இணையத்தைக் கலக்கும் இசைக்குழு!



சமீபத்தில் கொல்கத்தா சர்வதேச டிரம்ஸ் இசைத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் கொல்கத்தா மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்து எல்லாம் பல இசைக்குழுக்கள் கலந்துகொண்டு, தங்களது இசைத் திறமையைக் காட்டின.
இந்நிலையில் உள்ளூரைச் சேர்ந்த ஓர் இசைக்குழுவும் கலந்துகொண்டது. இந்த இசைக்குழுவைச் சேர்ந்த எல்லோருக்குமே பத்து வயதுக்கும் குறைவாகத்தான் இருக்கும். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

பலவிதமான இசைக்கருவிகளை மீட்டி, பெங்காலி நர்சரி பாடலைப் பாடியிருக்கிறது அந்தக் குழு. மட்டுமல்ல, தேவையில்லை என்று குப்பையில் வீசப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, பாடியிருக்கிறது அந்தக் குழு என்பதுதான் இதில் ஸ்பெஷல். 

சஞ்சய் என்பவர் அந்த இசைக்குழுவினருக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.
கொல்கத்தா சர்வதேச டிரம்ஸ் இசைத்திருவிழாவிலேயே தனித்துவமான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது அந்த நர்சரி பாடல். மட்டுமல்ல, அந்தப் பாடலை இணையத்தில் பதிவிட, வைரலாகிவிட்டது அந்த இசைக்குழு.

த.சக்திவேல்