ஜோக்ஸ்
‘‘மகளிரணித் தலைவி ரொம்ப குஷியா இருக்காங்களே... ஏன்?’’ ‘‘அவங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் ‘தொடர்ல’ நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்காம்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘2016ல்எங்கள் இலக்கு...’’ ‘‘புழலா, திகாரா தலைவரே..?’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தத்துவம் மச்சி தத்துவம்
அத்தை தனக்கு உடம்பு முடியலைன்னா, ‘ஆன்ட்டிபயாடிக்’ கேட்கலாம். அதுக்காக மாமா, ‘அங்கிள்பயாடிக்’ கேட்க முடியுமா? - மருத்துவமனையிலும் மொக்கை போடுவோர் முன்னேற்றக் கழகம் - தாமு, தஞ்சாவூர்.
‘‘கபாலி ரொம்ப நேர்மையானவனா?’’ ‘‘ஆமாம் சார்! மழை வெள்ளத்துல ஸ்டேஷனுல தண்ணி புகுந்தபோதுகூட படகுல வந்து மாமூலைக் கொடுத்துட்டுப் போறான்!’’ - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘‘கபாலி... திடீர்னு ஏன்டா திருடறதை விட்டுட்டே?’’ ‘‘ஏட்டையாவை பழிவாங்க எனக்கு வேற வழி தெரியல!’’ - ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
‘‘பஞ்சபூதங்கள் பேர் கேட்டா என்ன நாலு பேர்தான் சொல்றே..?’’ ‘‘அதான் நிலத்தை தலைவர் அபகரிச்சுட்டாரே..!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் பெரிய சினிமா கவர்ச்சிப் புயலானாலும், அவங்களப் பற்றி வானிலை செய்தியில் சொல்ல மாட்டாங்க. சினிமா செய்தியில் மட்டும்தான் சொல்லுவாங்க! - புயல் மழையிலும் புதுப்படம் பார்க்கத் தவறாதவர்கள் சங்கம் - வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
|