பன்றிக் காயச்சலுக்கு புது மருந்து!



கபசுர குடிநீர்...பப்பாளி இலை ஜூஸ், நிலவேம்பு கஷாயம் லிஸ்ட்டில் இனி இதையும் சேர்த்துக்குங்க மக்களே! பன்றிக் காய்ச்சலுக்கு தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் அறிமுகப்படுத்தி யிருக்கும் புதிய கஷாயம் இதுதான்.

‘‘பன்றிக் காய்ச்சல் உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதி களைப் பாதிக்கிறது. குறிப்பாக சுவாசக் குழாயில்தான் இந்நோய் பல மடங்கு பெருகி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் கபசுர குடிநீர் தடுத்துவிடும்.

இந்தக் குடிநீர் கபம், கபத்துடன் வருகிற மூட்டுவலி, காய்ச்சல் ஆகியவற்றை சரி செய்யும் வல்லமை கொண்டது. இதில் நிலவேம்பு, சிறுதேக்கு, கற்பூரவல்லி, லவங்கம், சுக்கு, திப்பிலி, வட்டதிருப்பி வேர், ஆடாதொடா இலை உள்ளிட்ட 15 மூலிகைகள் உள்ளன.

இதனை 10 கிராம் எடுத்து, 200 மி.லி தண்ணீரில் கொதிக்கவிட்டு, தண்ணீர் 50 மி.லி அளவானவுடன் குடிக்கலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையும், மற்றவர்கள் ஒரு முறையும் குடித்தால் போதும்.பன்றிக் காய்ச்சலை விரட்டிவிடலாம். இது, எந்த பக்கவிளைவும் ஏற்படுத்தாது’’ என்கிறார் இந்தச் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிச்சையா குமார். இதுக்கும் தியேட்டர்ல ரெஸிபி போடுவாங்களோ!

- பேராச்சி கண்ணன்