உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு, ‘‘சார்! எவனோவை யாரோ கொன்னுட்டான் சார்’’ என்றான். போலீஸ் அதிகாரி கடுப்பாகி, ‘‘ஹும்! பைத்தியமாடா நீ?’’ என்றார்.
பைத்தியம் உடனே, ‘‘ஹி... ஹி... ஆமா சார்’ என்றான்.போலீஸ் அதிகாரி டென்ஷனில், ‘‘மூளையில்ல... ராஸ்கல்’’ என்று கத்த, ‘‘அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்’’ என பதில் வந்தது.அடங்காத கோபத்தில் போலீஸ் அதிகாரி, ‘‘முட்டாள்... முட்டாள்...’’ என கத்த, பைத்தியம் நிதானமாகச் சொன்னான்... ‘‘சார், முட்டாள் உக்காந்து இதைப் படிக்குறாப்புல சார்!’’
@JayaFails வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலெக்டர் அலுவலகத்தை திறந்த ஜெ.வுக்கு 2 கி.மீ. தூரத்துக்கு வாழை மர வரவேற்பு! # வீடியோ கான்ஃபரன்ஸுக்கு எதுக்குடா வாழை மரம்?
தொடர்ச்சியாக ரத்த தானம் தருவோருக்கு இலவசப் பேருந்து, பயணச் சலுகை வழங்க ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. # சபாஷ் நவீன் பட்நாயக்... நம்ம மாநிலத்தில் என்னடான்னா, முக்கால்வாசி பேருக்கு ரத்தம் கொடுக்கிற தகுதியே இருக்கக் கூடாதுன்னு டாஸ்மாக் கடையை தொறந்து வச்சிருக்காங்க... - இளையராஜா அனந்தராமன்
@BoomiB ரோட்டுல சரக்கு போட்டுட்டு போறவன விட, நெட் கார்டு போட்டுட்டு மொபைலை நோண்டிக்கிட்டே போறவன்தான் ரொம்ப தள்ளாடுறான்...
சாப்பிட்ட உடனே வயித்த கலக்குனா அது சாதா ஹோட்டல்; மெனு கார்டை பாத்த உடனே வயித்த கலக்குனா அது ஸ்டார் ஹோட்டல்! - வேல் மணி
‘‘இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினால் கொல்லப்படும்போது, பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்!’’பிரதமர் தேர்தலின்போது சொன்னவர்: நரேந்திர மோடி இப்போது: நவாஸ் ஷெரிஃப் நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது என்னை நெகிழ வைத்து விட்டது. சொன்னவர்: பிரதமர் நரேந்திர மோடி, இடம்: லாகூர், நாள்: டிசம்பர் 25, 2015நேற்றைய மெனுவில் தக்காளிச் சட்னி இருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
@vinmeenn பத்து விதமா வாழ்ந்து காட்ட கடவுளுக்கு 10 அவதாரம் தேவைப்பட்டிருக்கு... 10 இல்ல 100 விதமா வாழக்கூட ஒரு அவதாரமே போதும் என்று நிரூபித்து விட்டான் மனிதன்.
இங்கி லாந்திலும் பெரு வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த நெருக்கடியில் தவிக்க, பிரதமர் டேவிட் கேமரூன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படகுகளில் செல்கிறார். நிவாரணப் பொருட்கள் தருகிறார். உதவிகளில் ஈடுபட்ட பணியாளர்களுடன் சாதாரணமாக கைகுலுக்கிக் கொண்டு வெள்ளத்துக்குள் இறங்கி நடக்கிறார். பொழைக்கத் தெரியாத ஆளு... ஸ்டிக்கர் ஒட்டத் தெரியாத பொழைப்பு...
ஒரு இடத்துக்கு வரச்சொல்லி, சிலருக்கு போன்ல அட்ரஸும் ரூட்டும் சொல்லிப் புரிய வைக்கிறதுக்கு பதிலா, நேர்லயே போயி கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்துடுறது சுலபமான வேலை.
- பூபதி
|