உலகின் காஸ்ட்லி தங்க உடை!



10.5 கிலோ தங்கத்தில் (24 காரட்) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடையின் மதிப்பு ரூ.9.5 கோடி!விலை உயர்ந்த, அரிய வகை கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை, உலகின் கனமான தங்க உடை என கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவின் அல்ரோமை சான் கோல்டு நிறவனம் வடிவமைத்துள்ள இந்த ஆடை, ஷார்ஜாவில் நடைபெற்ற 56வது மத்திய கிழக்கு வாட்ச் அண்ட் ஜுவல்லரி கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு பார்வையாளர்களிடம் அப்ளாஸ் பெற்றுள்ளது.

இது வர்த்தக நோக்கத்துக்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக உலகம் முழுவதும் நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் ஆடம்பர நிகழ்வுகளில் காட்சிக்கு வைக்கப்படும்.பார்த்துப் பார்த்து பெருமூச்சு விடலாம்!

காம்ஸ் பாப்பா