சகுனியின் தாயம்



கொத்தாக பரதவர்கள் குவித்து வைத்திருந்த வலைகளுக்கு பின்னால் மறைந்தபடி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான் இளமாறன். படகை விட்டு இறங்கிய யவன ராணி, மேற்கொண்டு அடியெடுத்து வைக்காமல் அப்படியே அசையாமல் நின்றாள். தன் முன்னால் தெரிந்த புகார் நகரை அநேகமாக அவள் அளவிட வேண்டுமென்று இளமாறன் நினைத்தான். அவன் கணிப்பு வீண் போகவில்லை. யவன ராணியின் கண்கள் காவிரிப்பூம்பட்டினத்தைத்தான் அலசிக் கொண்டிருந்தன.

அதே நேரம் அவனும் அவளை ஆராய ஆரம்பித்தான். சராசரி தமிழ்ப் பெண்களை விட சற்றே உயரம். சதைப் பிடிப்பான தேகம். வயதானவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. திருத்தப்பட்ட புருவத்துக்கு கீழே மீன்கள் துள்ளி விளையாடுவது போல் கருமணிகள் விழிக்கடலில் நீந்திக் கொண்டிருந்தன. கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை சிவப்பு நிற மெல்லிய பட்டால் மூடியிருந்தாள். தலைமுடி காற்றில் பறக்காமல் இருக்கவும், தன் அந்தஸ்தை வலியுறுத்தும் விதமாகவும் பொன்னாலான கிரீடத்தை சூடியிருந்தாள். பார்ப்பதற்கு அது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போலவே இருந்தது.

கூர்மையான நாசியும், அளவான இளஞ்சிவப்பு நிற உதடுகளும், மஞ்சள் கலந்த மேனியும், மழைக்கால மரப்பட்டைகளின் நிறத்தில் இடுப்பு வரை வளர்ந்திருந்த தலைமுடியும் அந்த இரவிலும் துல்லியமாகத் தெரிந்தன. காரணம், சற்று தூரத்தே யிருந்த கலங்கரை விளக்கத்தில் ஆடிய பந்தங்களின் வெளிச்சமும், கோட்டை உச்சி விளக்குகளின் சுடரொளியும் அவள் மீது லேசாக விழுந்தாலும் கனமாகவே படர்ந்ததுதான். இது தவிர வான மண்டலமும் அவனது ஆராய்ச்சிக்கு துணை நின்றது. நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டமும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய், புதன் முதலிய கோள்களும் மேகக் கூட்டங்களை விட்டு வெளியேறி பூமியில் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. மழை பெய்து மண்ணைக் குளிர வைக்க வேண்டிய ஆவணி மாதமும் அன்று ஏனோ, மழையையோ, குளிரையோ புகாரைச் சுற்றிலும் பரப்பவில்லை.

இவை எல்லாமாகச் சேர்ந்து யவன ராணியின் தோற்றத்தை இளமாறனின் உள்ளத்தில் அழுத்தமாக செதுக்க துணை புரிந்தன. இதற்குள் ராணி தன்னை பின்தொடர்ந்து வரவில்லை என்பதை அறிந்த புகாரின் தளபதி பதட்டமானான். ‘‘ஏதேனும் பிரச்னையா ராணி?’’ என்று கேட்டபடியே மூச்சிரைக்க ஓடிவந்தான்.
‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை...’’ என்று அலட்சியமாக ராணி பதிலளித்தது, மறைவில் இருந்த அவன் செவிகளிலும் விழுந்தது.

புகாரின் தளபதி முன்னால் நடக்க, ராணி பின்தொடர்ந்தாள். தலையைக் குனியாமலும், கால்கள் தடுமாறாமலும் நிமிர்ந்து அவள் நடப்பதைக் கண்ட இளமாறனின் உதட்டில் புன்முறுவல் பூத்தது. அவன் இருந்த பகுதியை நோக்கி அவர்கள் வரவே, அரைவட்டமாக மறைப்பைச் சுற்றி நகர்ந்தபடியே இருந்தான். ‘‘கழுகின் பொறியமைப்புடன் கோட்டை கட்டப்பட்டிருக்கிறதா?’’ என்று ராணி கேட்டதுமே, புகாரின் தளபதி நின்றான். அவன் கண்கள் வியப்பால் விரிந்தன.

‘‘எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’’
ராணி இதற்கு விடையளிக்கவில்லை. பதிலாக, ‘‘கழுகின் கழுத்துப் பகுதிக்கு செல்லப் போகிறோமா?’’ என்று வினவினாள்.
‘‘ஆம் ராணி. அங்குதான் என் மாளிகை இருக்கிறது...’’
‘‘சரி. முன்னால் செல்...’’
சென்றான். சென்றாள். சென்றார்கள்.

மறைவை விட்டு வெளியே வந்த இளமாறன், கோட்டையை நோக்கி புள்ளியாகச் சென்றுக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் பார்த்தான். அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. கண்களாலேயே கோட்டையின் அமைப்பை யவன ராணி அளவிடுகிறாள் என்றால்... நிச்சயம் அவள் சிற்ப சாஸ்திரம் தெரிந்தவளாக இருக்க வேண்டும். சொல்வதற்கில்லை. யந்திரப் பொறிகளும் அவளுக்கு அத்துப்படியாகி இருக்கலாம்.

ஆளப்பிறந்தவள். அதில் சந்தேகமேயில்லை. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் அதைத்தான் பறைசாற்றுகின்றன. அப்படிப்பட்டவள் துணைக்கு ஓராள் கூட இல்லாமல் தன்னந்தனியாக திங்கள்கணக்கில் கடலில் பயணம் செய்து எதற்காக புகாருக்கு வந்திருக்கிறாள்? ஏன் அவளை மரியாதையுடன் பகலில் அழைத்துச் செல்லாமல், கள்வனைப் போல் நடுஜாமத்தில் யாருக்கும் தெரியாமல் தன் மாளிகைக்கு புகாரின் தளபதி அழைத்துச் செல்கிறான்?

ஏதோ சூதிருக்கிறது. அது என்ன என்பது கண்டிப்பாக தளபதியின் மாளிகைக்குச் சென்றால் தெரிந்து விடும். அதன் பிறகு சற்றும் தாமதிக்காமல் மடமடவென்று நடக்க ஆரம்பித்த இளமாறன், அவ்விருவரும் சென்ற பாதைக்கு எதிர்த்திசையில் செல்ல ஆரம்பித்தான். சுற்று வழிதான். ஆனால், எவர் கண்ணிலும் படாமல் செல்ல அதுதான் ஒரே வழி.

இரண்டாம் ஜாமம் ஏறிவிட்டதால் யவன காவலர்கள் தங்கள் மேற்பார்வையை முடித்துக் கொண்டு கோட்டை வாயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். பந்தங்களின் வெளிச்சத்தில் ஊருக்குள் அவர்கள் செல்வது கோடுகளாகத் தெரிந்தது. அதை கவனித்தபடியே எச்சரிக்கையுடன் கரையோர இருளில் நடந்து கோட்டையின் வட
புறத்தில் இருந்த திட்டிவாசலுக்குள் நுழைந்தான். அங்கு பெருங்காவல் இல்லை. பத்து, பன்னிரெண்டு காவலர்களே இருந்தார்கள். அவர்கள் அவனைத் தடுக்கவும் இல்லை; கேள்வி கேட்கவும் இல்லை.

என்றாலும் தன் விழிப்பை அவன் கைவிடவில்லை. நிதானமாகவே யவன தெருக் களைக் கடந்து குடியி ருப்புப் பகுதிக்கு வந்தான். தெருக்களில் அதிக விளக்கில்லை. ஆங்காங்கு மூலைகளில் எரிந்து கொண்டிருந்த ஓரிரு தீப்பந்தங்களும் அதிக ஜ்வாலையை வீசவில்லை. நிலைமை அனுகூலமாக இருந்தபோதும் அதைப் பயன்படுத்தத் தயங்கினான். இருந்த ஓரிரு பந்தங்கள் உண்டாக்கிய வெளிச்சத்தின் விளைவாக பக்கத்து மாளிகையின் பெரும் தூண்களும், தாழ்வாரங்களும் வீசியிருந்த நிழற்பிரதேசத்திலேயே ஒதுங்கி ஒதுங்கி நடந்தான்.

வீதிக் காவலர்கள் அவ்வப்போது மூலைகளில் திரும்பிய சமயங்களில் மட்டும், எவர் கவனத்தையும் திருப்ப விரும்பாததால் தூண்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டான். இப்படியே மருவூர்ப்பாக்கத்தின் முதல் முப்பெரும் வீதிகளைக் கடந்து, மருவூர்ப்பாக்கத்துக்கும், பட்டினப்பாக்கத்துக்கும் இடையேயிருந்த தனித்த சாலைக்கு வந்து சேர்ந்தான்.

அங்கிருந்த மாளிகைதான் புகார் தளபதியின் இருப்பிடம். மாளிகையைச் சுற்றி பலத்த காவல் இருந்தது. மறைவதற்கும், மாளிகைக்குள் எட்டிப் பார்க்கவும் கூட வழிகள் எதுவும் இல்லை.
என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே அடியெடுத்து வைத்த இளமாறன், சட்டென்று நின்றான். அவன் காலில் ஏதோ இடறியது. குனிந்து அது என்ன பொருள் என்று பார்த்தான். திகைத்தான். அதிர்ந்தான். கைகள் நடுங்க அந்தப் பொருளை எடுத்தவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

எந்தப் பொருள் மதுரையை எரித்து சாம்பலாக்கியதோ, எதன் காரணமாக பாண்டிய மன்னனின் நீதி உலகெங்கும் நகைப்புக்குள்ளானதோ, அந்தப் பொருளைத்தான் அவன் கரங்கள் ஏந்திக் கொண்டிருந்தன. அது, கண்ணகியின் காற்சிலம்பு. ‘‘தாத்தா நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியல...’’ கண்கள் விரிய சொன்ன மகேஷ், தொடர்ந்தான்.

‘‘நான் சென்னை சானிடோரியத்துல இருக்கேன். அங்க ஜட்ஜ் காலனி இருக்கு இல்லையா? அங்கதான் என் வீடு இருக்கு. கோட் போட்டுட்டு போன முயலை பார்த்தேன்... ‘அட என்னடா இது’ன்னு அதை ஆச்சர்யத்தோட துரத்தினனா... அது சட்டுன்னு ஒரு பொந்துக்குள்ள நுழைஞ்சுடுச்சு. நானும் யோசிக்காம அது கூடவே வந்துட்டேன். இங்க வந்து பார்த்தா அந்த முயலை காணும். அதுக்குப் பதிலா நீங்க இருக்கீங்க. ஆனா, என்னென்னவோ சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியல. ப்ளீஸ் தாத்தா... எப்படியாவது என்னை என் வீட்டுல விட்டுடுங்க. நிறைய ஹோம் ஒர்க் இருக்கு. அதையெல்லாம் செய்யலைன்னா நாளைக்கு மிஸ் திட்டுவாங்க. அதுபோக குழந்தையைக் காணுமேன்னு அம்மா வேற தேடிட்டு இருப்பாங்க...’’ என்று கெஞ்சினான்.
‘‘அப்ப எங்க ராஜகுமாரியை யாரு காப்பாத்துவாங்க?’’ - தாத்தா கேட்டார்.

‘‘சாமிகிட்ட வேண்டிக்குங்க...’’
‘‘அந்த சாமிதானே உன்னை அனுப்பியிருக்காரு?’’
‘‘அச்சோ... இல்ல தாத்தா. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. நான் ரொம்ப சின்னப் பையன். என்னால எல்லாம் மந்திரவாதியோட சண்டை போட முடியாது...’’
‘‘இல்ல மகேஷ். உன்னால மட்டும்தான் மந்திரவாதியை எதிர்த்து சண்டை போட முடியும். எங்க ராஜகுமாரியைக் காப்பாத்த முடியும். அதனாலதான் அந்த கடவுள் முயல் வேஷத்துல வந்து உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காரு...’’
சொன்ன தாத்தாவை விநோதமாகப் பார்த்தான்.

‘‘சரி... உங்க அம்மா சொன்னா நம்புவ இல்லையா?’’ என்று கேட்ட தாத்தா அவனை அழைத்துக் கொண்டு சென்றார். அவர் கையைப் பிடித்தபடியே மகேஷ் சென்றான். தாத்தாவின் உள்ளங்கை பிசுபிசுப்பாக இருந்தது. அவருக்குத் தெரியாமல் நைசாக தன் கையில் ஒட்டிய பிசுபிசுப்பை நாக்கில் தடவினான். கசந்தது. உவ்வேக். என்ன இது... இப்படி வாந்தி வருவது போல் குமட்டுகிறது!
முகத்தைச் சுளித்தபடி அண்ணாந்து அவரைப் பார்த்தான். அவன் பக்கம் கூட அவர் திரும்பவில்லை. யோசனையுடன் நடந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தன் தாடியை - தப்பு.. தப்பு... விழுதை - தடவிக் கொண்டார். இதனால் வீசிய காற்று அவன் முகத்தில் மோதி அவனைக் குளிர வைத்தது.

சுற்றிலும் பார்த்தான். அது அறையே இல்லை. சொல்லப் போனால் வீடும் இல்லை. பெரிய மரத்தின் பொந்து. அதற்குள்தான் நடந்து கொண்டிருந்தார்கள். ஆஹா... மரத்துக்குள்ளா நடக்கிறோம்? ஆனால், இவ்வளவு பெரிய மரத்தை இதற்கு முன் பார்த்ததில்லையே? இவ்வளவு அகலமாகவும், நீளமாகவுமா மரத்தின் அடிப்பகுதி இருக்கும்? கேள்விகள்தான் மகேஷுக்குள் பூத்துக் கொண்டே இருந்தன. எதற்கும் விடை கிடைக்கவில்லை. அம்மா மட்டும் உடன் வந்திருந்தால் பதிலுக்காக துளைத்திருக்கலாம். அய்யோ... அம்மா தேடுவார்களே...

‘‘ப்ளீஸ் தாத்தா... என்னை எங்க வீட்டுல விட்டுடுங்க...’’ என்று சொல்வதற்காக வாய் திறந்தான். ஆனால், வார்த்தைகள் வெளிவரவே இல்லை. காரணம், ஆளுயரக் கண்ணாடி முன்னால் அவர்கள் நின்று கொண்டிருந்ததுதான். அதே போல் ஒரு கண்ணாடி அவன் வீட்டில் இருக்கிறது. அதில் தன் முகத்தைப் பார்த்தபடிதான் அவன் அம்மா பொட்டு வைத்துக் கொள்வாள். சுரிதாரை சரி செய்து கொள்வாள்.

‘‘உன்னோட எல்லா கேள்விக்கும் இந்தக் கண்ணாடி பதில் சொல்லும்...’’ என்று அவனைப் பார்த்து சொன்னார் தாத்தா.
‘‘இந்தக் கண்ணாடியா?’’
‘‘ஆமா...’’
‘‘எப்படி?’’

‘‘இதோ இப்படி...’’ என்ற தாத்தா, கடிகாரத்தில் முள் சுற்றுவது போல் கண்ணாடி முன்னால் தன் வலது கையை அகலமாக விரித்து சுற்றினார்.
‘‘மாயக்கண்ணாடியே... மகேஷ் தன் அம்மாவிடம் பேச வேண்டுமாம். ஏற்பாடு செய்...’’இதென்ன விளையாட்டு என்று அவன் யோசிப்பதற்குள் அந்த அதிசயம் நடந்தது. அவன் அப்பா உயரம் இருக்கும் கண்ணாடி, அந்தரத்தில் சைக்கிள் சக்கரம் சுழல்வது போல் வேகமாகச் சுற்றியது. அதுவும் சாக்லெட் விளம்பரம் டிவியில் வரும் நேரம் அளவுக்கு ஸ்பீடாக வட்டமடித்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல வேகம் தணிந்தது. பழையபடி கண்ணாடி அசையாமல் நின்றபோது அதில் அவன் அம்மா தெரிந்தாள்.
‘‘என்ன மகேஷ்... எதுக்கு என்னை கூப்பிட்ட?’’
‘‘அம்மா...’’

‘‘தலைக்கு மேல வேலை இருக்கு. உங்க அப்பா வர்றதுக்குள்ள எல்லாத்தையும் முடிக்கணும். இல்லைனா திட்டுவார். தினமும் நீயும் பார்த்துட்டுத்தானே இருக்க? சரி... சரி... அடம் பிடிக்காம தாத்தா சொல்றதை கேளு. ஸ்கூல் பத்தி கவலைப்படாத. மிஸ்கிட்ட பேசிட்டேன். ராஜகுமாரியை கண்டுபிடிச்ச பிறகே க்ளாசுக்கு நீ வரலாம்னு சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எந்த எக்ஸாம் நடந்தாலும் உன்னை பாஸ் பண்ண வைச்சிடறாங்களாம். அதுவும் ‘ஏ’ கிரேடே தர்றாங்களாம்...’’
‘‘அம்மா...’’

‘‘மை காட்... பால் பொங்கறா மாதிரி இருக்கு. அப்புறம் பேசலாம்...’’ என்றபடி மறைந்தாள்.
‘‘என்ன மகேஷ், இப்ப ஓகேதானே?’’ பிரியத்துடன் கேட்டார் தாத்தா.
‘‘டபுள் ஓகே தாத்தா...’’
‘‘சரி புறப்படு...’’
‘‘எங்க?’’

‘‘ராஜகுமாரி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க...’’
‘‘இந்த மாயக்கண்ணாடி அந்த இடத்தை காண்பிக்காதா?’’
‘‘ம்ஹும் காட்டாது. ஏன்னா, மந்திரவாதியை எதிர்க்கிற சக்தி எங்க யாருக்கும் இல்ல. அதனால தான் உன்னோட ஹெல்ப்பை கேட்கறோம்...’’
‘‘சரி தாத்தா. கண்டிப்பா உதவறேன். அந்த மந்திரவாதியோட உயிர் ஒரு கிளிக்குள்ள இருக்குன்னுதானே சொன்னீங்க?’’
‘‘ம்...’’

‘‘அந்தக் கிளியையும் கண்டு
பிடிச்சுடலாம். அதுக்கு முன்னாடி சூச்சு போகணும். ரொம்ப நேரமா அடக்கிட்டு இருக்கேன்...’’
‘‘அதோ அந்தப் பக்கமா போயிட்டு வா...’’
தாத்தா காட்டிய திசைக்குச் சென்ற மகேஷ் சூச்சு போன

படியே திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.
தன் தலையில் அணிந்திருந்த தொப்பியை தாத்தா அப்போது எடுத்திருந்தார். தலைமுடி புதர் போல் வளர்ந்திருந்தது. அந்த புதருக்குள் ஒரு கிளி அமர்ந்திருந்தது.
சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான் ஸ்காட் வில்லியம்ஸ்.
வெள்ளை சீருடை அணிந்திருந்த ஒருவன் அவன் பெயரைத் தாங்கிய அட்டையைத் தூக்கிப் பிடித்திருந்தான்.
அவனை நெருங்கி, ‘‘ஐ அம் ஸ்காட் வில்லியம்ஸ்... போகலாமா?’’ என்றான்.

‘‘சார்... உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’’
‘‘தெரியும்...’’ என்று புன்னகைத்தான்.
அட்டையை பிடித்திருந்தவன் வியப்புடன் முன்னால் நடக்க, வில்லியம்ஸ் சுற்றிலும் பார்த்தபடியே அவனைப் பின்தொடர்ந்தான். எஞ்சினை ஓடவிட்டபடி காத்திருந்த டிரைவர், இவர்களைக் கண்டதும் கார் கதவைத் திறந்தான். முன் இருக்கையில் அட்டையைப் பிடித்திருந்தவன் அமர, பின் இருக்கையில் வில்லியம்ஸ் அமர்ந்தான்.
அமர்ந்த இடத்தில் அன்றைய ‘தினகரன்’ இருந்தது. எடுத்து தலைப்புச் செய்தியைப் படித்தான்.

தமிழகத்தில் இப்போது வேகமாக விஷக் காய்ச்சல் பரவி வருவதாக செய்தி வெளியாகியிருந்தது.
பேப்பரை சீட்டில் வைத்து விட்டு தன் கையில் இருந்த பையைத் தடவினான்.
அதனுள்தான் விஷக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமான டானிக் இருந்தது.

‘‘கபாலி ரொம்பத் துணிஞ்சிட்டான் சார்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க ஏட்டய்யா..?’’
‘‘ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்... உங்க ஸ்டேஷனுக்கே வந்து திருடித் தர்றேங்கறான் சார்!’’

‘‘மன்னர் திடீரென ஏன் பெரிய சமாதானப்
பிரியராக மாறி
விட்டார்?’’ ‘‘பாவம்... அவரும்தான் எத்தனை காலத்திற்கு ஓடிக்கொண்டே இருப்பார்!’’

‘‘பேங்க் வாசல்ல எதுக்கு இத்தனை பேர் அழுதுக்கிட்டு இருக்காங்க...’’
‘‘ஏதோ கடனுக்கு அழறாங்களாம்..!’’
- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.                           

(தொடரும்)

கே.என்.சிவராமன்