அறிமுகம் - லண்டன் யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்தவர் இன்று ஹீரோயின்!



பெயர்?

நீலம் கௌராணி, சினிமா என்ட்ரிக்குப் பின்னர் நந்தினி ராய்.

உங்களைப் பற்றி?

நான் ஹைதராபாத் பொண்ணு. லண்டன் யுனிவர்சிட்டியில் எம்பிஏ படிச்சிருக்கேன். அப்பா, அம்மா, பிரதர், அண்ணி, அண்ணன் கிட்ஸ்னு ஹேப்பி ஃபேமிலி.
அப்பா மனோஜ்குமார் பிஸினஸ் மேன். வாட்டர் பிளான்ட்ஸ், பெட்ரோல் பங்க்ஸ் பிஸினஸ் செய்யறார். அம்மா ரேகா ஹவுஸ் ஒயிஃப், செராமிக்ஸ் கிஃப்ட்ஸ் எல்லாம் பண்ணுவாங்க.
எனக்கு, மறைந்த சௌந்தர்யா மேம்தான் இன்ஸ்பிரேஷன். அவங்க கூட ஸ்கூல் டேஸ்ல ஒரு விளம்பரத்திலே நடிக்கற வாய்ப்பு கிடைச்சது. அங்கேதான் ஆரம்பிச்சது நடிப்பு ஆசை. ஷூட்டிங்ல அவங்களை ஒரு பெரிய கூட்டம் எப்பவும் சூழ்ந்து நிற்கும். அதேமாதிரி பிரபலம் ஆகணும்னு விருப்பம்.

முதல் பட வாய்ப்பு?

நான் மிஸ் ஆந்திரப்பிரதேஷ் மற்றும் மிஸ் ஹைதராபாத் வெற்றியாளர். தொடர்ந்து நிறைய ஃபேஷன் வாக், சர்வதேச ரேம்ப் வாக். அதன்மூலம் தெலுங்கில் முதல் படம் ‘மாயா’. ஹர்ஷவர்தன் ஹீரோவாக நடிச்சார்.

தமிழ் சினிமா?
முதல் படம் ‘கிரகணம்’. ‘பியார் பிரேமா காதல்’ பட டைரக்டர் படம். நிறைய கேர்ள்ஸ் வந்திருந்தாங்க. அதிலே நான் ஒருத்தியா தேர்வானேன். தெலுங்கிலே சுதீர் பாபு (மகேஷ் பாபு மைத்துனர்) கூட ‘மொசகல்லக்கு மொசகாடு’ படத்திலே நடிச்சிட்டிருந்த நேரம்தான் என்னை ஆடிஷன் வரச் சொன்னாங்க. இப்போ
இன்னும் நிறைய படங்கள் வருது.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்?

கோபமோ, டென்ஷனோ எனக்கு ஒரே ரிலாக்ஸ் ‘மாரி ஸ்வேக்... ஜிந்தா ஹே ஜிந்தா...’ பாட்டுதான்.
கிரஷ்?

விஜய் சேதுபதி சார். அவர் கூட ஒரு நிமிஷம் ஸ்கிரீன்ல நிற்க சான்ஸ் கிடைக்குமானு இருக்கு. அவரை அவ்ளோ பிடிக்கும். தளபதி விஜய் சார் படம்னா முதல் ஆளா நிற்பேன். ஆனால் லவ், கிரஷ், ஃபேன்டஸி எல்லாமே விஜய் சேதுபதி சார்தான்.

டிரீம் ரோல்?

எல்லா கேரக்டரும் நடிக்கணும். குறிப்பா தமிழ் சினிமாவிலே நிறைய படங்கள் நடிக்கணும். தமிழ் சினிமாதான் உள்ளதை உள்ளபடி காட்டுறாங்க.
ரியாலிஸ்டிக் படங்கள் இங்கேதான் எடுக்கறாங்க.
 
உடைகள் & ஸ்டைலிங்: விக்கி கபூர்
மேக்கப் & ஹேர் ஸ்டைல்: ஜெயந்தி
நகைகள்: ஃபைன் ஷைன் ஜுவல்ஸ்
ஸ்பெஷல் ஸ்பான்சர்: எஸ்.எஸ்.பிரியாணி            

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்