செலக்க்ஷன்



‘‘சார், ஹெச்.ஆர். மேனேஜர் போஸ்ட்டுக்கு இன்டர்வியூ நடத்தியாச்சு. ஃபைனல் லிஸ்ட்ல கதிர், கணேஷ்னு ெரண்டு பேர் வந்திருக்காங்க. தகுதி, அனுபவம், திறமை, நாலேட்ஜ்ல ரெண்டு பேருமே சரிசமமா இருக்காங்க... யாரை செலக்ட் பண்றதுன்னு குழப்பமா இருக்கு...’’ - முதலாளியிடம் ரிப்போர்ட் செய்தார் ஜெனரல் மேனேஜர்.
‘‘சரி, வரச் சொல்லுங்க... நான் பார்க்கிறேன்...’’

முதலில் கதிர் உள்ளே அழைக்கப்பட்டான். ‘‘நீங்க வேற கம்பெனியில வேலை பார்த்துட்டிருக்கீங்க. ஆனா, எங்களுக்கு உடனே ஆள் தேவைப்படுது. எப்போ ஜாயின் பண்ணுவீங்க?’’‘‘நாளைக்கே கூட ரெடி சார்...’’ என்றான் கதிர்.‘‘ஓ.கே... நீங்க வெயிட் பண்ணுங்க...’’அடுத்து கணேஷிடமும் அதே கேள்வியைக் கேட்க, ‘‘ஸாரி சார்... இப்ப வேலை பார்க்குற கம்பெனில என்னோட பொறுப்பை வேற ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சுட்டு, அவர் செட்டான பின்னாலதான் ஜாயின் பண்ண முடியும். டைம் வேணும்!’’ என்றான் அவன்.

அவனையும் வெளியே அனுப்பிய முதலாளி, பக்கத்தில் இருந்த ஜெனரல் மேனேஜரைப் பார்த்தார்.‘‘புரிஞ்சிடுச்சு சார். அதிக சம்பளம் கிடைச்சதும் பழைய வேலையை உதறிட்டு ஓடி வர்ற கதிர், நம்மையும் அப்படி ஒருநாள் உதறுவான். ஸோ உங்க சாய்ஸ் கணேஷ்தானே?’’ஆமோதிப்பாய் சிரித்தார் முதலாளி.

கே.ஆனந்தன்