மறு கன்னத்தைக் காட்டினாலும் அடிப்பவர்களை மன்னிப்பது பெரும்பிழை!
- ராம்ஜி வெங்கட்ராமன்
சவூதியில் கடும் மழை, அமெரிக்காவில் கடும் பனி, நயாகரா உறைதல், ஆஸ்திரேலியாவில் கடும் வெயில், பெங்களூரில் வெப்பநிலை மாற்றம்.
# பூமி ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே... காது கேக்குமா நமக்கு?
- கிர்த்திகா தரன்

பின்னால் நாலு பேர் கியூவில் நிற்கிறார்கள் என்கிற உறுத்தல் இல்லாமல், ஓட்டல் வாஷ் பேஸினில் கைகழுவுவதோடு முகம், தோள்பட்டை எல்லாவற்றையும் கழுவி ஒரு மினிகுளியல் நடத்தி, பின்னால் நிற்பவர்களை டர்ர்ர்ர் ஆக்கினால், நீயும் என் நண்பனே:)
தக்காளிங்க... வீட்ல குளிக்காம ஓட்டல்ல வந்து குளிக்கிறானுங்க!
- பெ.கருணாகரன்
உப்புமா இல்லாத எல்லா காலையும் ஆசீர்வதிக்கப்பட்ட தினமே
- ஹரிசுதன் சிவசுப்ரமணியன்
எடைக்குப் போட முடியாத புக்
# ஃபேஸ்புக்
- மொகமது சலீம்
வெங்காயம் சாப்பிடாதீங்க. விலை தானா குறையும் - சுப்ரீம் கோர்ட்.
# குழந்தை நிறைய பெத்துக்கோங்க காண்டம் விலை குறையும்... சொன்னாலும் சொல்லுவாய்ங்க
- எர்னஸ்டோ குவேரா
என் அலறல்கள் கேட்காத உன் காதுகளில் என் சிணுங்கல்களா கேட்டு விடப் போகிறது?
- ராமசந்திரன் புதுமணப்பள்ளி
அம்மன் கோயிலுக்குப் போனா, அங்கேருந்து கே.ஆர்.விஜயாவோ, ரம்யா கிருஷ்ணனோ, மீனாவோ எழுந்திருச்சி வந்துருவாங்கன்னே தோணுது!
- ஹன்ஸா
தெருவிளக்குகள் பட்டப்பகலில் வீணாக எரிந்தால் கண்டு கொள்ளாமல் கைப்புள்ள மாதிரி செல்லும் பொதுமக்கள், விடிந்த பிறகு எதிர் வரும் இரு சக்கர வாகனத்தின் விளக்கு தப்பித் தவறி எரிந்தால் கூட வால்டர் வெற்றிவேல் அளவுக்குக் கடுமையாக இருக்கிறார்கள்.
- ஷான் கருப்பசாமி
தாழிட்டு அழுவதற்கான
சுவர்கள் வாய்த்தவர்கள்
பாக்கியவான்கள்!
- ரமேஷ் பொன்பெருமாள்
ஒவ்வொரு முற்றுப்புள்ளியின்போதும் ஒரு தொடக்கத்தையும், ஒவ்வொரு தொடக்கத்தின்போதும் ஒரு முற்றுப்புள்ளியையும் தவறாமல் தந்து செல்லும் உன்னை எந்தக் கவிதைக்குள் அடக்குவது?
- கவிதா சொர்ணவல்லி
கண்டும் காணாமல்
கடந்து விடத்தான் நினைக்கிறேன்
கருணையை இறைஞ்சும்
அடிமாட்டின் கண்களை.
- தீபா சாரதி
கெஜ்ரிவாலிடமிருந்து எளிமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்: மோடிக்கு திக்விஜய் சிங் அறிவுரை
# உதாரணம் சொல்றதுக்குக்கூட உங்க கட்சில ஆளில்லையே!
- ஜெயராஜ் பாண்டியன்
பல இடங்களில்
வயிறு பட்டினி கிடக்கிறது!
சில இடங்களில்
சோறு பட்டினி கிடக்கிறது!!
- சுதா ஆனந்த்
twitter வலைப்பேச்சு
@manipmp
உண்மையில் சரக்கு வாகனம் என்பது ‘செப்டிங் டேங்கர் லாரிகளே’!
@Alexxious
மேடைப் பேச்சுக்கு மேடை தேவை; திண்ணைப் பேச்சுக்கு திண்ணை தேவை; வெட்டிப் பேச்சுக்கு அந்த அவசியமெல்லாம் இல்லை.
@RavikumarMGR
இந்தக் காலத்துப் பசங்க எப்போவும் பேஸ்புக்லயே இருந்து நிறைய நண்பர்களை பேஸ்புக்ல சேத்துட்டாங்க! ஆனா நிஜ வாழ்க்கைல யாருமில்லாம போயிட்டாங்க!
@manipmp
மழைக்குக் கூட நிழற்குடை பக்கம் ஒதுங்கியதில்லை, ஏனென்றால் அங்கே அதைவிட ஒழுகும்!
@kasaayam
சம்பளம் மட்டுமில்ல... டூத்பேஸ்ட் வாங்கினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் தாராளமாகத்தான் செலவு பண்றோம்!
@i_thenali
வேற்று மதத்தில் காதல் திருமணம் செய்யும் ஆண்களுக்கு ‘கடவுள் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம்’தான் :))
@Tparavai
டிவியில் ரெண்டு படங்களோட டீசர்களும் அடுத்தடுத்து வர்றதை அடிக்கடி பார்க்க நேர்வதால், மோகன்லால் ரோலில் அஜித் நடித்திருப்பது போல் ஒரு பிரமை!
@raajaacs
பழைய ஆல்பத்தின் கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைப் போல கடந்து போகிறார் தபால்காரர்.
@Alexxious
பிளாஸ்டிக் வாளிகளும், பித்தளை வாளிகளும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் குற்ற‘வாளி’கள் ஆனார்கள்!
@manipmp
தடுக்கி விழுந்தவுடன் அடிபட்ட இடத்தைப் பார்க்காமல், தடுக்கி விழுந்த இடத்தைப் பார்ப்பவனே
தமிழன்!
@Alexxious
மனிதன் போடும் கணக்குகள் சில சரியாகிறது, சில ‘சாரி’யாகிறது!
@RazKoLu
மரணம்தான் அனைவரின் உண்மையான ஃபாலோயர்.
@thoatta
வலது பக்கம் மகளும், இடது பக்கம் ஏதோ ஒரு புத்தகமுமாக எழும் வாரத்தின் சில விடியல்கள்தான்
எத்தனை ரம்மியமானவை...
@FrancisPichaiah
சில வேளைகளில் பிரிவு மிகவும் துயரம் தருவதாக இருந்தாலும், பின்னொரு வேளையில் நாம் எடுத்த சிறந்த முடிவுகளில் அதுவும் ஒன்றாகத் தெரிகிறது..!
@kiramaththan
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறது ஆடை!
@pandiaraj3
தோழியை மனைவியாக்க திருமணம் தேவை... மனைவியை தோழியாக்க பரந்த மனம் தேவை.
@kadaikutti
யாருக்கும் தெரியாமல் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்றால், அதை நீங்கள் செய்யாமல்தான் இருக்க வேண்டும்..
@meensmini
ஒரு ரூபாயை கண்டக்டர் மீதி தராதபோது, ரூபாயின் மதிப்பு சட்டென்று உயர்ந்துவிடுகிறது.