Gas lighting
அமெரிக்க டிக்ஷனரி வெளியீட்டாளரான மெரியம் - வெப்ஸ்டர் ஆண்டுதோறும் அந்த வருடத்துக்கான ‘வார்த்தை’ என்ன என்பதை வெளியிடுவார்கள். அப்படி இந்த ஆண்டு அவர்கள் வெளியிட்ட வார்த்தை ‘Gaslighting’.
 காஸ்லைட்டிங் என்றால் ஒருவரை தொடர்ந்து உளவியல் ரீதியாக மானிப்புலேட் செய்வது. இப்படி செய்வதன் மூலம் அவர்களின் நினைவுகளையும் புரிதலையும் அவர்களைக் கொண்டே கேள்விக்கு உள்ளாக்குவது. அவர்களின் ரியாலிட்டியைக் குழப்பி தடுமாற்றம் கொள்ளச் செய்வது. 1944ல் வெளிவந்த ஒரு ஹாலிவுட் படத்தின் பெயரில் (Gaslight) இருந்தே இந்த வார்த்தை உருவானது. அந்தப் படத்தில் வரும் கணவன், தன் மனைவியை உளவியல் ரீதியாக பேதலிக்கச் செய்வான். அந்த பழைய வார்த்தை இந்த வருடம் அதிகமுறை இணையத்தில் தேடப்பட்டதற்கு காரணம், தனிப்பட்ட முறையில் மனிதர்களுக்கு இடையே புழங்கி வந்த இந்த வார்த்தையின் பயன்பாடு இப்போது சமூக அளவில் விரிந்திருப்பதுதான் என்கிறார்கள்.
அதாவது, சமூக அளவில் பலரை மானிப்புலேட் செய்வது. ஒரு விஷயத்தை தொடர்ந்து ஆணித்தரமாக மறுப்பதன் மூலம் மக்களின் மனதில் அவர்களின் புரிதல் குறித்த சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது.
காமு
|