
பின்னணி குரலில் சக்கை போடு போடும் ராஜேந்திரன், சின்னத்திரை சங்கத் தலைவரானபின் 'ரிசல்ட் வந்தபின் எல்லோரும் ஒரே குடும்பம்தான்' என்று கொடுத்தாரே ஒரு 'வாய்ஸ்' & சூப்பரு!
- எம்.சுரேந்தர், திண்டுக்கல்.

பழநிபாரதி படைக்கும் 'காற்றின் கையெழுத்து' அருமை.
- மயிலை கோபி, சென்னை&83..

'வம்ச'த்தின் பேரைக் காப்பாற்றிய அருள்நிதி 'மௌனகுரு' படத்திலும் பேசப்படுவார்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.்.

பிரகாஷ்ராஜின் 'திருப்புமுனை' வெற்றிக்கதை, உலகமே காலுக்கு கீழே வந்து விட்ட மனதைரியத்தை ஏற்படுத்தியது! உண்மையிலேயே இளைஞர்களுக்கு உற்சாக டானிக்.
- ஆனந்தம் எஸ்.நட்ராஜ், காரைக்கால்..

'7ஆம் அறிவு', 'வேலாயுதம்' படங்களின் நிறை குறைகளை படுவேகமாக 'நச்'சென விமர்சித்து அசத்திட்டீங்க!
- பி.ஆர்.சந்திரசேகர்,
வாணியம்பாடி.

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும். அதுதான் சினிமா உலகம். தயாரிப்பாளராக இருந்த ஜெயப்பிரகாஷ், 'அப்பா' நடிகராக அவதாரம் எடுத்துள்ளது பிரமிப்புதான்!
- ந.பேச்சியம்மாள், கடலூர்.

கழுகு மூக்கில் வேர்ப்பது போல எந்தப் பிரபலம் எங்கு திருமணம் செய்து கொண்டாலும் உம்ம கவனத்துக்கு வந்துடுது. நிஷா கோத்தாரியின் திருமணம் மட்டும் விதிவிலக்கா என்ன?
- எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி&1..