மல்லுவுட் Queen



குஷியில் குளுகுளுக்கிறார் மஞ்சிமா மோகன். இந்த க்ளாமர் இண்டஸ்ட்ரியில் ஹோம்லியாக சிறகடிக்கும் சிட்டு. சமீபத்தில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் கிடைத்த பாராட்டுக்களுக்கான குஷி அது. இங்கே அடுத்தும் பரபரக்க லிட்டில் லிஸ்ட் வைத்திருக்கிறார். இப்போது விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ஐ தொடர்ந்து பாலிவுட் ‘குயின்’ படத்தின் மலையாள ரீமேக்கான ‘ஸம் ஸம்’மிலும் மஞ்சு பிசி.

அதென்ன மஞ்சிமா..?
பியூட்டிஃபுல்னு அர்த்தமாம். எனக்கு இந்த பெயர் சூட்டினதே, சுவாரஸியமான ஃப்ளாஷ்பேக். நான் பிறந்ததும் வீட்ல நிறைய நேம்ஸ் செலக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. அதுல ஒண்ணுதான் மஞ்சிமா. என்னோட தாத்தாதான் வேற நேம் ஆப்ஷன் எதுவும் போகாமல் தடுத்து, இந்த பெயரை சூட்ட வைச்சாங்க. இது ரொம்ப யுனிக்கான பெயராகவும் ஆகிடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது, கிளாஸ்ல, அட்டென்டன்ஸ்ல எல்லாம் இந்த பெயர்ல நான் ஒருத்தி மட்டும்தான் இருந்தேன். அதனாலேயே ஸ்கூல், காலேஜ்ல எல்லாருக்குமே என்னைத் தெரியும்.

சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டாகவும் அசத்தியிருக்கீங்க போல..?
யெஸ். எங்க அப்பா ஒளிப்பதிவாளர். நான் பேபியா இருக்கும்போது அப்பாவை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட் போவேன். ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பை பார்க்கப் போன போது அங்கே ஷாலினி சேச்சி நடிச்சிட்டு இருந்தாங்க. அந்த படத்துல அவங்களோட சின்ன வயசு கேரக்டர்ல நடிக்க ஒரு பேபி தேவைப்பட்டுச்சு. அவுட்டோர் ஷூட்னால, சட்டுனு வேற யாரும் கிடைக்கல. அதனால அப்பாகிட்ட என்னை நடிக்க கேட்டாங்க. அந்த படத்துல அப்பாவும் ஒர்க் பண்ணினதால, சிட்சுவேஷன் புரிஞ்சு, ஓகே சொன்னாங்க.

அதன்பிறகு நிறைய ஆஃபர்ஸ் வந்துச்சு. சைல்ட் ஆர்ட்டிஸ்டா ட்ராவல் பண்ணினேன்.அப்புறம், நாலாவது கிரேட் படிக்கும் போது, அப்பா கூப்பிட்டு ‘இனி நீ படிப்புல கவனம் செலுத்துடா’னு சொல்லிட்டார். அன்னில இருந்து டிகிரி கம்ளீட் பண்ற வரை படிப்பு படிப்பு தான். அதன்பிறகே மறுபடியும்
ஆக்ட்டிங் வந்தேன். நடிகையானதும் ‘எப்படி நடிக்கணும்’னு எல்லாம் அப்பா எனக்கு அட்வைஸ் பண்ணினதில்ல. அப்பாவுக்கு இந்த இண்டஸ்ட்ரீ பத்தி நல்லா தெரியும் என்பதால எப்படி நடந்துக்கணும்னு சில விஷயங்கள் சொன்னாங்க.

ஆனாலும் ‘அச்சம் என்பது மடமையடா’ முதல்நாள் ஷூட்டிங்கின் போது கேமராவை பார்த்ததும் கொஞ்சம் படபடப்பும், உதறலும் இருந்தது மறக்க முடியாத அனுபவம். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் பண்ணியிருக்கீங்க..?அதனால என்ன? இப்ப நான் நடிக்கிற ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்துல கூட ரெபா, ரைசா எல்லாம் இருக்காங்க.

ஒரு கதையில கமிட் ஆகும் போது அதுல ரெண்டு ஹீரோயினா, மூணு ஹீரோயினானு பார்க்கறதில்ல. அப்படி இருந்தாலும் எனக்கு எத்தனை சீன்ஸ்... என்னோட நடிக்கற இன்னொருத்தருக்கு எத்தனை சீன்ஸ் அதிகமா இருக்குனும் பார்க்க மாட்டேன். கதையில எந்த கேரக்டருக்கு எவ்ளோ சீன்ஸ் வைக்கணும்னு அதோட டைரக்டருக்கு தெரியும். நான் கமிட் ஆகற படத்துல ஒரு விஷயம்தான் கவனிப்பேன். அந்தப் படத்துல என்னோட கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு... எந்தளவுக்கு ரீச் இருக்கும்னுதான் பார்ப்பேன்.

தமிழ்ல நிறைய படங்கள் பிடிக்கும். நயன்தாராவோட ‘கோலமாவு கோகிலா’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘க/பெ ரணசிங்கம்’, ஜோதிகா மேமின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ படங்கள் ரொம்ப பிடிக்கும். நம்ம லைஃப் டைம் கேரியர்ல ஒரு சில படங்கள்தான் இப்படி நமக்கு கிடைக்கும். அப்படி ஒரு படம் பண்ணணும்னு ஆசை. அப்படி ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வந்தால், ஒரு கை பார்க்க ரெடியா இருக்கேன்.
எப்படி வந்திருக்கு ‘குயின்’ மலையாள ரீமேக்..?

ஒரிஜினல் ‘குயின்’, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படம் ரிலீஸ் டைம்ல நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். அந்த படத்துக்கு முன்னாடி கங்கணாவும் நார்மல் ஆக்ட்ரஸாதான் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பெரிய நேமை கிரியேட் பண்ணினது ‘குயின்’தான்.

ஒரிஜனலை ரீமேக் பண்ணும் போது, அந்த படத்தையும் ரீமேக்கையும் ஒப்பிடத்தான் செய்வாங்க. அது தவிர்க்க முடியாதது. கங்கணா ரோலை யாராலுமே அவரை போல பண்ண முடியாது. ரீமேக்கை விட, ஃப்ரெஷ்ஷான ஸ்கிரிப்ட்ல நடிக்கறதுலதான் எனக்கும்
ஆர்வம். ஆனா, ‘குயின்’ ரொம்ப ரொம்ப பிடிச்ச படம்னால ‘ஸம் ஸம்’ல நடிச்சேன். ரிலீஸ் லிஸ்ட்ல அந்தப் படமும் இருக்கு.

மை.பாரதிராஜா