கேள்வியை நான் கேட்கட்டுமா... இல்லை நீ கேட்கிறாயா..?



விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி ஜாலி குஸ்தி!

‘‘கேரள மண்ணில் புரண்டு செய்யும் பழமையான குஸ்திதான் ‘கட்டா குஸ்தி’. அந்தப் பழங்கால குஸ்திக்கு இந்தப் படத்திலே என்ன வேலை... ஏன் ஹீரோ அதைக் கையிலே எடுக்கறார்..? இதுதான் கதைக்களம்...’’ ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார் விஷ்ணு விஷால்.

இயக்குநர் செல்ல அய்யாவு பற்றி சொல்லுங்க..?

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துக்கு அவர்தான் ரைட்டர். அந்த படத்திலேயே அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. அடுத்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ படம் செய்தோம்.அப்பவே இந்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஒன்லைனை எனக்கு சொல்லிட்டாரு. அசந்துட்டேன். ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ முடிஞ்சதுமே இந்தப் படத்தை ஆரம்பிக்கணும்னு நினைச்சோம். இடைல கொரோனா... ஊரடங்குனு போனதுனால லேட் ஆகிடுச்சு. அந்த கேப்புல வேற ஒரு தயாரிப்பில் நிறைய படங்கள் கொடுக்க வேண்டியதாகிடுச்சு.  
தயாரிப்பு, ரிலீஸ்ல உங்களோடு சேர்ந்து மூணு நாயகர்கள் கைகோர்த்திருக்காங்க... எப்படி இந்த காம்போ சாத்தியமாச்சு?

நானும் தெலுங்கு மாஸ் ஹீரோ ரவி தேஜா சாரும் நல்ல நண்பர்கள். அப்பப்ப என் படங்கள், வேலைகளை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிட்டே இருப்பார். அப்படித்தான் ‘எஃப்.ஐ.ஆர்’ முடிஞ்ச சமயத்துல ‘அடுத்து என்ன செய்யப் போறீங்க’ன்னு கேட்டார். ‘கட்டா குஸ்தி’ படம் அப்ப ஷூட்ல இருந்துச்சு. கதை என்னனு கேட்டார். சொன்னேன். உடனே ‘தெலுங்குல நான் தயாரிக்கிறேன்’னு முன்வாந்தார். அப்படித்தான் ரவி தேஜா சாருடைய ஆர்.டி டீம் ஒர்க்ஸ் படத்துல இணைஞ்சது.

அடுத்து என்னுடைய படங்கள்னா உதய் அண்ணா ரிலீஸ் நிச்சயமா இருக்கும். முன்னாடி படங்கள் பார்த்துட்டு ரிலீசுக்கு ஓகே சொல்வார். ஆனா, இந்தப் படத்தை பார்க்காமலேயே ரிலீஸ் செய்ய முன் வந்தார். உதய் அண்ணனுக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். இந்த ட்ரிபிள் ஹீரோ காம்போதான் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுபோய் ருக்குனு நினைக்கறேன்.
இயக்குநர் செல்ல அய்யாவு மேல அப்படி என்ன நம்பிக்கை?

நல்ல காமெடியான மனிதர். நல்ல ரைட்டரும் கூட. ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ தயாரிப்பாளராகவும் நல்ல வருமானத்தை எனக்குக் கொடுத்த படம். விஷ்ணு விஷால் பேசிக் கொண்டிருக்கும்போதே ‘ஹாய்... ஹாய்...’ என இனிமையான ஒரு குரல் பின்னணியில் கேட்டது. அட நம்ம பூங்குழலி... என படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கும் ஹாய் சொன்னோம்.

‘‘விஷ்ணுகிட்ட கேட்க என்கிட்டேயும் நிறைய கேள்விகள் இருக்கு... கேட்கலாமா?’’ என ஐஸ்வர்யா லட்சுமி புன்னகைக்க, ‘‘எனக்கும் உங்ககிட்ட கேட்க கேள்விகள் இருக்கு...’’ என விஷ்ணு விஷாலும் கண்சிமிட்டினார். நமக்கு வேலை மிச்சம் என ஓரமாக அமர்ந்துவிட்டோம்! இருவரும் பரஸ்பரம் பேட்டி எடுக்கத் தொடங்கினர்!
விஷ்ணு விஷால்: இந்தப் படத்துல நீங்கதானே ஹீரோயின்..? ‘கட்டா குஸ்தி’னா என்னனு சொல்லுங்க பார்க்கலாம்?

ஐஸ்வர்ய லட்சுமி: தெரியுமே நம்ம படம்... விஷ்ணு விஷால்: அடேங்கப்பா! பிரில்லியண்ட்! இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?  

ஐஸ்வர்யா லட்சுமி: இது கேரளாவுல விளையாடற ஒரு பழங்கால குஸ்தி. மண்ணுல ஆடுவாங்க. கரெக்டா? அப்புறம்... படத்துல நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய குஸ்தி இருக்கு!
விஷ்ணு விஷால்: யெஸ். உண்மைலயே சரியான ஆன்சர். என் கேரக்டர் பேரு வீரா. பொண்டாட்டின்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்... நான் சொல்றத எல்லாம் கேட்கணும்னு நினைக்கற ஒரு கிராமத்துப் பையன். அப்படிப்பட்டவன் ஏன் ‘கட்டா குஸ்தி’ விளையாட்டை கைல எடுக்கறான் என்பதுதான் என் கேரக்டர்.

ரைட்... உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க...
ஐஸ்வர்யா லட்சுமி: என்ன தெரியாத மாதிரி கேட்கறீங்க! என் பெயர் கீர்த்தி. பாலக்காட்டு பொண்ணு. இந்தப் படத்துல நடிக்க நிறையவே எனக்கு வாய்ப்பு இருந்துச்சு. ஆணாதிக்கக் கணவனுக்கு சவாலா நிற்கற மனைவி கேரக்டர்... மை காட்! என்ன நீங்களே கேட்டுட்டு இருக்கீங்க..? நான் கேட்கறேன்... வீரா கேரக்டருக்கும் விஷ்ணு விஷால் கேரக்டருக்கும் இந்த ‘வி வி தவிர’ வேற என்னென்ன சம்பந்தம் இருக்கு?

விஷ்ணு விஷால்: என் வாழ்க்கைல அம்மா, சிஸ்டர்ஸ், தோழி, என் மனைவி, என் பையனுடைய அம்மா, என் கூட வேலை செய்த பெண்கள்... இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுடைய பங்கு நிறையவே இருந்திருக்கு. நிச்சயமா வீரா கேரக்டருக்கும் விஷ்ணு விஷால் கேரக்டருக்கும் சம்பந்தமே கிடையாது. அதனாலதான் போஸ்டர்ல கூட உங்களை உட்கார வெச்சு நான் கைகட்டி உங்க பக்கத்துல நிற்கிற மாதிரி ஒரு போஸ்டர் டிசைன் செய்திருக்கேன். வீரா மாதிரி ஒரு ஆண் இருக்கக்கூடாது என்பதுதான் என் பதில்... ரைட். இப்ப என் டர்ன். இந்தப் படத்தில் மறக்க முடியாத நல்ல மெமரி எது... மறக்கணும்னு நினைக்கிற மெமரி எது..?

ஐஸ்வர்யா லட்சுமி: படம் முழுக்கவே ரொம்ப நல்ல மெமரி. சூப்பர் டீம்.  மறக்கணும்னு நினைக்கிறது ஷூட் முடிஞ்ச நாள்தான். அதுக்குள்ள ஷூட் முடிஞ்சிடுச்சானு ஒரு வருத்தம் இருந்தது. .. உங்களால மறக்க முடியாத நல்ல, கெட்ட மெமரீஸ் எது?  

விஷ்ணு விஷால்: கூட நடிப்பவரே தயாரிப்

பாளர்னு வரும்போது ஒரு சில ஒர்க்கர்ஸ் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்வாங்க. அதுதான் கொஞ்சம் கெட்ட மெமரி மாதிரி இருந்துச்சு. நல்ல மெமரி... இந்தப் படம் உருவானதே ஒரு பெரிய நல்ல மெமரிதான்! ஒர்க்கர்னு வரும்போது இப்ப என்கிட்ட பேசிட்டு இருக்கற உங்களைக்கூட டிஸ்டர்ப்னு சொல்வேன்!

ஐஸ்வர்யா லட்சுமி: அப்ப நான் சண்டை போட்டேன்னு சொல்றீங்களா! ஹலோ... (எழுந்து சண்டைக்கு தயாரானார்)
விஷ்ணு விஷால்: அட சும்மா ஜாலிக்கு வம்பிழுத்தேன்! ஒர்கர்ஸே காமெடியான டிஸ்டர்ப்தான். சும்மா ஒரு உலு உலாய்க்கு!  
ஐஸ்வர்யா லட்சுமி: படத்தின் டெக்னீஷியன்கள் பத்தி சொல்லுங்க..?  

விஷ்ணு விஷால்: ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக். பாட்டெல்லாம் செமையா இருக்கு. ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன். கலர்ஃபுல் படமா கொடுத்திருக்கார். பிரசன்னா கே, எடிட்டிங். ஷார்ப், ஸ்வீட் கட் படத்துக்கு பெரிய ப்ளஸ். ரெட் ஜெயிண்ட் ரிலீஸ். ரவி தேஜா சாரும் நானும் தயாரிச்சிருக்கோம்.     

ஐஸ்வர்யா லட்சுமி: ஒரு தயாரிப்பாளரா உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன... பிடிக்காத விஷயம் என்ன..?

விஷ்ணு விஷால்: .ஒரு தயாரிப்பாளரா நினைச்ச மாதிரி படங்கள் கொடுக்க முடியுது. நினைச்ச மாதிரி படத்தை ப்ரொமோட் பண்ண முடியுது. பை த வே... நீங்களும் ஒரு தயாரிப்பாளர்தானே? நீங்க சொல்லுங்க... எது பிடிச்ச விஷயம்... பிடிக்காத விஷயம்? அடுத்து... இந்தக் கேள்வி கேட்கறது எனக்கு சரியா படலை. இந்தக் கேள்வியே தேவையில்லைனுதான் தோணுது. ஆனாலும் கேட்கறேன்... தயாரிப்பாளராவும் சரி ஹீரோயினாவும் சரி நிறைய பெண்கள் சார்ந்த படங்களில் நடிக்கிறீங்களே..?

ஐஸ்வர்யா லட்சுமி: முதல் கொஸ்டினுக்கு பதில் சொல்றேன். தயாரிப்பாளரா பணத்தை கொடுத்துட்டு ஒதுங்கிடுவேன். போட்ட காசு வருமானு மட்டும்தான் பார்ப்பேன். மத்தபடி என்ன வேலை நடக்குதுனு உங்கள மாதிரி இறங்கி எல்லாம் நான் பார்க்கறதே கிடையாது! ஸோ, தயாரிப்பு பெரிய தலைவலியா தெரியல. அடுத்து... இரண்டாவது கேள்வி கேட்க ஏன் தயங்கினீங்க... ஏன் அந்தக் கேள்வி சரியில்லைன்னு நினைச்சீங்க?

விஷ்ணு விஷால்: ஒரு ஹீரோ தயாரிச்சு நடிக்கும்போது ‘நீங்க ஆண்கள் சார்ந்த படங்களில் நடிக்கிறீங்களே’னு யாரும் கேட்கறதில்லை. ஆனா, ஒரு பொண்ணு தயாரிக்கும்போது மட்டும் ஏன் இந்தக் கேள்வி வரணும்..? அதனாலதான் இந்த வினா தேவையில்லைனு தோணுச்சு. ஆனா, பலரும் கேட்கறாங்க... நான் உங்ககிட்டையே கேட்டுட்டேன்... ஐஸ்வர்யா லட்சுமி: நான் இந்த கேள்வியை அப்படிப் பார்க்கல. கேள்வி கேட்டால்தான், பேசினாதான் நிறைய விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஸோ, இந்தக் கேள்வியை பாஸிட்டிவாதான் பாக்கறேன். அதனால இந்த கேள்வி எனக்கு பிடிச்சிருக்கு. நான் அப்படித் தேர்வு செய்து நடிக்கணும்னு நடிக்கறதில்ல, அதுவா அமையுது. இதுதான் ஆன்சர்.

சரி... விஷ்ணு விஷால் தயாரிப்புல எப்ப மத்த ஹீரோக்கள் நடிக்க போறாங்க? விஜய் சார், அஜித் சார்... இந்த டேக் லைன்லாம் எப்ப..?

விஷ்ணு விஷால்: மை காட்! விஜய் சார், அஜித் சார் வச்சுட்டு விஷ்ணு விஷால் தயாரிப்பா..? யோசிக்க கூட முடியல. அந்த அளவுக்கு எல்லாம் நான் இன்னும் வளரல. இப்போதைக்கு என் தம்பி ருத்ராவை லான்ச் பண்ணப் போறேன். இத்தனை படங்களில் எனக்கு என்ன கிடைச்சதோ அதை ஒரே படத்துல அவருக்கு கொடுக்க நினைக்கறேன். இது இல்லாம அடுத்ததா ‘ராட்சசன்’ டீம் திரும்ப ஒண்ணு சேர போறோம். அந்தப் படமும் வித்தியாசமா தனித்துவமா இருக்கும். ‘மோகன்தாஸ்’ மாஸா ரெடியாகிடுச்சு. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு வரும்.  

ஓகே... கேள்விக்கு வரலாம். நீங்கதான் இந்தப் படத்துக்கு முதல் ஆடியன்ஸ். ஏன் இந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கணும்னு நினைக்கறீங்க..?
ஐஸ்வர்யா லட்சுமி: குடும்பத்துடன் ஜாலியா ஒரு படம்... குறிப்பா ஒரு சின்ன கருத்தும் இருக்கு. கொடுத்த காசுக்கு செம படம்!

ஷாலினி நியூட்டன்