facebook




நாலைஞ்சு குடித்தனக்காரங்க துணி காயப் போடுற மொட்டை மாடியில நம்மளோட துணிகளைக் கண்டு பிடிக்க உதவுறது அந்த துணிகள்ல மாட்டியிருக்க க்ளிப்புதான்!
- தேவி செல்வராஜன்

‘ஜென்டில்மேன்’ பட சரண்ராஜுக்குப் பொறவு இவருதான் போலீஸ் டிரஸ்ல மொட்டை போட்ட ஆளுன்னு நினைக்கிறேன்...காவல்துறைக்கு இதைவிட இழிவு வேறில்லை!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

மார்க்கெட்டில் கிடைக்காத பொருளுக்கு கோடிக்கணக்கில் விளம்பரம் பண்ணுவது... ‘கிங்ஃபிஷர் மியூசிக் சிடி’க்குதான்!
- எழிலன் பல்மருத்துவர்

முன்னேற்றம் என நினைத்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகரும்போதெல்லாம், மனிதர்களுக்குக் கண்ணுக்குத் தெரியா கோரப்பற்களும், கொம்புகளும் முளைக்கின்றன.
- தீபா சாரதி

‘‘டெல்லி மெட்ரோல 10 கி.மீக்கு 16 ரூபாதானாம்...’’‘‘ஓ, சூப்பர்... ஆலந்தூர் போவுமா?’’
- அதிஷா அதிஷா

ஏனோ தெரியவில்லை... ஆண்டவன் கெட்டதில்தான் அபாரமான ருசியை வைத்திருக்கிறான்!
- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

பெண் பைலட்கள் மெட்ரோவை அங்கு இயக்கும் அதே நேரத்தில், இங்கே ஒரு பெண் தரையைக் கால்களால் தேய்த்தவாறு ஸ்கூட்டியை நிறுத்த முயன்றுகொண்டிருக்கிறார்...
- ஈரோடு கதிர்

அன்பே... கண்ணே... செல்லம்... தங்கம்... இப்படியாக டேக் ஆஃப் ஆகி, ஹனி... ஸ்வீட் ஹார்ட்... பேபி... புஜ்ஜிமா... டார்லு... என்று உயரப் பறந்து, ஏ லூசு... எரும... பக்கி... கொரங்கு... என படு லோக்கலா அபவுட் டர்ன் ஆகி, ஒண்ணுக்குள்ள ஒண்ணா பெஸ்டி ஆவதுதான் இந்த செஞ்சுரி லவ்!
- வித்யா குருமூர்த்தி

‘தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ போறேன்னு சொன்னா கெத்தாவும், அதையே சுருக்கி ‘டாஸ்மாக்’ போறேன்னு சொன்னா செத்த எலி போலவும் பார்ப்பதுதான் உலகின் தன்மை!
- ஈரோடு கதிர்

எதையும் பேசித் தீத்துக்கலாம்னு சொல்ற ஒவ்வொரு தனி மனிதரும், தன் பிரச்னைன்னு வர்றபோது நேரா தீர்ப்ப மட்டும் சொல்லிடறாங்க.
‪- பாபி கோபி

தீபாவளி பர்ச்சேஸுக்குத்தான் இந்த மாதிரி கூட்டங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். குடும்பம் குடும்பமாக ஹெல்மெட் வாங்க வந்திருக்கிறார்கள். கல்யாண மண்டபங்களில் ஹெல்மெட் மெகா விற்பனை மேளாக்களை போட்டிருந்தார்கள்.
- சஞ்சய் காந்தி

கடவுள் தரமில்லாத மண்டை ஓட்டை படைச்சதாலதானே நமக்கு இப்ப எக்ஸ்ட்ரா செலவு...
- ரிட்டயர்டு ரவுடி போராளி

twitter

@ak_nirmal 
காஸ்ட்லி போனை அடுத்தவன்கிட்ட குடுத்து போட்டோ எடுக்க பயந்த எவனோ ஒருத்தன்தான் இந்த செல்ஃபியை கண்டுபுடிச்சிருக்கணும்!

@SriLiro 
எனக்குப் பக்கத்துல ஒரு குட்டிப்பொண்ணு, முதல்முறையா தியேட்டர் வந்திருக்காம்... ‘‘எவ்ளோ பெரிய டி.வி.மா, ரிமோட் யார்கிட்ட இருக்கு’’ன்னு கேட்கிறா!

@SeSenthilkumar 
நாம்தான் அதை ஒளிவட்டம்னு நினைக்கிறோம் போல... கடைசியில்தான் தெரியுது பல்புன்னு!

@SaravananStalin 
தவறு செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல் திரும்பும்போதுதான் நம்மீது நமக்கே மரியாதை கூடுகிறது.

@VenkysTwitts
என்னடா இது இவ்வளவு பெரிய மஞ்ச கலர் ஹெல்மெட்டை போட்டுக்கிட்டு சிக்னல்ல நம்ம பக்கத்தில வந்து நிக்கிறாரேன்னு பாத்தா, நேனோ கார் அது.

@vinodhkrs 
நாலஞ்சு ஹெல்ெமட் வாங்கி வாடகைக்கு விட்டு பேக்ரவுண்ட்ல ஒரு பாட்டை ஓடவிட்டோம்னா, அந்தப் பாட்டு முடியுறதுக்குள்ள பெரியாளாகிடுவோம்!

@Kosaaksi 
இதுவரைக்கும் குடும்பத்துக்குன்னு மொத்தமா டிரஸ்தான்  வாங்குனோம். இப்ப குடும்பத்துக்குன்னு ஹெல்மெட்டு வாங்க வேண்டியதாயிருச்சு.

@i_rajtuty 
போன தடவை ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டபோது, பெட்ரோல்  பங்க்குகளில் பல மனைவிமார்கள் வண்டி மாறி ஏறிச் சென்றது வரலாறு. ஆகவே கவனம்  அவசியம்!

@venkatesh6mugam 
நாய் வாங்கும்போது கூட உயர் ஜாதி நாய் வாங்கும் மனிதர்களா ஜாதியை ஒழிக்கப் போகிறார்கள்?

@iamVariable
மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நால்வராலும் கைவிடப்பட்டவனை ‘கர்ணன்’ என்று அழைக்கலாம்...

@Thaaymanam 
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள  நீதிமன்றம் அனுமதி.# சபாஷ்... இப்பதான் இந்தியா, அமெரிக்கா போல செயல்படுது!

@bommaiya 
காலம் காலமா வித்தவுட்டில் பயணிப்பவர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொள்ளவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது..!

@mokkaiwriter
ஜெயலலிதா கொடநாடு பயணம்.# தட், ‘ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்குறேன்’ மொமண்ட் :)

@kandaknd 
இடைத் தேர்தல் எல்லாம் ஆளும் கட்சி எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கும்னு பார்ப்பதற்காகவே செலவு பண்ணி நடத்தப்படுவது!

@BoopatyMurugesh 
‘‘அவரால் 1000 குடும்பத்துல அடுப்பு எரியுது’’ என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென அர்த்தமில்லை, கேஸ் சிலிண்டர் ஏஜென்சி எடுத்தவராகக்கூட இருக்கலாம்.

@mekalapugazh 
பேயைப் பார்த்தேன்னு சொன்னாக்கூட பத்து பேர் நம்பறான்... சாமியைப் பார்த்தேன்னு சொல்லிப் பாருங்க, தெரியும் சேதி!