‘‘வாயுள்ள பிள்ளைதான் பொழைக்கும்ங்கிற பழமொழியை நீ நம்பலையா... எப்பலேர்ந்து?’’
‘‘நம்ம பிரதமரைப் பார்த்ததுலேர்ந்து!’’
- தாமு, தஞ்சாவூர்.
‘‘மன்னா! உங்களை மாதிரியே தான் ரூபாயும்...’’
‘‘எப்படி அமைச்சரே..?’’
‘‘அதற்கும் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது!’’
- தாமு, தஞ்சாவூர்.
பட்டுப் பூச்சியில இருந்து பட்டு எடுக்கலாம். கம்பளிப் பூச்சியில இருந்து கம்பளி எடுக்க முடியுமா?
- பட்டுன்னு யோசிச்சு சட்டுன்னு தத்துவம் சொல்வோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
பஸ் கெட்டவன் மாதிரி பல ரூட்ல போகும். ஆனா ரயில் நல்லவன் மாதிரி ஒரே ரூட்லதான் போகும்!
- ரயில் எஞ்சின் டிரைவரிடம் லிஃப்ட் கேட்போர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘நம்ம தலைவர்தான் எந்த ஊழலும் செய்யவில்லையே... எதுக்கு அவரை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிச்சிட்டு இருக்காங்க?’’
‘‘எந்த ஊழலும் செய்யாம எப்படி கட்சி நடத்துறார்னு சந்தேகம் வந்திருக்காம்..!’’
- வண்ணை கணேசன், சென்னை-110.
‘‘ஆனாலும் அந்தக் கட்சியில பண்றது ரொம்ப ஓவர்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘இன்னோவா கார்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்னு கட்சி ஆபீஸ் வாசல்ல போர்டு வச்சிருக்காங்க!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘தலைவர் இன்னும் சினிமாவை மறக்கலைன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்சியோட கோஷ்டி சண்டையைக் கூட ஸ்டன்ட் மாஸ்டரை வச்சு நடத்தணும்ங்கறாரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.