ஜோக்ஸ்
‘‘வாங்க... உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கணுமா... ஸ்கேன் எடுக்கணுமா?’’ ‘‘இல்லே டாக்டர்... நர்ஸ் கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தத்துவம் மச்சி தத்துவம்
பூமி சுத்தினா இரவு-பகல் ஏற்படும்; தலை சுத்தினா ஏற்படுமா? - காதல் கைகூட கோயிலைச் சுற்றுவோர் சங்கம் - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘நம்ம தலைவருக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்பக் கம்மின்னு எப்படிச் சொல்றே?’’ ‘‘ஃபைலை டவுன்லோட் பண்ண முடியலன்னு சொன்னா, அப்படின்னா ‘வில்லேஜ் லோட்’ பண்ணுன்னு சொல்றாரு!’’ - ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
‘‘டாக்டர்... என்னோட எக்ஸ்ரேவுல என்ன தெரியுது..?’’ ‘‘உங்க உள் பாக்கெட்லகூட பணம் இல்லைன்னு தெரியுது..!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘நன்றி கெட்ட மக்கள்யா இவங்க...’’ ‘‘ஏன் தலைவரே... என்னாச்சு?’’ ‘‘எவ்ளோ ஊழல் செஞ்சிருக்கேன்... ‘நாலரை வருஷமா ஒண்ணுமே செய்யலே’ன்னு சொல்றாங்களே!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘தலைவர் ஏன் ரொம்ப அப்செட் ஆகிப் போய் இருக்கார்?’’ ‘‘தலைவர் பற்றி எடுத்த குறும்படத்துக்கு ‘குழந்தைகள் மற்றும் இதய நோயாளிகள் இந்தப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்’னு விளம்பரம் பண்ணியிருந்தாங்களாம்... அதான்!’’ - தேவதாசன், சொக்கம்பட்டி.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் திறமையான கணக்கு ஆசிரியரா இருந்தாலும், அவரால திருஷ்டியைக் கழிக்கதான் முடியுமே தவிர கூட்ட முடியுமா? - திருஷ்டி கழிப்பதற்குக்கூட ரூம் போட்டு யோசிப்பவர்கள் சங்கம் - இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
|