தத்துவம் மச்சி தத்துவம்



‘‘டாக்டர்! அந்த பேஷன்ட் ஆபரேஷன் முடிஞ்ச அப்புறம் ஓடலாமான்னு கேட்கறாரு...’’
‘‘தாராளமா ஓடலாம்னு சொல்லுங்க நர்ஸ்...’’
‘‘நீங்க வேற டாக்டர்! ‘நாம ரெண்டு பேரும் ஓடலாமா’ன்னு என்கிட்ட கேட்கறாரு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?’’
‘‘ஜெயில்ல போடற சாப்பாட்டுக்கும் டிப்ஸ் கேட்கறாங்களாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

மண் சட்டி மண்ணுல செய்வாங்க, இரும்புச் சட்டி இரும்புல செய்வாங்க. அப்ப தீச்சட்டி தீயிலயா செய்வாங்க?
- தலைமைக்காக தீச்சட்டி எடுக்கும் தீவிரவாதிகள் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தெம்புக்கு டானிக் எழுதித் தந்திருக்கேன். அதுக்கு முன்னாடி இந்த மாத்திரையைப் போட்டுக்குங்க!’’
‘‘ஏன் டாக்டர்?’’
‘‘அந்த பாட்டிலோட மூடியைத் திறக்க தெம்பு வேணாமா... அதுக்குத்தான்!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.



‘‘டாஸ்மாக் கடையில காவலுக்கு நிக்கற போலீஸ்காரர், ஏன் அந்தக் ‘குடி’மகனை கண்டபடி திட்டறார்?’’
‘‘கடையில பாதுகாப்பு குடுத்தா போதாது! குடிச்சிட்டுப் போனா மனைவி அடிக்கிறா... வீட்டுக்கும் வந்து பாதுகாப்பு குடுங்கன்னு கேட்டானாம்!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘டாஸ்மாக் கடையை இடம் மாற்றணும்னு தலைவர் போராடுறாரே... ஏன்?’’
‘‘அவர் வீட்ல இருந்து இது ரொம்ப தூரத்துல இருக்காம்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

டாக்டர் நோயாளிகளுக்கு பி காம்ப்ளக்ஸ் மாத்திரை எழுதிக் குடுப்பார்.
அவர் கிளினிக் வச்சிருக்கிற காம்ப்ளக்சையே எழுதிக் குடுப்பாரா?
- கம்பவுண்டரிடம் டோக்கன் வாங்கி நர்ஸ்களிடம் கடலை போடுவோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

தத்துவம் மச்சி தத்துவம்

ஏன்யா! உனக்குத்தான் கை, கால் நல்லா இருக்கே... ஏன் பிச்சை எடுக்கறே?’’
‘‘நீங்க கொடுக்கற ஒரு ரூபாய்க்காக நான் கை, காலை உடைச்சுக்கணுமா?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.



‘‘டாக்டர், என் புருஷன் குடியை மறக்க மருந்து குடுக்கலைன்னாலும் பரவாயில்லை. சைடு டிஷ்ஷை மறக்க மருந்து குடுங்க...’’
‘‘ஏன்?’’
‘‘நூறு ரூபா குவாட்டருக்கு முன்னூறு ரூபாய்க்கு சைடு டிஷ் சாப்பிடுறார்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

செல்போன் கோபுர உச்சியில் எதுக்கு ஏறினே..?’’
‘‘யாருடைய தொந்தரவும் இல்லாம தண்ணி அடிக்கத்தான் எசமான்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

நான் கொடுக்கிற மருந்தை நீங்க சாப்பாட்டோட சேர்த்து சாப்பிடணும்...’’
‘‘இதுக்குப் பேருதான் சோத்துல விஷம் வைக்கிறதா, டாக்டர்?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தன்னை விசாரிக்க வந்த சி.பி.ஐ அதிகாரிகள் கிட்ட தலைவர் என்ன கேட்டார்?’’
‘‘2016 தேர்தல்ல ஜெயிக்க டிப்ஸ் கேட்டாராம்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

ஸ்பீக்கரு...

தொண்டர்களே! என் மீது நீங்கள் செருப்பு வீசுவதை நான் எதிர்க்கவில்லை. அதை ஜோடியாக வீசாமல் ஒன்றை மட்டும் வீசினால் அதை வைத்து நான் என்ன செய்வது? மீதி ஒன்றை வைத்து நீங்கள்தான் என்ன செய்ய முடியும்? யோசியுங்கள். வீசுங்கள்...’’
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

என்னதான் தரையைக் கண்டாலே படுக்க ஆசையா இருந்தாலும், புளியோ‘தரை’ மேல படுக்க முடியுமா?
- சோம்பல் முறிக்கக் கூட சோம்பேறித்தனப்படுவோர் சங்கம்
- கோ.சு.சுரேஷ், கோவை.