Data Corner



*75% தமிழகம் மட்டுமே பங்களிப்பு செய்கிறது - நாட்டின் மொத்த தீப்பெட்டி தொழிற்சாலைகளில்.

*4,000 பேர், 198 நாடுகளில் காசநோயால் தினமும் இறக்கின்றனர்; 28,000 பேர் புதிதாக இதன் பிடியில் சிக்குகின்றனர். உலக காசநோயாளி களில் 30% பேர் இந்தியர்கள்.

*இந்தியாவின் மிக சமீபத்திய வறுமைக்கோடு அளவு, கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ.972 ஆகவும்; நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ.1,407 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

*8 கோடி பாக்டீரியாக்கள், லிப்லாக் முத்தத்தின்போது வாய் மற்றும் உமிழ்நீர் வழியே பரிமாறப்படுவதாக அறிவியல் கூறுகிறது. இதோடு 9 மிகி நீர்; .7 மிகி புரதம்; .18 மிகி கரிம சேர்மங்கள்; .71 மிகி வெவ்வேறு கொழுப்புகள்; .45 மிகி உப்பு உள்ளிட்டவை பரிமாறிக் கொள்ளப்படுவதால் முத்தங்கள் கலோரிகளை எரிக்க உதவுகின்றன.

*உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் 2ம் இடத்திலும், ‘ஹெச்ஐவி’ தொற்றாளர்கள் பட்டியலில் 3ம் இடத்திலும், புகைபிடிப்போர் அதிகம் உள்ள நாடுகளில் 2ம் இடத்திலும் இந்தியா உள்ளது.

*20 ஆண்டு களில் கேரள சட்டசபையில் 6%க்கும் மேல் பெண் எம்எல்ஏக்கள் இருந்ததில்லை.