Data Corner



*இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 50% இறக்குமதியை நம்பியுள்ளது. மீதமுள்ள 50% இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக சர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

*செல்போனை பயன்படுத்துபவர்கள், நாளொன்றுக்கு அதை சராசரியாக 150 முறையாவது பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*உலகில் ஆண்டுதோறும் சுமார் 61 மில்லியன் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

*ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*உலகில் உற்பத்தியாகும் சாக்லேட்களில் சுமார் 50%ஐ அமெரிக்கர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

*உலகின் முதல் செல்போனின் எடை 1.1 கிலோவாக இருந்தது.

*இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 62 லட்சம் டன் தேயிலை பயன்படுத்தப்படுகிறது.

*புலிகளின் குணாதிசயத்தில் 95% பூனைகள் கொண்டுள்ளன. பூனைகளால் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை சுழற்ற முடியும்.

*புனிதத் தலமாகக் கருதப்படும் பொற்கோயிலுக்கு, பிற மதங்களைச் சேர்ந்த சுமார் 35% பேர் ஆண்டுதோறும் வருகின்றனர்.

*நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் செல்போன்களை பயன்படுத்துபவர்கள், மன அழுத்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

சுடர்க்கொடி