ஜோ பைடனின் துணைச் செயலாளராக திருநங்கை!கடந்த ஜனவரி 20ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார்... என்று இச்செய்தியை ஆரம்பித்தால் அதுதான் தெரியுமே என மண்டையில் குட்டுவீர்கள்!எனவே நேரடியாக செய்திக்கு சென்றுவிடலாம்.அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

யெஸ். அமெரிக்காவின் சுகாதாரத்துறை துணைச் செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார். மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரேச்சல், முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் சுகாதாரத் துறை செயலாளராகப் பதவி வகித்தவர்.
ஜோ பைடனின் ஆலோசகராக ரேச்சல் நியமிக்கப்பட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்களில் 48 பேர் ரேச்சலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஜான்சி