நல்லா வருவார்!



விஜயகாந்த் தள்ளாடியபடியே பிரசாரம் பண்ணினாலும் தள்ளுமுள்ளு நிலையில்தான் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் ரசிக்கும் அவர் பேச்சு, வாக்குகளாக மாறுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தீபிகா படுகோனே விஜய் படத்தில் நடிக்க வருவாரோ என்னவோ... எந்தத் திரையுலகுக்குப் போனாலும் ‘நல்லா வருவார்’. வெயிலுக்கு இதமாக அவர் கொடுத்திருக்கும் போஸே அதைச் சொல்லுது பாஸு!
 எச்.சூரியபிரகாஷ், சேலம்.

மறைந்த இலக்கியவாதி தி.க.சிக்கு அசோகமித்திரன் இரங்கல் எழுதிய விதம், புதுசு கண்ணா புதுசு. அப்படியே, ‘அசோகமித்திரன் பதில்கள்’ தொடங்கினா, நாங்க கேள்விகள் அனுப்புவோமில்ல!
 த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘பேசும் சித்திரங்கள்’ பகுதியில் இடம்பெற்ற குறும்படம், நடைமுறை யதார்த்த வாழ்வில் முதியவர்கள் புறக்கணிக்கப்படுவதை பிரதிபலித்தது. நம் மீது நமக்கே கோபம் வரும் அளவுக்கு மனதை பாதித்தது!
 எம்.ரஜியாபேகம், சென்னை91.

‘எனக்கு என்ன குறைச்சல்? நான் கதாநாயகியாக நடிக்கக் கூடாதா?’ என்ற சன்னி லியோனின் மனக்குறை நியாயமானதே. நீலப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர் முழுநீளப் படங்களில் வந்தால் என்ன தப்பு?
 ஜி.பால்பாண்டி, கோவை.

‘தெய்வத்திருமகள்’ படத்தில் இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் நடித்த அமலாபால், அவரது ‘இதயத் திருமகள்’ ஆகிவிட்டாரே! அவரது காதல் சட்டென செட்டாகி கல்யாணம் வரை சென்றதற்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
 எல்.குணசீலன்,
விழுப்புரம்.

‘அவன் அவள் அன்லிமிடெட்’ பகுதி, சபாஷ். ‘பணிந்து போவதாலும் அண்டிப் பிழைப்பதாலும் கூட, ‘இன்றைய பணத்தை’ சம்பாதித்துவிட முடியும் என்பதால் அதை வலிமையின் அடையாளமாகப் பெண்கள் ஏற்பதில்லை’ என்ற வரிகள் சுரீர்!
 தி.தெ.மணிவண்ணன்,
அங்கலக்குறிச்சி.

‘கிசுகிசுவுக்கு பயந்தால் வாழ முடியாது’ என நெத்தியடி பேட்டி யால் கிசுகிசு வீரர்களின் வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டார் ஸ்ருதி! ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘நேற்றைய பொழுதில்’ பகுதி யில் மார்க்கண்டேயன் சிவக்குமார் கமலுக்கு கொடுத்த கல்யாண பார்ட்டி பற்றிச் சொல்லியிருந்த விளக்கம், ஈகோ இல்லாத இனிய நட்புறவின் வெளிப்பாடு!
 ஓ.எஸ்.பாலகிருஷ்ணன், கோவில்பட்டி.