நிர்வாண நிமிடங்கள்...






நடிகைகள் நிர்வாணமா நடிக்கிறது ஹாலிவுட்டைப் பொறுத்தவரை சகஜம். ஆனா அது இந்தியாவில எப்போதோ நடக்கிற விஷயம். இந்தியில ஜீனத் அமன், சீமா பிஸ்வாஸ் எல்லாம் அப்படி நடிச்சிருக்க, தமிழ்ல அந்தப் புண்ணியத்தைத் துவக்கி வச்சிருக்கு ‘காதல்’ சரண்யா. ‘மழைக்காலம்‘ படத்துல அப்படி ஒரு சீன் வருது. அதுல சில நிமிடங்களுக்கு சரண்யாவை நிர்வாணமா நடிக்கச் சொல்லி டைரக்டர் எஸ்.தீபன் கேட்க சரண்யாவும் நடிச்சுட்டதா தகவல்.

‘‘அப்படியா..?’’ன்னு டைரக்டர்கிட்ட கேட்டப்ப, ‘‘ஆமாம்... கதைப்படி சரண்யா ஒரு மாடல். ஓவியக்கல்லூரியில நியூட் மாடலா நிக்கறாங்க. அந்த சீன் முக்கியம்ங்கிறதால அப்படி எடுத்தோம். சென்சார்லயும் பார்த்துட்டு முதல்ல ‘யு/ஏ’ கொடுத்தவங்க, பிறகு டிஸ்கஷன் பண்ணி ‘யு’வே கொடுத்துட்டாங்க...’’ன்னார்.

ஆனா, ‘ஸ்கின் டிரஸ் போட்டுட்டுத்தான் நடிச்சேன்’ங்கிறது சரண்யாவோட ஸ்டேட்மென்ட். ‘‘நிர்வாணமா நடிச்சதாவே எழுதிக்கலாமா..?’’ன்னு ஒரு ரிப்போர்ட்டர் கேட்டப்ப, ‘‘ஆமான்னா இனி எனக்கு யாராவது வாய்ப்பு கொடுப்பாங்களா..?’’ன்னு பாவமா கேட்டுது சரண்ஸ்.
‘‘கொடுப்பாங்க. ஆனா என்ன... படத்துக்குப் படம் இப்படி ஒரு சீன் வச்சுடுவாங்க. தட்ஸ் இட்...’’ன்னேன்.

பத்திரிகையாளர் பாலன் இப்ப ‘டைரக்டர் பாலு மலர்வண்ணன்’. ‘ஒத்த வீடு’ங்கிற படத்தை முடிச்சுட்டார். ஷூட்டிங்ல பிரச்னைகள்னு செய்திகள் வர்ற நேரத்துல அவர் சொன்ன விஷயம் ஆச்சரியமானது. ‘‘இதுவரை சினிமாவில வராத கிராமத்துக் காவல் தெய்வம் வீரனைப் பத்திப் பாடல் வச்சு அதை ‘வில்லிவலம்’ங்கிற கிராமத்துல எடுத்தேன். ஹீரோ திலீப்குமார் சாமியாடிக்கிட்டே பாட்டுக்கு கரகம் தூக்கிட்டு வரணும். பட்ஜெட் படம்ங்கிறதால சின்ன செட்டப்ல துணை நடிகர்களோட போனா, ஒட்டுமொத்த கிராமமே விரதம் இருந்து ஹீரோகூட கரகம் எடுத்து அவங்களே வாத்தியக் கருவிகளை அரேஞ்ச் பண்ணி சீனை பிரமாண்டப்படுத்திட்டாங்க. எம்.எஸ்.பாஸ்கர், வடிவுக்கரசி, ஹீரோயின் ஜானவின்னு எங்களை ஆளுக்கு ஒரு வீடா ஸ்பான்சர் பண்ணி அழைச்சுட்டுப் போய் தங்க வச்சு உபசாரம் பண்ணியது, ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டாக்கூட கிடைக்காத சுகம். அந்தப் பாடலையும் அங்கே பலபேர் ரிங்டோனா வச்சுக்கிட்டாங்க...’’ன்னார்.


‘‘ஆனா உங்க ரிங்டோன் அது இல்லையே..?’’ன்னா சிரிச்சுக்கிட்டே, ‘‘நம்ம பகுத்தறிவு சாமிப் பாட்டை வச்சுக்க இடம் குடுக்கலியே..?’’ன்னார். நடிப்பு கத்துக் கொடுக்கிறதோட சினிமா வாய்ப்பும் வாங்கித் தர்ற ‘அல்கெமி’யோட தயாரிப்புதான் ‘1000 முத்தங்களுடன் தேன்மொழி’ ஹீரோ வெங்கடேஷும், ‘பேச்சியக்கா மருமகன்’ ஹீரோயின் பிரியங்காவும். இப்படி சினிமாவுக்குத் துணையா இருக்கிற அல்கெமி ஒன்பதாவது வருஷ பட்டமளிப்புக்கு வந்த டைரக்டர் ராஜா, தங்களோட வேலையைப் பாதியாக்கும் நிறுவனர் விஜய் விஸ்வநாதனைப் பாராட்டியதோட, ‘‘இன்னும் நிறைய நடிக, நடிகையரை நீங்க தரணும்...’’னார்.
‘‘வேலாயுதம்ங்கிற மெகா படத்தைத் தந்துட்டு கமுக்கமா இருக்கீங்களே...’’ன்னதுக்கு சிரிச்சவர், ‘‘இதுவரை தம்பி ரவிக்கும், விஜய் சாருக்குமான கதைகளைத் தருவிச்சேன். இப்பதான் என் கற்பனையில முழுமையா உருவாக்கிய கதைக்கு டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கேன். ஹீரோவுக்கான கதைங்கிறதை மாத்தி, கதைக்கான ஹீரோவை இதுல தேடப் போறேன்’’னார்.
அதுக்கும் ரவியே செட்டாவாரோ..?